பிறந்தநாளும் கொண்டாட்டங்களும் பின்னே நானும்..!!
-நிஷா மன்சூர்
பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் கொண்டவன் அல்ல நான்.
என் பிறந்ததினம் என்பது ஆவணங்களில் புழங்கப்படும்
எண்கள் மட்டுமே.
வறுமை நெரித்த பால்யத்தில்
ஏன்தான் பிறந்தோமோ என்று வருந்தியதுணடு.
பின்பு 90களில் எழுத ஆரம்பித்தபோது பேனா நண்பர்கள் பலரும்
பிறந்ததேதி பகிர்ந்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டதுண்டு
இடையில் வாழ்வின் மேடுபள்ளங்களில்
எல்லாம் மறைந்துபோயின
குடும்பம் குழந்தைகள் என்றானபின்
சில புன்னகைகளுடனும் மெல்லிய
வாழ்த்துக்களும் வருடிப்போயின
குழந்தைகள் பள்ளி சென்றபின் பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கான தயாரிப்புகள் அறிமுகமாயின
உங்கள் பி றந்தநாள் எப்போது என்று குழந்தைகள் ஆர்வமாய் கேட்டு நச்சரித்தபின்புதான்
குழந்தைகளோடு சேர்ந்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்வது வருட நிகழ்வாய் மனதை லேசாக்கியது
மற்றபடி கொண்டாட்டம் கும்மாளம் கேக்வெட்டுதல் எல்லாம் எப்போதும் இருந்ததில்லை
கடந்த வருடம் முகநூல் நண்பர்கள் பலரும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர்
இந்த வருடமோ முகப்பிலும் தனிச்செய்திகளிலும் செல்பேசியிலும் நூற்றுக்கணக்கான நண்பர்கள் வாழ்த்துக்கள் பிரார்த்தனைகள் என்று திக்குமுக்காட வைத்துவிட்டார்கள்
அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
என்னைப்பொருத்தவரை நாற்பது வயதைத் தாண்டிவிட்டோம் என்கிற எச்சரிக்கை மணியாகத்தான் இதைப் பார்க்கிறேன்.
இன்னும் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன,
செல்ல வேண்டிய தூரம் உள்ளது,
பிறந்தோம் வாழ்ந்தோம் மறைந்தோம் என்றில்லாமல்
வாழ்வின் பெரும் கல்வெட்டுகளில் சில வரிகளையாவது ஆழப்பதிக்க வேண்டும் என்கிற பேரவா
பற்றி எரிகிறது கனன்று.
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்......
பார்ப்போம்....!!
#அனைவருக்கும் எங்கள் மனப்பூர்வமான நன்றிகள்
**********************************************************
வாழ்த்துகள் to நிஷா மன்சூர்
Nisha Mansur . M.A., (Socialogy)
Annamalai University, Chidambaram
Hometown
Mettupalayam
வாழ்த்துகள் to நிஷா மன்சூர்
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
"Allah will reward you [with] goodness."
No comments:
Post a Comment