இத்தேர்தல் முடிவுகளின் மூலம் இந்தியா மதச்சார்புள்ள நாடாக மாறிவிட்டதாக சிலர் பதிவிட்டதை கண்டு மனம் வருத்தமே அடைந்தது. ஆகையால் சில உண்மைகளை வெளிப்படுத்த விரும்புகின்றேன். இத்தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் அதன் வாக்கு சதவிதம் 31% மட்டுமே. அதாவது மூன்றில் ஒரு இந்தியர் மட்டுமே பாஜகவிற்கு தன் வாக்கை செலுத்தியுள்ளார். அதிலும், பாஜகவிற்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் இந்துத்துவாவிற்கு ஆதரவானதாக கருத முடியாது. கணிசமான வாக்குகள் மாற்றத்திற்காக விழுந்திருக்கின்றன என்றே புரிந்துக்கொள்ள முடியும். பத்து கோடிக்கு மேலாக வாக்குகளை பெற்றும், பாஜகவுடன் ஒப்பிடும் போது சுமார் பதினோரு சதவிதம் பின்தங்கி இருந்தும் காங்கிரஸ் பெற்ற தொகுதிகள் 44 மட்டுமே. ஆக, பெற்ற ஓட்டுக்கள் கணக்கில் பாஜகவுடன் நெருங்கி நின்றாலும் தொகுதிகள் கணக்கில் காங்கிரஸ் பின்னுக்கு சென்றுவிட்டது.
மேலும், 2009-ல் காங்கிரஸ் கூட்டணி பெற்ற வாக்கு சதவிதமும் சரி, இப்போது பாஜக கூட்டணி பெற்றுள்ள வாக்கு சதவிதமும் (37%) சரி கிட்டத்தட்ட ஒன்றே. இவ்வளவு ஏன், 2004-ஆம் ஆண்டு பாஜக கூட்டணி தோற்ற போது பெற்ற வாக்கு சதவிதத்திற்கும், இப்போது பெற்றிருப்பதற்கும் மிகச் சிறிதே வித்தியாசம். ஆக, மோடி அலை என்பதையும் அறிவுக்கு பொருந்தாத ஒன்றாகவே கருத முடியும். நிகழ்வுகள் இப்படியிருக்க இந்தியா மதச்சார்புள்ள நாடாக மாறிவிட்டதாக கூறுவதையும், மோடி அலை என்பதையும் அபத்தமாகவே கருதுகின்றேன்.
No comments:
Post a Comment