நிறைவாக உந்தன் அருளை தந்து விடு
நீ படைத்தவைகள்தான் அனைத்தும்
நீ தருபவைகள்தான் அனைத்தும்
எங்கள் பகுதியும் உன் பகுதிதான்
எங்கள் பகுதியில் இருப்பவைகள் அனைத்தும்
உந்தன் அருளால் உருவானவைகள்தான்
நாங்கள் மழை இல்லாமல் வாடுகின்றோம்
எங்களுக்காக படைக்கப்பட்ட செடி ,கோடி, ஆடு ,மாடுகள் இன்னபிறவைகளும்
மழை இல்லாமல் வாடுகின்றன
கோடை மழையில் நனையும் கோட்டாறு !யென
Abu Haashima Vaver மழையின் அருமையை அனுபவித்து
அருமையான கவிதை பாடுகின்றார்
அபூ ஹாஷிமா வாவர் அவர்கள் கோட்டாறில் பெய்யும் மழையையும்
அழகாக படம் பிடித்தும் போடுகின்றார்
எங்களை பொறாமை எண்ணம் கொண்டவர்களாக ஆக்கி விடாதே
உந்தன் அருளை நாடி உனைத் தொழுது நிற்கின்றோம்
உந்தன் மழையை எங்களுக்கும் தந்து விடு
முகம்மது அலி ஜின்னா Mohamed Ali
மனசுக்கு மகிழ்ச்சி தரும் இரு விஷயங்கள் இருக்கு...
அதை சொல்லலேன்னா மனசு " காய்ஞ்சு " போயிடும் !
ஒண்ணு - இறை இல்லங்களை பார்க்கும் போது ஏற்படும் சந்தோசம். தொழுகைக்கு போகும்போதானாலும் சரி ...அல்லது பள்ளிவாசலை கடந்து போகும் சமயங்களானாலும் சரி..
மனசுக்குள் ஒரு நிறைவு தானாக வந்து ஒட்டிக் கொள்ளும்.
நம்ம வீட்டின் மீதான முஹப்பைத்தை விட அதிகமான முஹப்பத் நம்ம அல்லாஹ்வின் வீட்டின் மீது ஏற்படும் !
அதனாலேயே பள்ளிகளைக் கண்டால் நான் நிறைய படங்கள் எடுப்பது வழக்கம்.
அடுத்தது மழை !
மழையைப் பார்க்கும்போதெல்லாம் மனசுக்குள் தூவானம் வீசும் ! அந்த சில்லிப்பும் சிலீரென்று வீசும் ஜில் ஜில் காற்றும் நம்ம மனசையே குளிப்பாட்டி விட்டுவிடும் !
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது ! அதுவும் இந்த கோடைகால கொளுத்தும் வெயிலில் வரும் மழை ... மழையல்ல ! அருள் ... இறையருள் ! ஆஹா ... எத்தனை இன்பம் !
எத்தனை ஆறுகளை ஓட விட்டாலும் தரை இப்படிக் குளிருமா !
அதனால்...மழையையும் படங்கள் எடுப்பேன்.
அபூ ஹாஷிமா வாவர் Abu Haashima Vaver
No comments:
Post a Comment