Sunday, August 10, 2014

உங்களால் கட்டவும் ,இடிக்கவும் முடியும்! பழைமையின் தனித்தன்மையை கொண்டு வர முடியாது.

உங்களால் அழகிய அரண்மனையை கட்ட முடியும்
உங்களால் சிறப்பான ஆட்சியையும் தர முடியும்
உங்களால் அழகிய அரண்மனையை இடித்துத் தள்ளவும் முடியும்
உங்களால் சிறப்பான ஆட்சியையும் தகர்த்துத் தள்ளவும் முடியும்

உங்களால் இங்கும் அங்கும் கட்டடங்கள் கட்ட முடிந்தாலும்
உங்களால் இங்கும் அங்கும் ஆட்சியை அமைக்க முடிந்தாலும்

உங்களால் கட்டப்பட்ட கட்டிடங்களிலும்
உங்களால் உருவாக்கப் பட்ட ஆட்சிகளிலும்
உங்களால் பழமையின் தனித்தன்மையை
உங்களால் ஒருபோதும் கொண்டு வர முடியாது
நீங்கள் சிதைக்க நினைக்கும்
சரித்திர புகழ்பெற்ற சிறப்பான கட்டிடங்களை
உங்களால் ஒருபோதும் கொண்டு வர முடியாது

சரித்திர முக்கியம் வாய்ந்த கட்டிடங்களை படங்களில் பார்ப்பது
கனவுபோல் வந்து மறையும்
சரித்திர முக்கியம் வாய்ந்த கட்டிடங்களை நேரில் பார்ப்பது
காலமெல்லாம் நினைவில் நிறைந்து நிற்கும்

The great .Córdoba mosque
The great mosque (with its catholic cathedral within) seen from the south bank of Guadalquivir river. The roman bridge to the left of the sketch.Córdoba, view from the south bank



















அருமையான ,சிறப்பான ,சரித்திரம் வாய்ந்த இன்னும் பல காலங்கள் நிலைத்து நிற்கக் கூடிய பள்ளிவாசல்களை இடித்து அதே இடத்தில் புதிதாக கட்டுகிறார்கள் .புதிதை அவர்கள் ஏன் வேறு இடத்தில் கட்டக் கூடாது.
 பாபர் மஸ்ஜித் அவர்களுக்கு எந்த வகையில் தொல்லை கொடுத்தது இடிப்பதற்கு.
தாஜ் மஹால் வருமானத்தை வாரிக் கொடுக்கின்றது இல்லையென்றால் அதனது நிலையும் வேதனைதான்
.( நினைவில் நிற்கும் நீடூர்-நெய்வாசல் பழைய ஜாமியா மஸ்ஜித் படமாக. ).

No comments: