Tuesday, February 18, 2014

அகம் நீயே யுகம் நீயே


அகம் நீயே
யுகம் நீயே

வரம் நீயே
சுகம் நீயே

கடும் புனலாய் காதல் வளர்த்தேன்
சுடும் அனலாய் தேகம் கொதித்தேன்



மனசும் மனசும் சேருமா
மௌன மாகப் பேசுமா
பனியில் பூசும் வண்ணமாய்
அழியுமா ?

இரவு பகலைத் தின்னுமா
விழிகள் கனவில் மின்னுமா
உறக்கம் போன பின்னுமா
மயக்கமா ?



அட
யாரிவன் அறியேன் - ஊர்
ஏதென்றும் அறியேன் - நான்
யாரென்றும் மறந்தேன்
திரிந்தேன்

முக்
காலங்கள் மறந்தேன் - என்
காயங்கள் மறந்தேன் - மென்
காதலில் விழுந்தேன்
சிரித்தேன்.



பெண்

கண்ணாடி கண்ணாடி போலெனை
முன்வந்து பாராய்
மன்றாடித் தயங்கிடும் உயிரினைச் சேராய்

ஆண்

தள்ளாடித் தள்ளாடும் விழிகளில்
காதலைப் பார்த்தேன்
அடடா என் நெஞ்சினில் உனையே சேர்ப்பேன்

பெண்

இது போதுமே
இனி பிறவியும் வேண்டாமே

ஆண்

உனைச் சேராதே
வாழ்வுமே தீராதே



மல்பெரித் தோட்டமா - உன்
கண்கள் வித்தை காட்டுமா
சில் வண்டுக் கூட்டமா - புது
காதல் ராகம் மீட்டுமா

துளித் துளியாய்ச் சொட்டுமா - நம்
காதல் மேகம் முட்டுமா
ஆண்டாண்டுக் காலமா - நம்
காதல் வாழும் ஆலமா



கவிதை சேவியர்
 Lyrics: Xavier Joseph Xavier Dasaian Tbb

No comments: