இங்கே முகநூலில் சொல்லப்படும் நீதியும், நேர்மையும், ஆலோசனைகளும், அழகிய உபதேசங்களும், வாழ்வுக்கோ, வாழ்ந்து கரை சேரும் நிலைகளுக்கோ, பீடைகள் நீங்கி சுபிட்சம் காண்பதற்கோ சொல்லப்படும் உபதேசங்களன்று, அவரவரால் முயற்ச்சி செய்து பார்த்து முடியாதவைகளும், சந்தர்ப்பங்களுக்கு தகுந்தாற் போல் அவைகளை பிரயோகிக்க முடியாத நிலையும் உணர்ந்துதான், தாங்கள் தோற்றுப் போய்க்கொண்டிருக்கிற வேதனையின், சோதனையின் எண்ணச் சிதறலாய் மட்டுமே, அவையெல்லாம் இந்த சுவற்றில் வந்து மோதி தெறிக்கிறது. மிகவும் கை தேர்ந்த நிபுணர்களால் மட்டுமே கையாளப்படும் இதுபோன்ற உபதேசங்களை, அதற்கு தகுந்தாற் போல் உள்ள தேர்ச்சி பெற்றவர்களின் துணையின்றி யாரும் தங்கள் வாழ்க்கையில் பரிசோதித்து பார்க்க வேண்டாம் என்று பொதுவில் அறிவுறுத்தப்படுகிறது, இந்த எச்சரிக்கையையும் மீறி செயல்படுபவர்களுக்கு, இந்த முகநூல் பொறுப்பல்ல என்று இதனால் எல்லா பேர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது!
இதுவோர் விசேசம் பொருந்தியப் பதிவு.
இந்தக் கருத்தில் நான் நூறு சதம் உடன்படுகிறேன்.
நான் எழுதும் இப்படியான குறிப்புகளை கூட
முற்றிலும் வெறுப்பவன் நான்.
பல நேரம் நானே அதனைக் கண்டு சிரிப்பேன்.
பெரியப் பெரிய தத்துவவாதிகளின்
கருத்தெல்லாம் மண்ணில் உருண்டு
உடைப்படுகிற போது...
முகநூல் தத்துவவாதிகளின்
தத்துவங்கள் எம்மாத்திரம்?
இருந்தாலும் நானும் எழுதத்தான் செய்கிறேன்.
இந்த முகநூல் வாசகர்கள்
முக்கால் வரியில் உலகத்தை அறிய
ஆசைப்படுபவர்களாக இருக்கிறார்கள்!
என்ன செய்ய!?
ஒரு வருடத்திற்கு முன்னரே
இப்படி நான் எழுதிய
தத்துவச் செறிவுகளை தொகுத்து
'99 - வெத்துக் குறிப்புகள்' என்று
கிண்டல் அடித்து
'ஆபிதீன் பக்கங்களில்' பிரசுரித்து
மகிழ்ந்தவன் நான்.
இன்றைக்கு அதே கருத்தை
ரகிமுல்லாவும் எழுதி இருப்பதில் மகிழ்ச்சி.
கீழே..
நான் 'ஆபிதீன் பக்கங்களில்' எழுதிய கட்டுரை.
abedheen.wordpress.com
'ஃபேஸ்புக்குல கலக்குறாரே தாஜண்ணே!’ என்றான் அன்று அலுவலகம் வந்த சீர்காழிப்பையன். ‘எப்படி தம்பி?’ ‘சூப்பர் ஃபோட்டோலாம் போடுறாரு!’. போராளி தாஜிடம் இதைச் சொன்னதும் பொங்கியெழுந்துவிட்டார். ‘அவன் கெடக்கு.
எப்பவோ சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தது நேற்றைக்குத்தான் கை கூடியது. எப்படித்தான், எவ்வளவுதான் அறிவுரைகள், தெளிவுரைகள் எடுத்துச் சொன்னாலும், இல்லை நாம் கேட்டாலும், இவைகளை எல்லாம் வைத்து எதுவும் நடக்கப் போவதில்லை என்று என்றோ அறிந்த ஒன்று, நேற்று எழுத்தானது அவ்வளவுதான். பத்திரிகைச் செய்திகளிலும், தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் சலித்துப் போன நம்மைப் போன்ற பலரும், ஒரு மாற்றம் வேண்டி, அதில் ஏதாவது தங்களுக்கு பயனுள்ளவைகள் இருக்குமா என்று தேடிப்பார்த்ததில், சரி, சரி, எழுதியே நேரத்தை சாகடிக்கலாம், அத்தோடு அதை படிக்கிறவர்களையும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு முழு வீச்சில் இறங்கிய நிலையே நானும் நீங்களும் நம்மைப் போன்ற எழுத்தாளிகளும், படிப்பதற்கும் இன்னும் பாராட்டுவதற்கும் சிலர் கிடைத்த போது, உள் மனதின் குரூரம், தலைக்கேறி, இரண்டில் ஒன்று என்று முடிவு செய்து விட்டது. உண்மை நிலை இப்படி இருக்க, இதில் இழுத்து வரப்பட்டவர்கள், அவரவர்க்கும் ஏதோ ஒன்று கிடைத்து விட்டது போன்ற ஒரு உணர்வில், விடவும் முடியாமல், விட்டுப் போகவும் முடியாமல் தவித்து இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் யார் சொல்லி, யாருக்கு அறிவு, எது சொல்லி யாருக்கு தெளிவு! -
இதில் யார் சொல்லி, யாருக்கு அறிவு, எது சொல்லி யாருக்கு தெளிவு!// சரிதான் இது. ஆனால், இதில் இன்னொரு கோணம் இருக்கிறது. நம்மை ஒத்த வயதினருக்கு இவைகள் ஒட்டாதுதான். முகநூலில் எல்லோராலும் எழுதப்படும் பல விசயங்கள காலத்தில் நாம் அறியவந்ததுதான். ஆனால், இளைய சமூகத்திற்கு இவைகள் அத்தனையும் புது செய்திகள். நாளை அவர்கள் தூக்கி வீசுவார்கள் என்றாலும் இன்றைக்கு அவர்கள் ஆர்வமுடனேயே கற்கவே செய்வார்கள். அந்த வகையில் நம் எழுத்து உபயோகமாக இருக்கத்தான் செய்கிறது. நாம் எழுதும் சிலபல நல்லவிசயங்கள் அத்தனையும் காலத்தில் பல எழுத்தாளர்கள் வசமிருந்து கற்றதுதான் என்பதை நாம் யோசிக்கும் போது..., அங்கே நாம் நிம்மதி கொள்ள முடியும்.-
இதில் யார் சொல்லி, யாருக்கு அறிவு, எது சொல்லி யாருக்கு தெளிவு!// சரிதான் இது. ஆனால், இதில் இன்னொரு கோணம் இருக்கிறது. நம்மை ஒத்த வயதினருக்கு இவைகள் ஒட்டாதுதான். முகநூலில் எல்லோராலும் எழுதப்படும் பல விசயங்கள காலத்தில் நாம் அறியவந்ததுதான். ஆனால், இளைய சமூகத்திற்கு இவைகள் அத்தனையும் புது செய்திகள். நாளை அவர்கள் தூக்கி வீசுவார்கள் என்றாலும் இன்றைக்கு அவர்கள் ஆர்வமுடனேயே கற்கவே செய்வார்கள். அந்த வகையில் நம் எழுத்து உபயோகமாக இருக்கத்தான் செய்கிறது. நாம் எழுதும் சிலபல நல்லவிசயங்கள் அத்தனையும் காலத்தில் பல எழுத்தாளர்கள் வசமிருந்து கற்றதுதான் என்பதை நாம் யோசிக்கும் போது..., அங்கே நாம் நிம்மதி கொள்ள முடியும்
குப்பை கொட்டுவது என்பது பொதுவான ஒரு சொல். நல்லது கெட்டது எல்லாத்துக்கும் பொருந்தும். அரசு வேலையிலே பத்து வருசமா குப்பை கொட்டுறேன் ...அப்படிம்பாங்களே ...அதுமாதிரி
தாஜ் அண்ணனும் ரஹீமுல்லாஹ் அண்ணனும் அறியாததல்ல. பொதுவாக படிக்கும் ஆர்வமும் பத்திரிக்கை மற்றும் நூல்கள் வாங்கும் வழக்கமும் வெகுவாக குறைந்துவிட்ட சூழ்நிலையில் பல இஸ்லாமிய இதழ்கள் நின்று போய் விட்டன. நிற்காத இதழ்கள் இயக்கம் மற்றும் அபிமானிகளின் ஆதரவால் வருகிறது. அவை பெரும்பாலும் படிக்கப்படுவதில்லை. இதுதான் இன்றைய முஸ்லிம்களின் நிலை. நாம் மட்டுமல்ல... ஜூவியும் குமுதமும் ஆனந்த விகடனும் தவறாமல் வாங்கிய ஆயிரக்கணக்கானவர்கள் இப்போ வாங்குவதேயில்லை. மொத்தத்தில் பத்திரிகை படிக்கும் வழக்கம் அறுபது விழுக்காடு குறைந்துவிட்டது.
No comments:
Post a Comment