Friday, January 23, 2015

மூட நம்பிக்கை, ஒரு உண்மை கதை / ஜப்பார் அரசர்குளம்


என் மனைவிக்கு கொஞ்சநாளைக்கு முன்பு நன்றாக வளர்ந்து வந்த குழந்தை பிறக்க இரண்டு நாள் இருக்கு முன் வயிற்றில் இறந்து விட்டது இது இறைவனின் நாட்டம்  ..!

இந்த இழப்பின் மனோநிலையில் என் மனைவி அந்த குழந்தை இறந்ததில் இருந்து எங்கேயும் நல்லது கெட்டதுக்கு கூட அவர்கள் வீட்டை விட்டு எங்கேயும் போறது கிடையாது ஆனால் அவர்கள் இன்னும் மனசு சரி இல்லாமல் தான் இருந்தார்கள்  அந்த குழந்தையே நினைத்து.

சிறிது நாட்கள் கடந்தன

இந்த மாதரி இருக்கும் சமயத்தில் என் மனைவின் தோழிகள் ஒரு நாலு ,ஐந்து பேருக்கு கூட குழந்தை பிறந்து இருக்கிறது . ஆனால் எனது மனைவி  அவர்களைப் பார்க்க  போக வில்லை. அது  ஏன் என்று எனக்கு தெரியவில்லை ..
இப்படி இருக்கும் சமையத்தில் ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்து இருக்கிறது. அதை பார்பதற்காக என் அக்காவும் என் தங்கையும் போறதாக முடிவு பண்ணினார்கள்.
 அதே சமையத்தில் என் மனைவியையும் அவர்கள் அழைத்தப் போக விரும்பினார்கள்  அவர்கள் எங்கே போனாலும் எனதுமனைவியையும்  அழைத்துக்கொண்டுதான்  போவர்கள். இது அவர்களுடைய பழக்கம் ..

இப்படி இருக்கும் போது அன்று என் அக்கா போன் போட்டு இந்த மாதரி இன்னாருக்கு குழந்தை பிறந்து இருக்கு வா போகலாம் என்று சொன்னார்கள் ஆனால் என் மனைவியோ இல்ல மச்சி நான் வரவில்லை நீங்க வேண்டும் என்றால் போயிட்டு வாங்க என்று சொல்ல எங்க அக்காவோ அதல்லாம் இல்லை நீ அங்கே வந்தே ஆகணும் என்று கட்டாயப்படுத்த இதை தட்டிகழிக்காத என் மனைவி சரி மச்சி நான் வாறேன் என்று ஒப்புக்கொண்டார்கள் ..

பிறகு மூன்று பேரும் அந்த குழந்தையை  பார்பதற்காக மிட்டாய் வாங்கிகொண்டு போனார்கள்.
 எப்படி குழந்தையே சும்மா பார்ப்பது என்று அங்கே போனதும் அந்த வீட்டுகார அம்மா 'வாங்கமா' என்றுசொல்லி அவர்களை உள்ளே அழைத்துக்கொண்டு போனார்கள்.
அவர்கள் வீட்டுக்குள் ,,பிறகு மூன்று பேரும் ஒரு நாற்காலில் அமர்ந்து  பேசிக்கொண்டு இருக்கும்போது
'குழந்தை எங்கமா இருக்கு' என்று இவர்கள் கேக்க அவர்களோ அந்த அறையில்  இருக்கு மா என்று சொல்ல உடனே என் மனைவி என்ன பண்ணினார்கள் என்றால் அந்த குழந்தையே பார்க்க போனார்கள் அந்த அறைக்குள் அந்த குழந்தை உடைய 'நன்னா'வோ உடனே அவர்களும் அந்த அறைக்குள் வந்து" டக் "என்று அந்த குழந்தையே தூக்கி விட்டு வெளியே உக்காந்து இருந்த எங்க அக்காவின் மடியில் வைத்தார்கள்
என் மனைவிக்கோ மனசுக்கு சங்கட்டமாக போனது.
என்ன! இவர்கள் இந்த குழந்தையை கூட என்னை தூக்கவிட மறுக்கிறார்கள்  என்று.
ஏன் இவர்கள் இப்படி எல்லாம் இருக்கிறார்கள்  என்று.
பிறகு அவர்களும் அந்த அறையை  விட்டு வெளியே வந்தார்கள்
பிறகு அவர்களும் பேசாமல் அமைதியாக மன மகிழ்வு இல்லாமல்  உக்காந்து இருந்தார்கள்.ஆனால் அதன காரணத்தை   அவர்கள் என் மனைவியிடம் இறுதி  வரைக்கும் சொல்லவுமில்லை அவர்கள் அந்த குழந்தையே எனது மனைவியை தூக்கவே விடவில்லை.
எனது மனைவிக்கும் உடன் வந்தவர்களுக்கும்  மனசுக்கு மிகவும் வருத்தத்தை தந்து சங்கட்டமாக போனது  ..பிறகு எனது மனைவி  தங்களுக்குள் நினைத்துகொண்டார்கள் நமக்கு ஒரு குழந்தை இறந்ததனால் தான் இவர்கள் அந்த குழந்தையே தூக்க விடலையோ! என்று
இதை என் அக்கா இடமோ இல்லை என் தங்கை இடமோ எனது மனைவி இதை பற்றி யாரிடமும்  சொல்லவில்லை ..அமைதியாக மன வருத்தத்துடன்  இருந்து விட்டார்கள்
பிறகு 'நாங்கள் வருகிறோம்' என்று அவர்களிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு வந்து விட்டார்கள் மனசு சங்கட்டதுடன் யார் இடமும் இதை பற்றி  காட்டிகொள்ளாமல் ...

நான் வெளிநாட்டில் இருந்ததால்  அன்று இரவு நான் எப்பொழுதும் போல் வீட்டுக்கு போன் போட்டு பேசுவது வழக்கம். அப்படி என் மனைவி இடம் பேசும் போது அவர்கள் குரல் வழக்கத்துக்கு மாறாக இருந்தது பிறகு நான் கேட்டேன் 'ஏன் எதுவும் உனக்கு உடம்புக்கு சரி இல்லையா' என்று அதற்கு அவர்கள் சொன்னார்கள் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே என்று ..
இருந்தாலும் எனக்கு அவர்கள் மீது சந்தேகம் வந்து விட்டது நானும் அவர்களை விடவில்லை திரும்ப திரும்ப அவர்களிடம் கேட்டுகிட்டே இருந்தேன்.
' நீ எப்போதும் எப்படி பேசுவதில்லை  இப்பொழுது  என்ன ஒரு மாதரியாக இருக்கு உன் குரல்' என்று
அதற்கு அவர்கள் சொன்னார்கள்
'அதல்லாம் ஒன்னும் இல்லை'  'நான் எப்போதும் போலத்தானே உங்களிடம் பேசுறேன்' என்று ..
இருந்தாலும் நான் நம்பவில்லை எனக்கு திருமணம் ஆகி எட்டு வருஷமாகபோகுது என் மனைவியைப்  பற்றி  எனக்கு தெரியாதா இப்படி என்று எண்ணிக்கொண்டு...

திரும்பவும் அவர்களிடம் கேட்டேன் 'இல்ல சொல்லு உனக்கு என்ன பிரச்சனை.  விட்டில் ஏதும் பிரச்சனையா'
என்று கேட்டேன்
'அதல்லாம் ஒன்னும் இல்ல மச்சான்' என்று எனது மனைவி சொன்னார்கள் ..

'சரி! உண்மைலே உனக்கு என்னதான் பிரச்சனை அதையாவது சொல்லு' என்று வற்புறுத்தி கேட்டேன் ,,,பிறகு சிறுது நேரம் கழித்து அங்கே நடந்த அன்று நடந்த நிகழ்வைப்  பற்றி  சொன்னார்கள் அவர்கள் கண் கலங்கி .மன வருத்ததுடன் .அவரது குரல் வருத்தத்தின் வெளிப்பாடாக இருந்தது.

