Monday, January 19, 2015

வலியென்பது யாதெனில்.../அந்த பயம் இருக்கட்டும்...


வயது முதிர்ந்தப்பின்னே..
ஆளுக்கொரு வீட்டில்
நான் தனியாகவும்;
என் இல்லாள் தனியாகவும்
பங்குப் போடப்பட்டோம்..

பிறந்த பிள்ளைகள்
மும்மரமாய் முட்டி மோதியது…
அம்மா என் கூடவே இருக்கட்டும்;
அம்மா என் கூடவே இருக்கட்டும்;

தாய் பாசமோ என நினைத்து
புலங்காயிதம் கொண்டப்போது;
மெல்லமாய் அழுதப்படி என் காதை
கடித்தாள் இல்லாள்…

வீட்டு வேலை செய்யவே
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன் என..
வறட்டுப் புன்னைகையுடன்
வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்..
அதற்கும் நான் இலாயிக்கில்லையாயென!!
Yasar Arafat
 முதுகுக்குப் பின்
முணுமுணுப்பவரைக் கண்டு
புன்முறுவலுடன்
முன்னேறி நகர்கிறேன் - நல்லது;
இன்னும் என் முகத்தைப் பார்த்து
கதைக்க முடியாதவர்களென!!
Yasar Arafat
வாழ்த்துகள் to யாசர் அரஃபாத்
yasar arafat
Attended Mohamed Sathak College of Arts & Science
யாசர் அரஃபாத் அவர்கள்  இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் கவிஞர் யாசர் அரஃபாத் அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."
 

No comments: