Monday, February 10, 2014

நாகூர் ரூமி என்ற நற்சொல்லர்..

கற்றதும்,பெற்றதும் தொடரில் எழுத்தாளர் சுஜாதா மரபுக்கவிதைகள் குறித்து எழுதும்போது என்னையும்,ஆகாசம்பட்டு சேஷாசலம் என்ற கவிஞரையும் குறிப்பிட்டுப் பாராராட்டியிருந்தார்.அவருக்கு நன்றி தெரிவிக்க ஆ.விகடனில் அவர் எண் வாங்கி பேசினேன். உமர்கய்யாமின் ருபாயத்துகளை மரபுக்கவிதையில் கொண்டுவர முயற்சியுங்கள்.நாகூர்ரூமி புதுக்கவிதையில் அவற்றை சிறப்பாக எழுதியுள்ளார் என்றார்.. நாகூர்ரூமியின் எழுத்து மிகுந்த ஈர்ப்புவிசை கொண்டது...

ஆம்பூர் வரும்போது வீட்டிற்கு வாருங்கள் என அவர் அழைப்பார், அவரைச் சந்தித்து வரவேண்டும் ஒவ்வொருமுறையும் நான் நினைப்பேன்.


8.2.2014 ஆம்பூர் பொதுக்கூட்டத்திற்குச் சென்றபோது நாகூர் ரூமி என்னும் அபாரமனிதரை அவர்வீட்டில் சந்திக்கும் வாய்ப்பு. 45 நூற்களால் தமிழ்கூறு நல்லுலகைக் கட்டிவைத்திருப்பவர். அவரை வாசிப்பவர்களுக்கு வேறு வழியில்லை அவரை நேசித்தாக வேண்டும். ஆம்பூர் மஸ்ஹருல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத்துறைத்தலைவர் நாகூர்ரூமி மனங்களைக் கனியவைக்கும் மனங்கவர் சொல்லாளர்.

”இந்தவினாடி” என்ற நூலை எனக்குத்தந்தார். அந்த நூல்குறித்து நான் சொல்லநினைத்ததை நடிகர் சிவக்குமாரும்,இயக்குநர் அகத்தியனும்,அரசு ராமநாதனும் முன்பே சொல்லியிருக்கிறார்கள்..சரியாகச் சொல்லியிருக்கிறார்கள். நாகூர்ரூமியுடன் நான் இருக்கும்போது யுகபாரதி யும், யுகபாரதியுடன் பேசும்போது நாகூர் ரூமியும் மறக்காமல் வந்துவிடுவார்கள் பேச்சில்(நினைவாக). இருவரும் அப்படி நண்பர்கள்.

எதிர்வரும் 15.2.2014 அன்று ரூமி சவூதி அரேபியா -ரியாத்திற்குத் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிக்குச் செல்லவிருப்பதைத் தெரிவித்தார். www.nagorerumi.com என்பது அவரது இணையமுகவரி....கருத்து வேறுபாடுகள் சில உண்டு..அதைத்தாண்டி அருமையான கருத்துகள் அவரிடம் உண்டு.

(படத்தில் சச்சிதானந்தன்,நாகூர்ரூமி,மற்றும் மமக வேலூர் மாவட்டச்செயலாளர் ஆம்பூர் நசீர்)


< நாகூர்ரூமி மற்றும் ஹாஜா கனி 
Haja Gani










அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் நாகூர் ரூமி

1 comment:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நாகூர் ரூமி அவர்களின் சில படைப்புகளைப் படித்திருக்கின்றேன். அவரைப் பற்றிய செய்திகள் படித்தறிந்து மிக்க மகிழ்ச்சி!