உன்னைக் கண்டேன்
இதயம் சற்றே நின்றதடா
மறுமுறை உன்னைக்
காணும் வரை
துடிக்க மாட்டேன் என்றதடா
கனவில் பூக்கும்
எந்தன் கண்கள்
உந்தன் பின்னால் சுற்றுதடா
உன்னை மட்டும்
தொட்டுச் செல்ல
எந்தன் மூச்சும் செல்லுதடா
ஃ
பெண்கள் கூடி ரசிக்கும் அழகை
நடையில் பார்க்கின்றேன்
கண்கள் கோடி இல்லை என்றே
கோபம் கொள்கின்றேன்
காற்றில் ஆடும் நாற்றைப் போல
எந்தன் மனசும் ஆனதடா
ஆற்றங்க் கரையின் கூழாங் கல்லாய்
உயிரும் உருவம் மாறுதடா
கருவில் தூங்கும் மழலை போல
உன்னுள் எந்தன் உயிர் வாழும்
அருகில் உன்னை அமரச் செய்தால்
மோட்சம் மண்ணில் இடம்மாறும்
ஃ
மீசை முளைத்த
மின்னல் மரம் நீ
பின்னல் போட்ட
தங்க நிலா நான்
கனவு பூக்கும்
கவிதை மரம் நீ
உயிரே உயிரே
உந்தன் உரம் நான்.
ஆயிரம் மொழிகள் கூட்டணி வைத்தும்
எந்தன் மனதை எழுதிடுமா
உலகின் பூக்கள் எல்லாம் சேர்ந்து
தோல்வியினாலே அழுதிடுமா ?
என் இசையே நீயே
என் உயிரும் நீயே
ஃ
பாடல்: சேவியர்
சேவியர் Joseph Xavier Dasaian Tbb
பாடல் : முதல் முறை ; ஆல்பம் : மன்மதா; இசை : சஞ்சே, பாடல் : சேவியர், தயாரிப்பு . TBB, பாடியவர் : பென்சியா டான்.Free Download @ http://www.tbbstars.com/Album/Manmatha%20Album.zip
No comments:
Post a Comment