அதுக்கு நான் சொன்னேன் 'ச்சே துப்..' இதான் உனக்கு ஒரு பிரச்சனையா!
இதுக்கு ஏன் நீ சங்கட்டபடுற இதல்லாம் தவறாக எடுத்துக்க கூடாது
ஒரு வேலை உனக்கு அந்த குழந்தையை ஒழுங்காக தூக்க தெரியாது என்று அவர்கள் அந்த மாதரி செய்து இருக்கலாம் இதெல்லாம் தவறாக எடுத்துக்க கூடாது என்று சொல்லி  அவர்களை அமைதிப் படுத்த அவ்வாறு  அவர்களிடம் சொன்னேன் .

அதுக்கு அவர்கள் சொன்னார்கள் 'எனக்கு தூக்கி வழக்க தெரியாமலா ஒரு குழந்தை பெத்து வச்சு இருக்கேன் ஏழு வயதில் ஒரு பையனை என்று !!!
ஹ்ம்ம்.. என்ன பண்றது இதுக்கும் நான் எதாச்சும் பதில் சொல்லணுமே அவர்களுக்கு வேற வழி

அதான் நான் கொஞ்சம் யோசனை பண்ணி இதுக்கும் ஒரு பதில் கொடுத்தேன்
'அப்படி இல்லம்மா ..குழந்தையே நீ எப்படி தூக்குவே என்று உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் ஏன் நம்ம குடும்பத்துக்கே தெரியும் ஆனால் இது எல்லாம் அவர்களுக்கு எப்படி தெரியும் நீ சின்ன பொண்ணு உனக்கு அவ்வளவா  பக்குவமாக தூக்க தெரியாது என்று அவர்கள் எண்ணி இருக்கலாம் அல்லவா' என்றேன்' ..அதற்க்கு அமைதியாக இருந்தார்கள் ஒ அப்படி வேற இருந்தாலும் இருக்கலாம் என்று ...இருந்தாலும் நான் கொடுத்த  பதிலில் எனது  அவர்கள் முழு திருப்பதி அடையேவில்லை ..எனக்காக ஹ்ம்ம் அப்படி என்று ஒத்துகொண்டார்கள் அதுவும் எனக்கு தெரியும் ..இதை நான் காட்டிகொள்ளவிலை அவர்களிடம் ,,,சரி அதோட பிரச்சனை முடிந்தது,

பிறகு இரண்டு நாளைக்கு முன்னாடி இதைபோல் ஒருவருக்கு குழந்தை பிறந்து இருக்கு அவர்களை பார்க்க மறுபடியும் போகணும் என்று முடிவு பண்ணினார்கள் என் அக்கா ..திரும்பவும் என் மனைவியே கூப்பிட்டார்கள் அதுக்கு என் மனைவி சொன்னார்கள் இல்ல நீங்க போங்க மச்சி நான் இன்று எங்க அம்மா விட்டுக்கு போக போறேன் என்று சொன்னார்கள் அதுக்கு எங்க அக்கா சொன்னார்கள் சரி நானும் தான் அந்த வழியாக போகணும் காரில் அப்படி போகும் போது உன்னை அங்கே இறக்கி விட்டுறேன் வா ஒன்றாக போகலாம் என்று சொன்னார்கள் சரி என்று என் மனைவி சம்மதித்து 'வாறேன்' என்று சொன்னார்கள் அப்புறம் எங்க வீட்டுக்கு வந்து என் மனைவியே அந்த காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பி விட்டார்கள் குழந்தை பிறந்ததோ அரந்தாங்கில் ..சரி மருத்துவமனை வந்து விட்டது சரி எல்லாம் வாங்க போயிட்டு பாத்துவிட்டு வந்து விடலாம் என்று எங்க அக்கா சொல்ல அதில் ஒரு ஆறு பேர் இருந்தார்கள் என் மனைவியையும் சேர்த்து .

ஆனால் என் மனைவி சொன்னார்கள் அந்த சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு 'இல்ல மச்சி நீங்க எல்லாம் போயிட்டு வாங்க நான் காரிலே உக்காந்து இருக்கேன் 'என்று ..இருந்தாலும் எங்க அக்காவோ விடவில்லை ',,சீ..சீ ,,வா வா ..இவளது தூரம் வந்து விட்டு நீ பிறகு குழந்தையே பார்க்காமல் போனால் நல்லா இருக்காது' என்று சொன்னார்கள்
என் மனைவிக்கோ மனசில் ஒரே குழப்பம் உள்ளே போனால் என்ன நடக்குமோ என்று ..சரி வேற வழி இல்\லை என்று அந்த பயத்தினாலே காரை விட்டு இரங்கி உள்ளே போனார்கள் அந்த மருத்துவ மனைக்குள் அங்கே போனதும் அந்த குழந்தை உடைய நன்னாவோ வாங்கமா வாங்க என்று சொன்னார்கள் பிறகு எல்லோருக்கும் மிட்டாய் குடுத்தார்கள் பிறகு அனைவருக்கும் குடிக்க கூல்ரின்ஸ் குடுத்தார்கள் ..அங்கே போனவர்கள் மொத்தம் ஒரு ஆறு வருசையாக நாற்காலில் உக்காந்து இருக்க குழந்தை அப்படியோ ஓரமாக கட்டில் தொட்டில் படுத்து இருக்கு ..என் மனைவியோ அந்த குழந்தைகிட்ட போகாமல் அமைதியாக நாற்காலில் உக்காந்து இருக்கார்கள் .அந்த குழந்தை உடைய நன்னாவோ அந்த கட்டிலில் படுத்து இருந்த குழந்தையே தூகிட்டு வந்து என் மனைவி மடியில் வைத்து விட்டார்கள் என் மனைவிக்கோ ஒரே அதிர்ச்சியாக போச்சு என்னடா இத்தனை பேர் இருக்கார்கள் அவர்களிடம் எல்லாம் குடுக்காமல் இவர்கள் என்னிடம் குடுத்து விட்டார்களே என்று ,,அந்த குழந்தையே அப்படியே வாங்கிய உடன் அவர்களுக்கு கண் கலங்கி விட்டது ,,,பிறகு அங்கு இருந்தவர்கள் அனைவரும் அவர்களை சமாதாரம் படுத்தினார்கள்
'கவலை படாதம்மா அல்லாஹ் உனக்கும் இதேபோல் குழந்தை பாக்கியம் தருவார்கள்' என்று ,,,

பிறகு என் மனைவி அவர்கள் அம்மா வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்
அன்று முழுவதும் இவர்களுக்கு இப்படி நடந்த சம்பவத்தை நினைத்து நினைத்து மகிழ்ச்சி அடைந்தார்கள் சொல்லமுடியாத அளவுக்கு என்னிடம் ...
----------------------------------------------------------------------------------------
நீதி :ஒரு பெண் தன் கணவனை இழந்தாலோ அல்லது குழந்தைகளை இழந்தாலோ அவர்களை நீங்க இந்த சமுகத்தில் இருந்து தள்ளி வைக்காதீர்கள் ,அவர்களும் உங்களை போல் ஒரு பெண் தான் என்பதை எண்ணிகொள்ளுங்கள் மறந்து விடாதிங்க .தாங்கள் முடிந்த அளவுக்கு அன்பாக நடக்க முடியாட்டியும் அவர்கள் மனசு உடையும் படி நடக்காதிங்க ,,இது தான் என் வேண்டுகோள் உங்களிடம் ,!!
------------------------------------------------------------------------------------------------
வஸ்ஸலாம் ...!!

Jabbar Arasar Kulam

No comments: