என்ன சமைக்க?
கோழியா மீனா?
சாம்பாரா தாழ்ச்சாவா?
பொரியலா அவியலா?
முறுக்கா அப்பளமா?
சுண்டைக்காவா வெண்டைக்காவா?
பச்சடியா ஊறுகாவா?
அடுக்கடுக்கானக் கேள்வியோடு
அடுப்பங்கரையிலே நீ;
எதாவது செய்யேன் - எனும்போதே...
கேட்டா சொல்லுங்க எனும்;
அதிகாரமும் அன்பும் பிசைந்தப்படி!
உட்கார்ந்த இடத்திலே..
அடுப்பிலிருந்து உனை அகற்றவே;
பசிக்குது இன்னுமா முடியல..
சீக்கிரம் வாயேன் எனும்
அக்கறையான குரலில்-அன்பை
வெளிக்காட்டாதப்படியே நான்!
உப்பும் குறைவாக;
காரமும் மிகையாக;
எண்ணெய் கூடுதலாக;
அரைவேக்காட்டில் அவசரமாக;
எப்படி இருக்குது என
என் முகத்தை பார்த்தபடி
நீ கேட்கும்போது......
சிரித்தப்படியே சொல்லலாம்
அருமை அட்டகாசம்!
அன்பிற்கு அன்பே பரிசு...
No comments:
Post a Comment