Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Friday, January 30, 2015

மீண்டும் மார்கழியில் !

மாதங்கள் ஒவ்வொன்றும்
மாற்றம் நிறைந்த தன்மை - அதில்
மார்கழி மாதமோ - மானிடர்
மகிழ்வுக்குச் செம்மை

மார்கழி என்றாலே மனநிறைவு
மலரோடு கொஞ்சிவிளையாடும் மாதமிது
பாரெங்கும் படர்ந்துகிடக்கும் பனிப்பொழிவு
பரிவோடு குளிர்காற்றின் பகல் வரவு

Tuesday, November 19, 2013

ஆயூள் வரை தொடர்கதை தொடரும்

ஒன்றுமில்லை ஆனால் எல்லாம் உண்டு செயற்கையாக
ஒன்று இருக்கிறது உயர்வாக பூமியின் அடியில் இயற்கையாக
தோண்டுமிடமெல்லாம் பெற்றோல் வளம்
தோண்டியெடுத்து கிடைத்த வளத்தை விரயமாக செலவு செய்யும் இடம் அமெரிக்கா
தோண்டும் தொழிலாளி துண்டோடு தன் நாடு திரும்புவான்

('சோடா விற்றால் பாட்டல் மிச்சம்
சிகரெட் விற்றால் சிகரட் வைக்கும் டப்பா  மிச்சம்' அக்கால மொழி
அரபு நாடு போன தொழிலாளியின் நிலை இப்பொழுது)

மண் வெளிநாட்டிலிருந்து வரும்
செடிகள் வெளிநாட்டிலிருந்து வரும்
தண்ணீர் கடல் நீரை மாற்றப்பட்டு வரும்
மேகங்கள் இருக்கும் மழை பெய்யாது
காற்று வீசும் மணல் காற்றாக வீசும்
வெயில் சுட்டரிக்கும்

Friday, November 8, 2013

என் விருப்பம்



பார்முழுதும் அமைதித்தென்  றல்வீச  விருப்பம்;

பகையென்னும் புயற்காற்று நீங்கிடவே  விருப்பம்;

 கார்முகிலும் மும்மாரிப்  பொழிந்திடவே விருப்பம்;

காடுகளும் அழியாமற் காற்றுவர விருப்பம்;

Monday, November 4, 2013

முகிலே முகிலே

பெண்

முகிலே முகிலே
உனைப்போல் எனை
மிதக்கச் செய்வாயா ?

மழையே மழையே
உனைப்போல் எனை
குதிக்கச் செய்வாயா

Friday, June 1, 2012

இயற்கைக்கு மாறாக நெடுநாள் வாழ விருப்பமா!


பல்லாண்டுகள்  வாழ பல்லோரது விருப்பம்.  அதற்கு ஆசை  மட்டும் காரணமாக இருந்தால் போதுமா! மனதில் உறதி வேண்டும் அதற்கு ஆவன  செய்ய முற்படவேண்டும்
பல்லாண்டுகள் வாழ்ந்து இறைவனைத்  தொழுது நன்மையைத் தேடி செய்த பாவமான காரியங்களுக்கு பரிகாரம் தேட வேண்டும் என்பது சிலரது விருப்பம். அதற்காக நோய்வாய்ப் பட்டாலும் நெடுநாள் வாழ வேண்டும் என்பார்கள் உடல்நிலையில் வியாதி   வரும்போதுதான் நாம் நம்மை உணர்ந்து  தவறு  செய்வதிலிருந்து  திருந்தவும் செய்கின்றோம் அத்துடன் அல்லாமல் நாம் நோய்பட்டிருக்கும்போதுதான் நாம் இறைவனிடம் மனதார  மன்னிப்பு நாடுகிறோம் அதனால் நம் பாவமும் நம்மை விட்டு  நீங்குகின்றது என்ற ஆழமான நம்பிக்கை.
 உடல் நலமாக இருக்கும்போது இனி புகை பிடிக்கக் கூடாது என்று பிரசவ வைராக்கியம் செய்பவர்களுண்டு மற்றும் அதனை நடைமுறை படுத்துபவர்களுண்டு.

இயற்கையாக சில ஆகாரங்களும் மற்றும் சில செயல்பாட்டு முறைகளும்,வந்த வழிகளும் நெடுநாள் வாழ  துணை செய்வதனை நாம் அறிவோம்.தாய்  கொடுக்கும் சீமைப்பாலும் தொடர்ந்து  கொடுத்து வரும் தாய்ப்பாலும் மிகவும் சக்தி வாய்ந்தவை. தாய்ப்பால் குடித்து  வரும்  குழந்தைக்கு  எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கின்றது.
கம்பு, கேவுறு, பூஞ்சை, நல்ல காளான், தேன் மகரந்தம் மற்றும் சில இயற்கை உணவுகள் நன்மை  தரும் 
சிலருக்கு தன முன்னோர்கள்  வழி வந்த சிறப்பான ஜீன்கள் வாழ் நாட்களை அதிகமாக்கிறது. மனிதர்களின் குணாதிசயங்களை அவர்களின் ஜீன்கள்  நிர்ணயிப்பதாகசொல்கின்றார்கள்

நன்கு செயல்படும் மூளை நல்ல ஆரோகியமான வாழ்விற்கு வழிகாட்டி அது அல்லவைகளை தவிர்த்து நல்லவைகளை நாடும் பண்பினை தூண்டக்கூடியது. அறிவு வளர தொடந்து  படிக்கும் முறையினை கையாண்டு வரவேண்டும். படிக்க படிக்க தனது அறிவு வளர்வதோடு  மூளையில் உள்ள செல்களும் பன்மடங்கு பெருகும்.  கலைஞர்  கருணாநிதி, நடிகர் சிவகுமார் போன்றோர்களின் நினைவாற்றலைக்  கண்டு அனைவரும்  அதிசியக்கின்றனர். அவர்கள் தொடர்ந்து படிப்பதும் அதனைப் பயன்படுத்துவதும் அவர்களை நீடித்த மகிழ்வான வாழ்வுக்கு இட்டுச்செல்ல வழி வகுக்கின்றது.    

படிப் பதனை நிறுத்திவிட்டால் அந்த செல்கள் குறைய ஆரம்பிக்கும் அதுவே நம் அறிவு வளர்ச்சியை நிறுத்துவதோடு நினைவாற்றலையும் குறையச் செய்து வாழ்வின் வாழும் நாட்களை குறைத்து விடும்.
அதிகமான மொழிகளை தெரிந்துக்கொள்வது நமது நினைவாற்றலை தூண்டுவதொடு வாழ்வின் ஆயுளை நீடிக்கச் செய்கின்றது.
 Let us read a book every day

வயது வந்தவர்கள் வயதாகிவிட்டதாக  எக்காலத்திலும் நினைக்காமல் தொடர்ந்து தேவையான அளவுக்கு இயற்கையாக பாலியல்  விளையாட்டில் மகிழ  வேண்டும் . அதற்காக செயற்கை முறையில் மருந்து எடுத்துக்  கொள்ளக் கூடாது. மனமிருந்தால் வழியுண்டு. மனமே ஒரு உந்துச் சக்தி .

மலைகளில் வாழும் மக்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர். அவர்களுக்கு இயற்கை அழகை கண்டு மகிழ்கின்றார்கள். தூய்மையான காற்றை சுவாசிக்கின்றனர்.மலை மேடு பள்ளங்களில் நடந்து  உடலுக்கு தேவையான உடம்பின் உறுதியினை உண்டாக்கிக் கொள்கின்றார்கள்.

நாத்திகக் கொள்கை கொண்டவர்களை விட இறை பக்தியுடையோர் நீண்ட ஆண்டுகள் வாழ்கின்றனர்.அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை  ஆனால் பொருளையே நாடியே வாழ்ந்தவர்கள் அவ்வுலகத்தினை இழப்பர் அருளை மட்டும் நாடி வாழ்பவர் இவ்வுலகத்தினை இழப்பர். இரண்டும் இரண்டு கண்கள். பொருளை நாடி ஓடி நன்முறையில்  சேர்த்து அதனை அருள் கிடைக்கும் வழியில் செலவு செய்யும்   போது ஆத்மா திருப்தி வர வாழ்நாட்கள் அதிகமாக வழி உண்டாகும்  

 அசைவ உணவு உண்பவர்களைக்  காட்டிலும் சைவ உணவு சாப்பிடுவதும் நன்மை தரும். வயதான பின்பும் பல் விழுந்த பின்பும் புதிய போலிப் பல் கட்டிக்கொண்டு  மாமிச உணவை சாப்பிட்டு அது செரிக்காமல்  பல வியாதிக்குள்ளாகின்றார்கள்  . பல் விழுவதும் நரை வருவதும் நமக்கு ஒரு எச்சரிகை என்பதனை உணராமல் இருக்கின்றோம்.

  செல்வம் வர மன மகிழ்வுதான்.செலவ்த்தினை தேடுங்கள். பணக்கார நாடுகளின் மக்கள்  வாழும் ஆயூள்   நிலை சதவீதம் அதிகமாக உள்ளது . செல்வம் கிடைத்து அதனை முறையாக பயன்படுத்தி மகிழ  வேண்டும் . பணம் மட்டும் வாழ்வினை மகிழ்வாக்கிடமுடியாது, அது வாழ்கையின் தேவைகளை நிறைவு செய்வதற்கு பயன் படலாம்,அதையே நன்முறையாக பயன்படுத்துவதில்தான் மகிழ்வு உன்டாக்கி வாழ்நாளையும்  கூட்டுகின்றது.

  பொதுநல தொண்டு செய்பவர்கள் மிக மகிழ்வாக இருப்பார்கள். நான் குறிப்பிடுவது அரசியல் சார்ந்ததல்ல..உண்மையான தொண்டு.  வீதியில் தடையாக கிடக்கும் பொருளை  நீக்குவதும் ஒரு தொண்டுதான், மற்றவர்கள் போற்ற   வேண்டும் என்பதர்க்காக இல்லாமல் தன மனதிற்கு இயற்கையாக உண்டாகும  தொண்டு செய்ய வேண்டும் என்ற  மனப்பக்குவம் வாழ்வை நீடிக்கும்.

அனைத்தும் அறிந்தவன் இறைவன். வாழ்வை நீடிப்பதும் குறைப்பதும் அவன் கையில்..இருப்பினும் ஒட்டகத்தைக் கட்டி இறைவனை நாடுவது நம் பொறுப்பு. எல்லாம் அவன் வசம் என்று  இல்லாமல் நம் முயற்சியோடு சேர்ந்த வேண்டுதல் உயர்வானது.     'நீ இறைவனை  நம்பு; ஆனால் உன் ஒட்டகத்தைக் கட்டி வை'  - நபிமொழி 

Monday, October 17, 2011

இயற்கையோடு ஒன்றிய இனிமையான வழி.!

நான் யாருடனும் போட்டிபோட விரும்பவில்லை. நான் ஓட்டப் பந்தயத்தில் போட்டிபோடவும் விரும்பவில்லை. நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். நான் வேகமாக கடந்து மற்றவர்களுடன் போட்டி போடும் போது நான் பலவற்றினை இழக்க நேரிடுகின்றது . இறைவன் கொடுத்த நல்ல விஷயங்களை, இயற்கைகளை அனுபவிக்க வேண்டும்.
என் வழி தனி வழி இயற்கையோடு ஒன்றிய இனிமையான வழி.
 இயற்கையோடு இயைந்த வாழ்வு இனிய ஆரோக்யமான, மகிழ்வான வாழ்வு.








• "சீனக் கோடைக்காலம்":மாபெரும் புல்வெளிகள்









• "சீனக் கோடைகாலம்":ஷிஹு ஏரி
Photo source










ஓடு ஓடு நிற்காமல் ஓடு லட்சியம் அடையும் வரைஓடு

               அ முஹம்மது அலி ஜின்னா     ('நீடுர் அலி' ) பாரிசில்- படகில் உல்லாசப்  பயணம்

Friday, April 15, 2011

மனம் மகிழுங்கள் - 44 : குழந்தை மனம்

44 - குழந்தை மனம்!
- நூருத்தீன்
யற்கையின் மாசுமறுவற்ற மற்றொரு வடிவம் குழந்தை. குழந்தைகளின் பேச்சும் சிரிப்பும் லூட்டியும் தூய்மை. கள்ளம், கபடம் கலக்காதவை. அவர்களுக்கு முன்தீர்மானங்கள் இருப்பதில்லை. இடம், பொருள் பார்த்துப் பேசவேண்டும், கூடாது என்பதெல்லாம் எதுவும் அவர்களுக்கு இல்லை. அதனாலேயே அவர்களின் பேச்சோ சிரிப்போ நமக்குப் பொத்துக்கொண்டு வரும் சிரிப்பையோ சங்கடத்தையோ ஏற்படுத்திவிடும்.

தன் ஐந்து வயது மகளைக் குளிப்பாட்டும்போது தாய் பெருமையோடு கூறினாள், "இங்கே பாரு! உன் தலைமுடி எவ்ளோ நீளமா வளருது".

அதற்கு மகள் முகத்தைச் சிணுங்கலாக வைத்துக்கொண்டு, "நீதான் என் தலைல நெறய்ய தண்ணி ஊத்துற".

அவர்களது உலகம் வேறு. அவர்களின் குறிக்கோள் மிகவும் எளிதானது. மகிழ்வாய் இருக்க வேண்டும். பசித்தால், விழுந்தால், வலித்தால், ஓர் அழுகை. சமாதானம் செய்து கவனித்துக்கொள்ள பெற்றோராச்சு. பிரச்சினை தீர்ந்ததா? அடுத்ததாகத் தூக்கம், விளையாட்டு, சிரிப்பு. பெரியவர்கள் நாம்தான் குழந்தைகளுக்கு algorithm, trigonometry என்று அவர்களுடைய எளிய பாலகத்திலேயே திணித்து, கற்றுத்தந்து, அவர்களது குழந்தைத் தன்மையை விரட்டிவிட்டுத்தான் மறுவேலை என்று அடம் பிடிக்கிறோம். ஓரமாய் அமர்ந்து நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தால், பலன் ஏராளம். சொப்புப் பாத்திரத்தில் உணவு, பானம் எல்லாமும்கூட கிடைக்கலாம். வயிறு நிறையாது; ஆனால் மனம் இலேசாகும்.

Saturday, April 9, 2011

மனம் மகிழுங்கள் - 43 : இயைந்து வாழ்!

மனம் மகிழுங்கள்!
43 - இயைந்து வாழ்!
- நூருத்தீன்
ம் வாழ்க்கையின் நிகழ்வுகளுக்கும் இயற்கையின் விதிகளுக்கும் தொடர்பிருக்கிறது; இயற்கை நமக்குப் பாடம் கற்றுத்தருகிறது என்பதைக் கடந்த வாரம் பார்த்தோம். கிரகங்கள், நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன், பூமி, மலை, கடல், மணல், சுண்டல், தூசு ஆகியனபோல் இந்த அகண்டப் பெரும் பிரபஞ்சத்தில் நாமும் ஓர் அங்கம். இயற்கை இவற்றிற்கெல்லாம் விதி நிர்ணயித்துள்ளதைப் போன்று நமக்கும் ஏற்படுத்தியுள்ளது என்பதையும் முந்தைய அத்தியாயங்களில் அறிந்து கொண்டோம். அவை யாவை எனக் கொஞ்சமாய்த் தெரிந்து கொள்வோம்.

“எம்மாம் பெரிய தேக்கு மரம்!” என்று ஒரு மரத்தைப் பார்த்து வியந்து போகிறீர்கள். அது அம்மாம் பெரிசாக வளர்ந்து நிற்கப் பலகாலம் ஆகியிருக்கும்; இல்லையா? ஒரே இரவில் யாரும் அதைக் கொண்டு வந்து நட்டு வைத்துவிடவில்லையே. பளபளக்கும் வைரங்களைப் பார்த்துவிட்டு வாங்குவதற்கு வழியில்லாமல் முகவாய்க் கட்டையைச் சொறிந்து கொண்டே புருவம் உயர்த்தி ஆச்சரியப்படுகிறோம். அது ஒன்றும் வாரஇதழ்போல் ஒரே வாரத்தில் உருவாவதில்லை அல்லவா? எதுவொன்றும் தம் அழகையும் தரத்தையும் மேன்மையையும் அடைந்து அற்புதமாய்ப் பரிணமிக்க, குறிப்பிட்ட காலத்தைச் செலவிட்டிருக்கின்றது.