காங்கிரஸ் இவற்றுக்கு எதிரான தீவிரமான எதிர்ப்பினை முன்வைக்குமென்று தோன்றவில்லை. இந்த விஷயங்களில் ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாடு என்னவென்ற குழப்பம் நீடிக்கிறது. ஆனால் இந்தி பெல்ட் வடமாநிலங்களில் பாஜகவை ஆம் ஆத்மியால் மட்டுமே சமாளிக்க முடியுமென்று தோன்றுகிறது.
கொள்கைரீதியாக பார்க்கப் போனால் ஆர்.எஸ்.எஸ். ஆட்சிக்கு எதிரான அதிருப்தியை அறுவடை செய்ய இடதுசாரிகளால்தான் தேசிய அளவில் முடியும். இதற்கு அவர்களது கட்சிகள் அமைப்புரீதியாக வலு பெற வேண்டியது அவசியம். கொள்கை ஒப்புமை கொண்ட அந்தந்த பிராந்திய கட்சிகளோடு கருத்தியல்ரீதியான உறவினை ஏற்படுத்திக் கொண்டு இடதுசாரிகள் இதை சாதிக்க வேண்டும்.
2019லாவது நிஜமான சோஷலிஸம் இந்தியாவில் மலர வேண்டுமானால் ஆங்காங்கே நிலவும் தனிநபர் எதிர்ப்பு அரசியலை கைவிட்டு மதச்சார்பற்ற இயக்கங்கள் 1989 தேசிய முன்னணி மாதிரியான கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் இப்போதிலிருந்தே ஈடுபட வேண்டும்.
No comments:
Post a Comment