சிலருக்கு சில நிற ஆடைகள் பொருத்தமாக அமையும்
சிலருக்கு அனைத்துமே பொருத்தமாக அமையும்
சில விளம்பர நிறுவனங்கள் பொருத்தமான ஆடைகளை அணிவிக்க
சில ஆடைகளை அணிவித்து விளம்பரம் செய்வார்கள்
சில பொருத்தமான ஆட்களைத் தேடி (அதிலும் பெண்களை )
அணிவித்து விளம்பரம் செய்வார்கள்
பெரும்பாலும் பெண்களை காட்சிப் பொருளாக்க விரும்புகிறார்கள்
பெண்கள் கவர்ச்சிப் பொருளாகி காட்சிப் பொருளாவது பொருத்தமா !
ஆடைகள் தயாரிக்கும் தொழில் ,
தொழிலிலேயே உயர்வான தொழிலாகும்
ஆடைகளால் மனிதர்களின் மானம் காப்பாற்றப் படுகின்றது
ஆடைகளால் சில தவறுகள் நிகழாமல் தடுக்கப் படுகின்றது
அரை குறை ஆடைகளால் உணர்சிகளும் தூண்டப் படுகின்றன
ஆடைகள் பல காரணங்களுக்காக அணியப் பட்டாலும்
ஆடைகள் அணிவது மறைக்க வேண்டியதை மறைப்பதர்க்கே வந்தன
உங்கள் வாழ்க்கைத் துணைவி உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள்,
هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُن
‘அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (சூரா அல்-பகரா 2:187)
No comments:
Post a Comment