Wednesday, November 26, 2014

தானே தனக்கு - நிஷா மன்சூர் / ஓர் விமர்சனப் பார்வை: -தாஜ்தீன்

உறவென்று ஒதுங்கி நிற்க ஓரிடமில்லை,
நட்பென்று தலைசாய்க்க நாதியில்லை,
மனம்விட்டுப் பாராட்ட எவருக்கும் மனதுமில்லை,
தானே விழுந்து, தானே துடைத்துக்கொண்டு
தானே வேர்பிடித்து, தானே கிளைபரப்பி
தானே தன்னைத் தாங்கி அரவணைத்து
தானே தன்னைப் பாராட்டி மகிழ்வித்து
தானே வளரும் காட்டுச்செடியாக
தானே தன்னையறிந்து
தன்னுள் சுகித்து
தானே தானே தந்தானே
தன்னைத்தானே தந்தானே...!!
நிஷா மன்சூர்
நிஷா மன்சூர் கவிதை - ஓர் விமர்சனப் பார்வை:
-தாஜ்தீன்
Taj Deen
விமர்சனம்:

பிடிமானம் இல்லாத சுற்றில்
கவிஞன்
தன்னையே ஆதாரமாக்கி
உச்சம் காண முயல்கிறான்.
அவன் வெற்றி கொண்டான என
இங்கே சொல்லாது போனாலும்
குறிப்புகள் வைத்திருக்கிறான்!
இத்தனை பெரிய நம்பிக்கைகள்
வெற்றியையே
பறைச்சாற்றும் என்பதை
தானே தானே தந்தானே
தன்னைத்தானே தந்தானே யென
ஏகளமிடுகிறான்!
அவன் குறிப்பு செய்திருக்கிற
இந்த வரிகள் வாசகனுக்கு
ஆருதலையும் தருகிறது!
*
// சந்தோஷமாக இருக்கிறது.
தலையுயற்றி
மன்சூரை வாழ்த்துகிறேன்!
*

No comments: