Saturday, February 15, 2014

குடும்பம் மகிழ்வாய் இருக்க


மனைவி  மீது  மென்மையான புரிதல் மற்றும்  நட்பு இருக்க வேண்டும் .

பண்பட்ட, மென்மையான முறையில் இனிய வார்த்தைகளைக் கொண்டு    மனைவியுடன் பேச வேண்டும் .

மனைவி  சோகமாக கவலையாக  இருக்கும்  போது அவளது கவலையை நீக்க முயற்சிக்க மனைவியுடன் நேசம் காட்ட வேண்டும்.   இரக்கம் கொண்டு அவளை சந்தோஷப்படுத்த  வேண்டும் .  சிறந்த நண்பராக  மனிவியின்  பிரச்சனைகளை தீர்க்க  மனைவிக்கு  ஆதரவாக  இருக்க வேண்டும் .

 குழந்தைகள் கல்வி கற்க அவளுக்கு உதவ வேண்டும் .
மனைவி செய்த தவறுகள் பற்றி முரட்டுத்தனமாக கோபம் கொண்டு வார்த்தைகளை அள்ளி வீசக் கூடாது.   அவளுக்கு  அமைதியாக சிகிச்சை செய்வது போல் செயல்பட வேண்டும். 

அவள்  கோபப் படும்போது  அமைதியாக இருக்க வேண்டும் .
நாம் தவறு செய்திருந்தால்  மன்னிப்பு கேட்க வேண்டும் . மனைவியிடம் மன்னிப்பு கேட்பதை மரியாதை குறைவாக கருதக் கூடாது. அன்பை அதிகப் படுத்துவது ஒரு உயர்ந்த செயல்தான் .அது ஒரு  பாக்கியமாகும் .
 " என் கணவர்  யாரையும் விட என்னை நேசிக்கிறார் . " என்று சொல்லும்படி ,நினைக்கும்படி வாழ்வது உயர்வானதே



வீட்டு மற்றும் நிதி பிரச்சினைகள் பற்றி , மனிவியோடு  ஆலோசனை கலந்து  ஒன்றாக பேச வேண்டும் . அதே நேரத்தில்  பெரிய பிரச்சனைகள் வரும்போது  மனைவிக்கு  அறிய வைத்து அவளையும் கவலையில் ஆழ்த்தக் கூடாது.  .

மனைவியின் பாவமற்ற இரகசிய தவறுகளை  அவளது  தனிப்பட்ட விஷயங்களை மறைக்க வேண்டும் அதனை மற்றவர்களிடம் பகரக் கூடாது. .

பெண்களை மகிழ்விக்க ஆறுதலான வார்த்தைகளால்  அவர்களை பாராட்டி பேச வேண்டும்
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் மிதமான உரையாடல்களும் நன்மையைத் தரும்

மனிவியின் மற்றும் அடிப்படை தேவைகளை அறிந்து திட்டமிட்டு முதலிலேயே வாங்கிக் கொடுத்து விடுதல் சிறப்பு.
தேவையான அறிவு அடையவும்  ,மார்க்க அறிவும்  பெறவும்  ஒருவருக்கொருவர் கலந்து பேசுவதுடன் அதற்க்கு தேவையான தினசரி பத்திரிக்கை ,மார்க்க புத்தகங்கள் வாங்கி கொடுக்க  வேண்டும்.

”இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்கவேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்” என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 2915

உண்ணும் போதும், உடுத்தும்போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள். அறிவிப்பாளர்: முஆவியா (ரலி) நூல்: அஹ்மத் 19160 பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். […]

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான கருத்துக்கள் ஐயா...

வாழ்த்துக்கள்...