எழுதிக் கோர்த்தாலும்
மாறுவதில்லையே
மூடன் மனம்
வீரம் கலந்து
உணவைக் கொடுத்தாலும்
ஓடுவதோ
மதுவில் தினம்
மயங்கி அட
அறிவைத்தொலைத்தாய்
சுயத்தின் சுதந்திரம்
கெடுத்தாய்
கோழையாய் சந்ததி
படைத்தாய்
துணிச்சலை உனக்குள்
தொலைத்தாய்
நீ செய்ய வேண்டியதை
யார் செய்வார்
எழுந்து நில்
நீ பட்ட அடிமைத்தனம்
களைந்திட
துணிந்தே நில்
கவிதை யாத்தவர் GJ Thamilselvi
No comments:
Post a Comment