இனிப்பானதொன்றை
கசப்பாக்கினான்
இல்லாத ஒன்றுக்கு
இருப்பதின் கருவறுத்து
கல்லாத கயவன் போலே
கண்ணிருந்தும் குருடானான்
உள்ளுக்குள் வெறும்
பாலை மணல்
ஊருக்கு மட்டும்
பலமுதிர்ச்சோலையாய்
சொல்லுக்குச்சொல்
தூயோர் சொல் மறைத்து
சுயநலப்பகைக்கு
சூத்திரம் போதித்தான்
Showing posts with label ஞானம். Show all posts
Showing posts with label ஞானம். Show all posts
Tuesday, January 20, 2015
Sunday, December 29, 2013
Sunday, February 10, 2013
ஞானம் வேண்டும்
எதுகை மோனை
எதுவும் வேண்டாம்
யாப்பின் கோப்பும் வேண்டாம்
யாம் வேண்டுவது பண்டம்
பண்டம் கவிதையாகவோ
பண்டம் கருத்தாகவோ
பண்டம் கலையாகவோ இருக்கட்டும்
பண்டம் மூளையில் பதியட்டும்
புரியாத மொழி
அறியாத நடை
விளங்காத படைப்பு
இருக்காது மனதில்
மனிதனை திருத்த அவன் மொழி நாடு
நலிவினைப் போக்க நல் வழி நாடு
களிப்பினை வாங்க எக் கடை உண்டு
களிப்பினை போக்க ஞானம் உண்டு
எதுவும் வேண்டாம்
யாப்பின் கோப்பும் வேண்டாம்
யாம் வேண்டுவது பண்டம்
பண்டம் கவிதையாகவோ
பண்டம் கருத்தாகவோ
பண்டம் கலையாகவோ இருக்கட்டும்
பண்டம் மூளையில் பதியட்டும்
புரியாத மொழி
அறியாத நடை
விளங்காத படைப்பு
இருக்காது மனதில்
மனிதனை திருத்த அவன் மொழி நாடு
நலிவினைப் போக்க நல் வழி நாடு
களிப்பினை வாங்க எக் கடை உண்டு
களிப்பினை போக்க ஞானம் உண்டு
Monday, December 10, 2012
"கேட்கிறேன், சொல்லுங்கள் !"
கல் , மண், தீ, நீர், காற்றெனப் புவியோர்
சொல்பொருள் அனைத்தும் தோன்றிய தெங்ஙகனம்?
வானும் மதியும் மண்ணிடைக் கடலும்
தானே இயங்கும் தத்துவம் யார் செயல் ?
உயிரோடு கண்வாய் செவியென விரிந்து
பத்தாம் மாதம் பளிங்குபோல் வெளிவரும்
விந்தை யார் செயல் ? விளக்கம் எப்படி ?
கோடை வசந்தம் குளிர்பனி மழை
தோன்றுவ தெங்ஙகனம்? சுழற்றுவ தெவ்விதி ?
விஞ்ஞா னத்தால் விபரமறிந்து
அ ஞ்ஞா னத்தை அகற்ற மாட்டீரோ ?
சந்திர மண்டலம் தழுவிய ஞானம்
சாவைத் தடுக்க சக்தி இல்லாததேன் ?
"கேட்கிறேன், சொல்லுங்கள் !"
படித்த பாட்டு நினைவில் நின்றது. கவிதை இயற்றியவர்... ? !
புவனங்களின் படைப்பு
எண்ணிலா கண்டம் இறைவன் படைத்தான் ;
விண்ணில் விளக்கம் அவனே அறிவான் ;
தண்ணீர் காற்று மண்ணோடு நெருப்பும்
எண்ணியே இறைவன் படித்தவை யாகும்
-----------------------------------
கல்லும் மலையும் கதிரவன் மதியும்
புல்லும் புகழும் நீர்வாழ் இனமும்
பல்வகைப் பறவை வல்லியல் விலங்கும்
யெல்லாம் படைத்த இறைவனாம் அல்லாஹ்
- பா . கமலக் கண்ணன்
திருமறைத் தேன் துளிகள்

Monday, November 26, 2012
தீன் பெறுதல் ஞானம் பெறுதல்
ஞானத்தின் திறவுகோல் நாயகம்
தீனைப் பெற்றோர் வெற்றிப் பெற்றோர்
தாவிச் சென்று தீனைப் பெற்று
தீனை விட்டு தானும் கெட்டார்
தீனில் தேடல் வழி தேடல்
இல்லாததை தீனில் புகுத்தி
தீனில் சொல்லாததை மனதில் நிறுத்தி
தீனையும் கெடுத்தார் தானும் கெட்டார்
தீனில் ஆய்வு கொள் அறிவு பெற்று இறைவனைத் தேடு
தீனில் வீண் விவாதம் செய்து தானும் கெட்டு மற்றவரையும் கெடுக்காதே
தீனில் வாதம் செய்து போட்டி போட்டு பெருமை கொள்ளாதே
தீனின் வாழ்வில் போட்டி இல்லை பொறாமை இல்லை
தீனில் உயர்ந்தோரில்லை தாழ்ந்தோரில்லை
தீனின் வாழ்வில் நிம்மதி உண்டு நிறைவு உண்டு மகிழ்வு உண்டு
Wednesday, August 29, 2012
அரபி தெரிந்தால்தான் குர்ஆனை விளங்கமுடியும்
அரபி தெரிந்தால்தான் குர்ஆனை விளங்கமுடியும்
இறைவன் நம்மைக் குர்-ஆனை ஆராயச் சொன்னான். அதில் கேள்விகள் கேட்கச் சொன்னான். ஆனால் நமக்குத் தெரியாவிட்டால் அரபு கற்றவர்களிடம் விளக்கம் கேட்கச் சொன்னான் என்று ஓர் நண்பர் கூறினார்.
அதற்கு ஆதாரமாக கீழே உள்ள இறை வசனத்தையும் அனுப்பி வைத்தார்.
And We sent not (as Our Messengers) before you (O Muhammad ) any but men, whom We inspired, (to preach and invite mankind to believe in the Oneness of Allah). So ask of those who know the Scripture [learned men of the Taurat (Torah) and the Injeel (Gospel)], if you know not. (16:43)
சரியான மொழிபெயர்ப்பு கிடைத்துவிட்டால் அரபி தெரிந்தவர்களும் அரபி தெரியாதவர்களும் ஒன்றுதான் என்பது என் கருத்து.
ஏனெனில் வசனங்களின் பொருளை விளங்கிக் கொள்ளத்தான் ஆய்ந்தறியும் அறிவு தேவையே தவிர வெறுமனே மொழிபெயர்ப்பு செய்வதற்கு அல்ல.
மொழிபெயர்க்க அரபி தெரிந்திருக்க வேண்டும்தான். ஆனால் விளக்கம் சொல்ல அரபி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இதனை விளக்கும் வகையில், நண்பருக்கு நான் அளித்த பதில் கீழே உள்ளது. இனி உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள், வளரலாம்!
*
16-43 ஐ அனுப்பித் தந்தமைக்கு நன்றி. ஆனால் அதே வசனத்திற்கு மற்றவர்களின் மொழி பெயர்ப்புகளையும் பாருங்கள்.
http://www.tamililquran.com/qurandisp.php?start=16#16:43
16:43. (நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர்; ஆகவே (அவர்களை நோக்கி) “நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்” (என்று கூறுவீராக).
16:44. தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.
இதன்படி முந்தைய வேதத்தில் ஞானம் பெற்றோரிடம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் இருக்கிறதல்லவா?
இந்தத் தமிழ் மொழியாக்கத்தோடு நான் நின்றுவிடவில்லை. மேலும் தேடினேன்.

Subscribe to:
Posts (Atom)