Wednesday, November 12, 2014
நாட்டுக்கோழி உடலுக்கு நல்லது
ஞாயிற்று கிழமையில் விடுமுறை!
போய் ஒருகிலோ சிக்கன் அரைகிலோ மட்டன்,
தக்காளி புதினா மல்லி இஞ்சி வாங்கியாங்க மறக்காமல் ஸ்கின்லெஸ்ஸா ,,
அப்பறம் மட்டன் எலும்பா போட்ற போறான் பல்ல காமிப்பான் மயங்கிடாத ,,, வேஸ்ட்ட அள்ளி போட்ருவான் ,,
வீட்டுல உக்காந்திகிட்டு போடும் பாருங்கள் ஆடர் அப்படியே ரெண்டு போடலாம்னு தோனும் ,,,
ம்ஹூம் ,,, மனசளவுலதான் !
வாங்கறதவிட கேட்க முடியுமா ?
சிலர் கம்பீரமாக இருப்பாய்ங்க ஏன்னா சொல்ல முடியாத அளவுக்கு விழுந்துருக்கும் கண்ணுல தண்ணீர் வந்து சிவப்பாயிருக்கும் ,, ஆனா வீரமா காமிப்பான் ,,, போடா போ ,,
ஞாயிறு நாயி பொழப்பு ,,
சரி அதை விடுங்கள் இந்த சிக்கன் எல்லோருக்கும் ரொம்ப பிடித்துபோனது காரணம் விலை குறைவு ஒன்னு மிருதுவாக இருக்கும் எலும்புகளோட ஒட்டாது தோல்கூட எளிதில் அகற்றிடலாம் முடி கையேடு வந்துடும் ,, என்ன சொல்ல வரையா ???
உண்மையில் பிராய்லர் கோழிகள் தீவனம் மூலம் சத்துக்களையும் மருந்துகளையும் மூன்று அளவுகளில் வளர்ச்சிக்கு ஏற்றவாறு அதிகப்படுத்தி கொடுக்கிறார்கள் இன்னும் சொல்லப்போனால் உடம்பு சரியில்லாதவனுக்கு போடற குளுக்கோசும் இன்ஞ்செக்சன் மாத்திரையிலயே வளர்ந்த கோழி ,,, அப்படி வளர்ந்த கோழிகள் இறக்கும் தருவாயில் நம்மை வந்தடையும் ,,,
இதனை நமது பிள்ளைகளுக்கு கொடுப்பதனால் தேவையற்ற கொழுப்பு சேருவதோடு அதிக வளர்ச்சியும் தேவையில்லாத சதை வளர்ச்சியும் ஏற்படுகிறது இதனால் குழந்தைகளின் சுறுசுறுப்பு குறைவதோடு மட்டுமல்லாமல் மந்தமான சூழல் நிலவுகிறது மேலும் சிறு வயதிலேயே இடுப்பு வலி அசதி பசியின்மை வியர்வை நாற்றம் இரத்த அடைப்பு ,,,,இப்படியே எழுதுனா பயப்படுவாங்க எனவே வேண்டாம் கொஞ்சம் கொஞ்சமா குறைத்து ஒதுக்கிவிடுங்கள் ,,,,
நாட்டுக்கோழியை வாங்கி கொடுங்கள் நல்ல மேய்ச்சலோடு வளர்வதால் உடலுக்கும் நல்லது உடல் நிலை சரியில்லாதவர்களுக்கும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் முட்டை உடுற பெட்டை கோழி ரசம் கொடுப்பாங்கன்னா பாருங்கள் ,,,,,
உங்கள் நல்லதுக்கு சொன்னேன் உடனே சில அறிவாளிகள் என்னிடம் ஆர்ங்கியூவ் பண்ண ஆரம்பிப்பாங்க ,,,,,,
சார் நீங்கள் புத்திசாலிதான் ,,,,,
நூறு தடவை சொல்வேன் ,,,,,,
Sathiyananthan Subramaniyan Banumathi
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment