| இந்திரன் தோட்டத்து முந்திரி – 6.1(கதை கதையாம் காரணமாம்: மஹாபாரத வாழ்வியல்) | View | |||
| ‘Men’struation | View | |||
| எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 6 | View | |||
| எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 5 | View | |||
| எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – (தொடர் 2) | View | |||
| எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – (தொடர் 1) | View | |||
| இந்திரன் தோட்டத்து முந்திரி – 6 — மஹாபாரத வாழ்வியல் | View | |||
| இசைக்குயில் பறந்தது | View | |||
| அடாப்டிவ் அன்கான்ஷியஸ் — சிலையும் நீ, சிற்பியும் நீ — 5 | View | |||
| யயாதி வியாதி -– 05 | View | |||
| கதவுகள் வழியாக ஆறு நூல்கள் | View | |||
| முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை | View | |||
| மஹாபாரத வாழ்வியல் 3 & 4 | View | |||
| கடவுளோடு பேசுவது எப்படி? | View | |||
| 02 — மஹாபாரத வாழ்வியல் — கங்கை மைந்தன் | View | |||
| கதை கதையாம் காரணமாம்: மஹாபாரத வாழ்வியல் | View | |||
| சிலையும் நீ சிற்பியும் நீ | View | |||
| முதல் (போட) உதவி | View | |||
| பி.ஜெ. குர்’ஆனை முன்வைத்து சில கேள்விகள் | View | |||
| பாட்பூரி — 07 | View | |||
| இஸ்லாமும் தமிழும்: நிறைவான கொடுக்கல் வாங்கல் | View | |||
| நாகூர் நாயகம் அற்புத வரலாறு | View | |||
| காரைக்குடி அரண்மனைகள் | View | |||
| தமிழிலக்கியமும் நாகூர் படைப்பாளிகளும் | View | |||
| பொறுப்பின்மையின் உச்சகட்டம்: திருவள்ளுவர் பல்கலைக்கழகம் | View | |||
| அழிவிலிருந்து அழியாமைக்கு | View | |||
| லேனா ஓர் ஆச்சரியம் | View | |||
| வரலாறு அறியாத பொறுப்பின்மை: இஸ்லாமிய தமிழிலக்கிய எட்டாம் மாநாடு-2014 | View | |||
| அம்மியில் கொத்தப்பட்ட சிற்பங்கள்: யுகபாரதி திரைப்படக் காதல் பாடல்கள் | View | |||
| பரிபூரண அழகிய முன்மாதிரி | View | |||
| சிங்கை மீடியா கார்ப் வசந்தம் டிவியில் சகோதரர் காதர் | View | |||
| காதல் பரிசு | View | |||
| வாடா திங்கலாம் வாங்க நாகூருக்கு! | View | |||
| கப்பலை நிறுத்த வைக்கோல் நங்கூரம் | View | |||
| வரலாற்றுப் பாட் பூரி | View | |||
| ஜல விமோசனம் | View | |||
| அரிய தருணங்கள் | View | |||
| அப்படி என்னதான் செய்துவிட்டார் மகாத்மா? | View | |||
| நாகூர் சலீம் நினைவலைகள் | View | |||
| தாயுமானவள் | View | |||
| நோன்பு – ஒரு சிந்தனை | View | |||
| கலைஞரோடு சில மணித்துளிகள் | View | |||
| WHITHER HIGHER EDUCATION? | View | |||
| ஹஸ்ரத் மியான் தான்சேன் (1496-1586/1589) | View | |||
| என் பெயர் மாதாபி | View | |||
| பாட்பூரி – 06 | View | |||
| என் சமீபத்திய நூல்கள் | View | |||
| பூனைக்கும் அடி சறுக்கும் | View | |||
| க்ராண்ட் ஃபினாலே | View | |||
| வரலாறு படைத்த அழுகையும் அசத்தலும் | View | |||
| அசிங்கமும் எதிர்வினையும் | View | |||
| இந்த விநாடி பற்றி யுகபாரதி | View | |||
| இல்முதீனுக்கு லீக்வான்யூ விருது | View | |||
| நீயா நானா? | View | |||
| என் ஊர் | View | |||
| மஹா பிரிவு | View | |||
| மந்திரச்சாவி 15 — 18 | View | |||
| மந்திரச் சாவி – 14 | View | |||
| மந்திரச் சாவி – 13 | View | |||
| மந்திரச் சாவி – 12 | View | |||
| மந்திரச் சாவி – 11 | View | |||
| மந்திரச் சாவி – 10 | View | |||
| மந்திரச் சாவி – 09 | View | |||
| மந்திரச் சாவி – 08 | View | |||
| மந்திரச்சாவி — 07 | View | |||
| மந்திரச் சாவி – 06 | View | |||
| மந்திரச் சாவி -05 | View | |||
| மந்திரச்சாவி — 04 | View | |||
| மந்திரச்சாவி — 03 | View | |||
| மந்திரச் சாவி — 02 | View | |||
| மந்திரச்சாவி | View | |||
| கங்கா ஸ்நானம் | View | |||
| அப்பத்தா: உண்மையும் உணர்ச்சியும் | View | |||
| பில்லி சூனியம் | View | |||
| புதிய தலைமுறையில் நான் | View | |||
| வள்ளல் அப்துல் ஹகீம் சாஹிப் | View | |||
| பாட்பூரி – 05 — என்னை ஆட்கொண்ட முதல் குரல் | View | |||
| சமகால மொழிபெயர்ப்பும் இஸ்லாமியப் படைப்பாளிகளும் | View | |||
| பாட்பூரி — 04 | View | |||
| நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை — 10 | View | |||
| பிருந்தாவனில் வந்த கடவுள் | View | |||
| நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை — 09 | View | |||
| நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை — 8 | View | |||
| நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை – 7 | View | |||
| நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை — 6 | View | |||
| நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை — 5 | View | |||
| நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை — 04 | View | |||
| நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை — 3 | View | |||
| நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை–2 | View | |||
| நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை | View | |||
| சின்ன உயிர்களைக் கொல்லும் பெரிய மிருகங்கள் | View | |||
| குரலுக்கு வயதில்லை | View | |||
| Death: A Grave Situation | View | |||
| அரிதாரமற்ற அரிதான கலைஞன் | View | |||
| மீண்ட பொக்கிஷம் | View | |||
| நாகூர் கொத்துபுராட்டா | View | |||
| தமிழர் பண்பாடு: முஸ்லிம்களின் பண்பாட்டு மாற்றங்கள்! | View | |||
| மனித தர்மங்கள் — தூயவன் கதை –08 | View | |||
| A Requiem for Quake-hit Japan 2011 | View | |||
| சினிமா ஹராமா | View |
Showing posts with label நாகூர் ரூமி. Show all posts

Saturday, November 15, 2014
பறவையின் தடங்கள்(nagorerumi.com/ நாகூர் ரூமியின்) 100 கட்டுரைகள்
Monday, February 10, 2014
நாகூர் ரூமி என்ற நற்சொல்லர்..
கற்றதும்,பெற்றதும் தொடரில் எழுத்தாளர் சுஜாதா மரபுக்கவிதைகள் குறித்து எழுதும்போது என்னையும்,ஆகாசம்பட்டு சேஷாசலம் என்ற கவிஞரையும் குறிப்பிட்டுப் பாராராட்டியிருந்தார்.அவருக்கு நன்றி தெரிவிக்க ஆ.விகடனில் அவர் எண் வாங்கி பேசினேன். உமர்கய்யாமின் ருபாயத்துகளை மரபுக்கவிதையில் கொண்டுவர முயற்சியுங்கள்.நாகூர்ரூமி புதுக்கவிதையில் அவற்றை சிறப்பாக எழுதியுள்ளார் என்றார்.. நாகூர்ரூமியின் எழுத்து மிகுந்த ஈர்ப்புவிசை கொண்டது...
ஆம்பூர் வரும்போது வீட்டிற்கு வாருங்கள் என அவர் அழைப்பார், அவரைச் சந்தித்து வரவேண்டும் ஒவ்வொருமுறையும் நான் நினைப்பேன்.

Tuesday, December 4, 2012
வாழ்க்கை 'ஹயாத் ' நீடித்தல் இறையருள்.
இறையருளால் வாழ்க்கை 'ஹயாத்' நீடித்த நல்லவர் நாகூர் ரூமி-
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
"Allah will reward you [with] goodness."
அன்புடன்,
முகம்மது அலி ஜின்னா
பூனைக்கும் அடி சறுக்கும்
by நாகூர் ரூமி
துவக்கம்
மனைவியும் குழந்தைகளும் ஊருக்குப் போயிருந்தனர். ரெண்டு நாள் கழித்து,”எனக்கு லேசா நெஞ்சு வலிச்சிச்சு” என்று ஷாயிஸ்தாவிடம் (என் இரண்டாவது மகள்) சொன்னேன். மனைவியிடம் பேசாமல் மகளிடம் மட்டும் பேசினால் மனைவியிடம் கோபம் என்று அர்த்தம். நெஞ்சு வலித்தது என்னவோ உண்மைதான். ஆனால் அதை வலி என்று சொல்லிவிட முடியாது. வலியின் நிழல் நெஞ்சுப் பக்கமாக வந்து ஒரு சில கணங்கள் நின்றுவிட்டுப் போனது. ஊருக்குப்போன குடும்பம் சீக்கிரமாகத் திரும்பி வரவேண்டும் என்பதற்கான என் விளையாட்டு அது. ஆனால் இந்த முறை அந்த விளையாட்டு வினையாகுமென்று நான் நினைக்கவில்லை.
என் மனைவிக்கு இந்த விளையாட்டு எப்போதுமே புரிந்ததில்லை. என் வெற்றிக்கு காரணமே அவள் அப்படி இருப்பதுதானே! நான் எதிர்பார்த்தது போலவே அவள் உடனே அழுதுகொண்டே நண்பர் ஆதிலுக்கு (கல்லூரி முதல்வர்) அலைபேசினாள். அவர் என்னிடம், “ஏம்ப்பா சும்மா மெரட்ரே? பார், அண்ணி அழுதுகிட்டே ஃபோன் பண்றாங்க” என்றார்.
அழுகையும் அச்சமும் என் மனைவியின் குடும்பசொத்து. அந்த சொத்துக்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராமல் என் மனைவி காப்பாற்றி வருகிறாள். எனக்கு அதுதான் வேண்டும். என்னவோ ஏதோவென்று பயந்தால் சீக்கிரமாக வீட்டுக்கு வந்துவிடுவாள். அவள் கையால் சமைத்து தாலிச்ச சோறும் மட்டன் கறியும் சாப்பிட்டுவிட்டால் என் நாக்குக்கு மீண்டும் உயிர் வந்துவிடும்.
12 நவம்பர் 2012, திங்கள்
நேற்று இரவு முதல் இன்று காலை ஐந்து அல்லது ஆறு மணிவரை லாப்டாப்பில் வேலை செய்துகொண்டிருந்தேன். அடுத்த செமஸ்டருக்கான எம்.ஏ. ஆங்கில பாடங்களையெல்லாம் முடிந்தவரை ’இறக்கி’ வைத்தேன். அடிக்கொருதரம் என் மனைவி வந்து, “தூங்கலையாம்மா, தூங்குங்கம்மா” என்று அவள் பாணியில் சொல்லிக்கொண்டே இருந்தாள். “ஒரு அஞ்சு நிமிஷம்” என்று நானும் நேரம் கடத்திக்கொண்டிருந்தேன். கடைசியாக ”சாட்டை” படம் பார்த்தேன். மிக அருமையாக, நேர்மையாக, பொறுப்புணர்வுடன் எடுக்கப்பட்ட படம். சமுத்திரகனி மிக அருமையாக நடித்திருந்தார். ஓரிரு இடங்களில் மட்டும் கொஞ்சம் அவசரம் தெரிந்தது. பாடல்கள் நண்பர் யுகபாரதி. “அடி ராங்கி” பாட்டை குண்டு சந்தோஷ் அருமையாகப் பாடியிருந்தார். அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படம். தங்கர் பச்சானின் ‘பள்ளிக்கூடம்’ படத்தில் இருப்பது போன்ற அனாவசியமான, பிரதான கதைக்குத் தொடர்பில்லாத, ஆனால் தொடர்பிருப்பதுபோல் சேர்க்கப்பட்ட ‘செக்ஸி’யான ‘சீன்’கள் எதுவும் இல்லை. இது மிகவும் பாராட்டுதலுக்குரியது. காலையில் தூங்கப்போனபோது மணி ஆறு இருக்கும்.
விழித்தபோது ஒன்பது ஒன்பதரை இருக்கும். மார்பின் இரண்டு பகுதிகளிலும் மெல்ல வலி தலை தூக்க ஆரம்பித்தது. இந்த முறை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போனது. வலி மட்டுமல்ல. ஒருவிதமான எரிச்சல். உள்ளே யாரோ நெருப்பு வைத்ததைப்போல. முடிந்தவரை நெஞ்சைத் தடவி விட்டுப் பார்த்தேன். முடியவில்லை. சொன்னேன்.
அன்று கல்லூரி கடைசி வேலை நாள். கையெழுத்துப் போட்டுவிட்டால் 27 நாட்கள் வகேஷனை அனுபவிக்கலாம். முதல்வருக்கு என் மனைவி அலைபேசினாள். கார் அனுப்பவா என்று அவர் கேட்டார். ஃபஜிலா (என் மூத்த மகள்) தற்செயலாக தீபாவளி லீவுக்கு கணவரோடு காரில் வந்திருந்தாள். அவளைப் பார்க்கவேண்டும் என்று நானே நினைத்திருந்தேன். அவளாகவே வந்திருந்தது சந்தோஷம்தான்.
ஆனால் இறந்து போவதற்குமுன், போகஇருப்பவர் நினைக்கும் எண்ணம் மிகவும் சக்தி வாய்ந்தது என்று எனக்குத் தெரியும். என் சின்னாப்பா ’மௌத்’தாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தைகள் நாங்களனைவரும் சிங்கப்பூரில் இருந்தோம். சீரியஸாக இருப்பதாகத் தகவல் வந்ததால், ஒருவர் மாற்றி ஒருவர் செல்வதாக முடிவெடுத்தோம். அது ’டெக்னிகல்’ முடிவு. ஏனெனில் எல்லோருக்கும் ஒரே நாளில் விமான ’டிக்கட்’ கிடைக்காது. தங்கை இந்தோனேஷியாவில். தம்பிகள் இருவரும் சிங்கையில். நான் சிங்கை சென்றிருந்தேன். முதலில் தம்பி நிஜாம் செல்வதென்றும், பின்னர் தங்கை செல்வதென்றும், பின்னர் தீன் செல்வதென்றும், இடையில் நானும் என் மனைவியும் கலந்துகொள்வதென்றும் முடிவெடுத்ததாக ஞாபகம்.
ஆனால் ஏதோ ஒன்று எங்கள் திட்டங்களையெல்லாம் மாற்றிவிட்டது. எல்லோரும் ஒரே நாளில் சிங்கையில் கூடினோம். அன்றே சென்னை புறப்பட முடிவெடுத்தோம். வியப்புக்குரிய முறையில் எல்லோருக்கும் டிக்கட்டும் கிடைத்தது.
சென்னை அமைந்தகரை பில்ரோத் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சின்னாப்பாவுக்கு ரொம்ப நல்லமுறையில் சிகிச்சையளித்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் அனைவரும் சென்றோம். பார்த்தோம். சின்னாப்பாவின் கண்களை மூடிவைத்திருந்தார்கள். திறந்து விடுங்கள், அவர் எங்களைப்பார்க்கட்டும் என்று கூறினேன். அப்படிச்செய்தால் அவருக்கு வலி, வேதனை ஏற்படுமென்று டாக்டர் கூறினார். அப்படியென்றால் வேண்டாமென்று சொல்லிவிட்டோம். நாங்கள் பேசுவது சின்னாப்பாவின் காதுகளில் விழுந்தது. நாங்கள் சொல்வது புரிந்தது. நாங்கள் பேசப்பேச தலையாட்டி ஆமோதித்தார். கொஞ்சநேரம் கழித்து அவர் உயிர் பிரிந்தது. என் கண்ணில் இன்னும் அந்தக் காட்சி அப்படியே இருக்கிறது.
இறக்கும் கணத்தில் மனிதனுக்கு ஏற்படும் எண்ணத்தின் தீவிரத்துக்கு ஈடு இணை கிடையாது. மூளையும் மனமும், உடலும், ஆன்மாவும் ஒரே சிந்தனையால் ஆக்கப்பட்டிருக்கும். எங்களையெல்லாம் பார்த்துவிடவேண்டும் என்ற சிந்தனைதான் அது. அது எங்கள் திட்டங்களை மாற்றியது. எங்களுக்கு டிக்கட் வாங்கிக் கொடுத்தது.
அப்படிப்பட்ட சிந்தனைதான் என் மூத்த மகளை இழுத்து வந்துவிட்டதோ என்று எனக்குத் தோன்றியது! பாத்திரங்களை தினமும் கழுவித் துடைத்துவைப்பது மாதிரி, தினமும் எதிர்மறையான எண்ணங்களால் அழுக்காகும் மனதையும் துடைக்க வேண்டியுள்ளது! இவ்வளவு ’நெகடிவ்’-வான எண்ணங்களை வைத்துக்கொண்டு நான் எப்படி இன்னொரு மனிதனுக்கு ஆலோசனை கூறிக்கொண்டிருக்கிறேன்! உலகம் ரொம்ப வேடிக்கையானதுதான்!
ஷாஜித் (என் மருமகன்), என் இரண்டு மகள்கள், மனைவி சகிதமாக, அவருடைய காரில் நேரே காலேஜுக்குச் சென்று கையெழுத்திட்டேன். ஆனால் அப்போதே எனக்கு தொப்பலாக மழையில் நனைந்த மாதிரி வியர்த்துவிட்டிருந்தது. அந்த அறிகுறியை நான் பொருட்படுத்தவில்லை. நான் முகம் கழுவிக்கொண்டதால் ஏற்பட்ட ஈரம் என்று நினைத்தேன். நிச்சயமாக ’ஹார்ட் ப்ராப்ளம்’ இருக்காது என்று பட்சி சொல்லியது. பட்சி முக்கியமான தருணங்களில் பொய் சொல்லும் என்று எனக்கு அப்போது தெரியாது!
அங்கே என் நண்பர் பேரா. ராஜா ஹுசேனும் இருந்தார். அது ரொம்ப வசதியாகப் போனது. உடனே அவருக்குத் தெரிந்த கார்டியாலஜிஸ்ட்டான டாக்டர் தெய்வசகாயம் என்பவரைப் பார்க்கச் சென்றோம். மருமகன் காரில் நானும், முதல்வரின் காரில் கலவரப்பட்டுப்போன சில பேராசிரிய நண்பர்களும்.
நான் முன் சீட்டில். ஷாஜித் காரை ஓட்டினார். மிக மெதுவாகத்தான் ஓட்டினார். ஆனால் ஒரு சின்னப்பள்ளம் அல்லது ’பம்ப்’பின் மீது கார் ஏறி இறங்கியபோது இதயத்தில் ஏற்பட்ட வேதனை சொல்லமுடியாததாக இருந்தது. இன்னும் கொஞ்சம் மெதுவாக ஓட்டும்படி அவரிடம் சொன்னேன். ஆனால் டாக்டர் க்ளினிக் செல்வதற்கு முன்னேயே வலி சுத்தமாக நின்று விட்டிருந்தது. எரிச்சலில்லை. ஒரு ’டல் பெய்ன்’ மட்டும், ஏதோ நெஞ்சுக்குள் அடைத்துக்கொண்டிருப்பதுபோல, இருந்தது.
டாக்டர் மனைவியும் டாக்டர். முதலில் நாங்கள் கொஞ்ச நேரம் காத்திருந்தோம். ராஜா ஹுசைன் சொன்ன பிறகு டாக்டர் மனைவி வந்து எனக்கு ஈஸிஜி எடுத்தது. வாழ்க்கையில் முதன் முறையாக அப்போதுதான் ஈஸிஜி எடுத்தேன். ரொம்ப ’ஈஸி பொரொசிஜர்’தான். கைகள்,கால்கள், நெஞ்சுப் பகுதியில் ஒரு ஜெல்லைத் தடவிவிட்டு, அதன்மீது ’பச்சக்’ என்று ஒட்டிக்கொண்டு பிடித்திருக்குமாறு சில குட்டிப்பந்துகளை ஒட்டினார்கள். கால்களுக்கும் கைகளுக்கும் ’கிளிப்’ மாதிரி. உடனே அவைகள் இணைக்கப்பட்டிருந்த ஒரு மெஷினிலிருந்து ஒரு ’ப்ரிண்டவ்ட்’ வந்தது. அதுதான் ’ஈஸிஜி ரிபோர்ட்’. பிறகு ’டிஷ்யூ’வால் துடைத்துவிட்டு எழுந்து உட்காரச் சொன்னார்கள்.
டாக்டர் வந்தார். ஒரு கால்மணி நேரம் ’லெக்சர்’ கொடுத்தார். ஆங்கிலத்திலேயே. கொஞ்சம் தேவையில்லாமல் அவர் பேசியதாகத் தோன்றியது. ’ஈஸிஜி நார்ம’லாக இருப்பதாகவும், ’ஹார்ட் ப்ராப்ளம்’ இருப்பதற்கான அறிகுறிகள் அதில் தென்படவில்லை என்றும், ஆனா ’நார்ம’லாக நாம் இதை எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர் சொன்னார்.
’பேஷண்ட் நார்ம’லாக இருப்பது டாக்டர்களுக்குத்தான் பிடிக்காதே – என்றேன் நான். அவர் என் பதிலால் கொஞ்சம் பேஜாராகிப்போனார். ஆனால் அதைக் காட்டிக்கொள்ளவில்லை. உடனே பெதஸ்தா அல்லது சிஎம்சி மருத்துவமனை சென்று நான்கைந்து மணி நேரம் ’அப்சர்வேஷ’னில் இருக்க வேண்டும், பின்னர்தான் முடிவு எடுக்க முடியும் என்று கூறினார்.
அப்படிச் செய்யப்போவதில்லை என்று அப்போதே நான் முடிவெடுத்துக்கொண்டேன். சளி, காய்ச்சல், நார்மலான பிள்ளைப் பேறு போன்ற ‘சீரியஸான’ விஷயங்களுக்கு மட்டும் பெதஸ்தா செல்லலாம். ஏற்கனவே குட்டியாப்பாவை பெதஸ்தாவிலும், சிஎம்சியிலும் காட்டிய அனுபவம் இருக்கிறது. சிஎம்சியின் ’ஃபார்மாலிடீஸ்’ நோயாளியையும், அவர் குடும்பத்தினரையும் கொல்லும் தன்மைகொண்டவை. பணம், பயமுறுத்துதல் – இவைகளை பிழைப்புக்கான ’டெக்னிக்’காகக்கொண்ட எந்த மருத்துவமனையிலும் நான் போய் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை.
சென்னைதான் இந்த மாதிரியான அவசரங்களுக்குச் சிறப்பான இடம். Cash-க்காகப் பார்க்கும் டாக்டர்களும், மருத்துவமனைகளும் நிறைய சென்னையில் இருந்தாலும், case-ஐ மட்டும் பார்க்கும் டாக்டர்களும் நிறைய இருக்கின்றனர். ஆனால் அவர்களை நமக்குத் தெரிய வேண்டும். அல்லது அவர்களைத் தெரிந்தவர்களைத் தெரியவேண்டும்.
அப்படி ஒருவர் எனக்குத் தெரிந்திருந்தார். பேராசிரியர் டாக்டர் ஸ்ரீதர். பச்சையப்பன் கல்லூரியில் கணிதத் துறையிலும் கணிணித்துறையிலும் தலைவராக இருந்தவர். பின்னர் நியூகாலேஜ் காம்ப்ளக்ஸில் உள்ள ஐ.டி. கல்லூரியில் கொஞ்சகாலம் முதல்வராக இருந்தார். விஞ்ஞானத்தில் ஊறிய ஆன்மிகவாதி. ஒவ்வொரு துறையிலும் இருக்கும் ’எக்ஸ்பர்ட் டாக்டர்’களை அவருக்குத் தெரியும். அவர் சொன்னால் மிகச்சரியாக இருக்கும். எனக்கு அவர்மீது அவ்வளவு நம்பிக்கை இருந்தது. இருக்கிறது.
அவருக்கு அலைபேசினேன். அவர்தான் டாக்டர் ப்ரும்மானந்தம் என்பவரின் எண்ணைக் கொடுத்தார். பெரிய ’ஸ்காலர்’ என்றும் இதய சிகிச்சை நிபுணர் என்றும், ’சர்ஜன்’ இல்லை என்பதால் எடுத்ததெற்கெல்லாம் அறுக்கவேண்டும் என்று சொல்லமாட்டார் என்றும் கூறினார். அவரைப் பற்றி எனக்கு விபரமாக மின்னஞ்சல் அனுப்பியிருப்பதாகவும் சொன்னார். நான் எண்ணைக் குறித்துக்கொண்டு ராஜாஹுசேனிடம் கொடுத்து ஒரு ’அப்பாய்ண்ட்மெண்ட்’ எடுத்து வைக்கச் சொன்னேன்.
அதுவும் என் குடும்பத்தினருக்காகத்தான். இதயம் தொடர்பான பிரச்சனைகள் நிச்சயம் இருக்காது. வெறும் ’காஸ்ட்ரோ’ பிரச்சனையாக இருக்கும் என்றுதான் நான் நம்பினேன். ஆனால் ஆம்பூர் ’க்ளினிக்’கிலிருந்து வீடு திரும்பியவுடன் கூடவே முதல்வரும் பத்துப்பதினைந்து பேராசிரிய நண்பர்களும் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். இங்கே போகலாம், அங்கே போகலாம் என்று அவரவர்க்குத் தெரிந்த டாக்டர்களின், ’க்ளினிக்’குகளின் பெயர்களையெல்லாம் சொன்னார்கள். ”அவரிடம் கேட்க வேண்டாம், அப்படியே தூக்கிக்கொண்டு போய்விடலாம்” என்றார் பேராசிரிய நண்பர் ஜோஸஃப். தயவுசெய்து எனக்கு மாலை வரை ஓய்வு கொடுங்கள், நான் கொஞ்சம் தூங்கி எழுந்துவிட்டுச் சொல்கிறேன் என்று அக்கறையான அவர்களையெல்லாம் அனுப்பிவைத்தேன்.
மறுநாள் சென்னைக்குக் காரில் சென்றுவிடலாம் என்று முடிவெடுத்தோம். ஆனால் மறுநாள் தீபாவளி என்பதால் ட்ரைவர் கிடைப்பது கஷ்டம். தானே காரை ஓட்டிவந்து, விட்டுவிட்டு வருவதாக ஆதில் கூறினார். மறுநாள் திட்டமிட்டபடி பகல் சாப்பாட்டுக்குப் பிறகு இரண்டு மூன்று மணியளவில் கிளம்பினோம். நான், மனைவி, இரண்டாவது மற்றும் மூன்றாவது மகள்கள் பின்சீட்டில். ஆதில் கார் ஓட்டினார். அவர் மனைவி அருகில்.
ஜாலியாக, பழைய கிஷோர்குமார், முஹம்மதுரஃபி ஹிந்திப்பாடல்கள் கேட்டுக்கொண்டே, பாடிக்கொண்டே, ’ஜோக்’-குகள் சொல்லிக்கொண்டே வந்தோம். ரொம்ப சாதாரணாகத்தான் இருந்தது. கொஞ்சம்கூட வலி இல்லை. மாலையில் ஃபஜிலா வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். இரவு அங்கேயே சாப்பிட்டுவிட்டு ஆதில் கிளம்பினார். நானும் பிறகு படுக்கச் சென்றேன்.
14, நவம்பர், 2012, புதன் காலை 04 – 8.30
காலை நான்கு மணியிருக்கும். நெஞ்சுக்கு உள்ளே மறுபடியும் பிரச்சனை தொடங்கியது. வலியும் எரிச்சலும். கொஞ்சம் கொஞ்சமாக நெருப்பின் தீவிரம் அதிகரித்தது. இதற்கு முன் வந்தது ஒரு அரைமணி நேரத்தில் அடங்கிவிட்டது. ஆனால் இந்தமுறை காலை ஆறரை மணியாகியும் அடங்கவில்லை. எரிச்சலின் வேகத்தில் நான் அடிக்கடி வாஷ் பேசினுக்குச் சென்று ’டாப்’பைத் திறந்து தண்ணீரைக் கையில் அள்ளியள்ளி நெஞ்சில் தடவிக்கொண்டேன். கொஞ்சம் இதமாகத்தான் இருந்தது. ஆனால் ஏதோ பிரச்சனை என்பது மட்டும் புரிந்தது.
காலை ஆறரை மணிக்கு ராஜாஹுசேனுக்கு அலைபேசினோம். அவர் ஏற்கனவே இன்றைக்கு ’அப்பாயிண்ட்மெண்ட்’ வாங்கி வைத்திருந்தார். டாக்டர் பெரிய டாக்டர் என்றும் விசாரித்துத் தெரிந்துகொண்டதாகக் கூறினார்.
என் இருபத்தைந்து ஆண்டுகாலக் கல்லூரி வாழ்க்கையில் இவ்வளவு அதிகாலையில் ராஜாவுக்கு அழைப்புக் கொடுத்ததே இல்லை. அவரும் நிச்சயமாக எடுத்திருக்க வாய்ப்பில்லை. முதன் முறையாக அப்படிச்செய்தோம். முதன்முறையாக அவரும் உடனே எடுத்தார். முதல்வரைக்கூட அலைபேசியில் பிடித்துவிடலாம், ஆனால் ராஜாவைப் பிடிப்பது கஷ்டம்! அவ்வளவு பிசி அவர்! அவரும் ட்ரைவர் வந்தவுடன் வந்துவிடுகிறேன் என்று சொன்னார். பேரா. நண்பர் ஃப்ரோஸ்கானுக்கும் சொன்னோம். அவரும் கிளம்பி வருவதாகச் சொன்னார்.
பிரச்சனை ஏற்பட்ட நாளிலிருந்தே எனக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்று ராஜாஹுசேனுக்குத் தோன்றிக்கொண்டே இருந்ததாக அவர் சொன்னதாக பின்னர் ஃபெரோஸ்கான் என்னிடம் கூறினார்!
ராஜா வந்து சேர்ந்தபோது மணி எட்டரை அல்லது எட்டே முக்கால் இருக்கும். நானும் இறங்கி தெரு முனையில் நின்றுகொண்டிருந்த காருக்கு நடந்தே சென்றேன். வீடு சரியாகத் தெரியாமல் ராஜா அங்கே காரை வைத்துக்கொண்டு காத்திருந்தார். நான், மனைவி, ஷாயிஸ்தா மட்டும்தான் சென்றோம். போய்ப்பார்த்துவிட்டு வந்துவிடுகிறோம் என்று சொல்லி ஃபஜிலா, மருமகன், மாமியார், கடைசி மகள் ஜெமீ ஆகியோரை விட்டுவிட்டுத்தான் சென்றோம்.
டாக்டர் ப்ரும்மானந்தம்
ஹபீபுல்லா சாலையில் இருந்த டாக்டர் ப்ரும்மானந்தத்தின் ’ஹெல்த் ஸ்பெஷாலிட்டி கேர்’ என்ற வீடு-கம்-க்ளினிக்குக்குச் சென்றபோது ஒன்பதேகால் இருக்கும். டாக்டர் மேலே தியானத்தில் இருப்பதாக தகவல் சொன்னார்கள்.
எனக்கு வலி அதிகமாகியது. ஒரு ஃபேனுக்குப் பக்கத்தில் உட்கார வைத்தார்கள். அங்கிருந்த கறுப்பு ஸ்டீல் நாற்காலியில் தலையைச் சாய்த்துக்கொண்டேன். டாக்டர் இருக்கும் இரண்டாவது மாடிக்கு உடனே ஷாயிஸ்தா ஓடிச்சென்று என் நிலையைச் சொன்னாள். அவர் ஒரு மாத்திரையைக் கொடுத்து என் நாக்கின் கீழ் வைக்கச் சொல்லிக்கொடுத்துவிட்டு, சீக்கிரம் வருவதாகச் சொல்லியனுப்பினார். இதயக்கோளாறு என்றே முடிவு செய்துவிட்டாரா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. ஷாயிஸ்தாதான் மாத்திரையை நாக்குக்குக் கீழே வைத்தாள். சில வினாடிகளுக்கெல்லாம் டாக்டர் வந்தார். நானே நடந்து உள்ளே சென்றேன். ஆனால் அதற்குள் நாற்காலியில் அமர்ந்திருந்த எனக்கு கண்கள் மேலே சொருகியதாக ஷாயிஸ்தா பின்னர் கூறினாள். டாக்டர் அறையில் நான், ராஜா ஹுசேன், கொஞ்ச நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த ஃபெரோஸ்கான் மற்றும் என் மனைவி.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
"Allah will reward you [with] goodness."
அன்புடன்,
முகம்மது அலி ஜின்னா
பூனைக்கும் அடி சறுக்கும்
by நாகூர் ரூமி
துவக்கம்மனைவியும் குழந்தைகளும் ஊருக்குப் போயிருந்தனர். ரெண்டு நாள் கழித்து,”எனக்கு லேசா நெஞ்சு வலிச்சிச்சு” என்று ஷாயிஸ்தாவிடம் (என் இரண்டாவது மகள்) சொன்னேன். மனைவியிடம் பேசாமல் மகளிடம் மட்டும் பேசினால் மனைவியிடம் கோபம் என்று அர்த்தம். நெஞ்சு வலித்தது என்னவோ உண்மைதான். ஆனால் அதை வலி என்று சொல்லிவிட முடியாது. வலியின் நிழல் நெஞ்சுப் பக்கமாக வந்து ஒரு சில கணங்கள் நின்றுவிட்டுப் போனது. ஊருக்குப்போன குடும்பம் சீக்கிரமாகத் திரும்பி வரவேண்டும் என்பதற்கான என் விளையாட்டு அது. ஆனால் இந்த முறை அந்த விளையாட்டு வினையாகுமென்று நான் நினைக்கவில்லை.

Monday, July 23, 2012
அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் நாகூர் ரூமி
அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
நாகூர் ரூமி பிறந்து வளர்ந்த ஊர் நாகூர்
நாகூரைச் சேர்ந்த படைப்பாளிகளில் கவிஞர் நாகூர் சலீம், வசனகர்த்தா தூயவன் ஆகியோர் நாகூர் ரூமியின் தாய் மாமாக்கள். சித்தி ஜுனைதா பேகம் ரூமியின் பெரியம்மா!
இப்போது ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றும் நாகூர் ரூமி, கம்பன் கவிதைகள் மற்றும் மில்டன் கவிதைகள் குறித்து பிஹெச்டி ஆய்வினை மேற்கொண்டவர்!
ஆங்கிலத்தில் ஐந்து, தமிழில் 27, மொழிபெயர்ப்பு ஆறு என இதுவரை 38 நூல்களை எழுதி இருக்கிறார் நாகூர் ரூமி!
இவர் எழுதிய இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூலுக்கு திருப்பூர் தமிழ்ச்சங்கம் விருது கொடுத்து கௌரவித்து உள்ளது. இவருடைய ஹோமரின் இலியட் காவியத் தமிழ் மொழிபெயர்ப்புக்காக திசையெட்டும் தமிழாக்க விருது பெற்றுள்ளார்
Thursday, July 5, 2012
என் ஊர்
by நாகூர் ரூமி
தான் பிறந்து வளர்ந்த ஊரான நாகூரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளர் நாகூர் ரூமி.ஆன்மிகம், இலக்கியம் இரண்டும் நாகூரின் இரு கண்கள் என்றால் மிகையல்ல. நாகூரில் தடுக்கி விழுந்தால் ஒரு புலவர் அல்லது பாடகரின் மேல் விழவேண்டும் என்றும் கூறுவார்கள். கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ராட்சச இலக்கிய ஆளுமைகள் 19-ம் நூற்றாண்டிலேயே வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிட்டே ஆகவேண்டியவர் குலாம் காதிர் நாவலர். நான்காம் தமிழ்ச்சங்கத்தின் நக்கீரர் என்றும் இவர் குறிப்பிடப்பட்டவர்.”வித்தியா விசாரிணி”, ”ஞானாசிரியன்” ஆகிய பத்திரிக்கைகளை 1888ல் நடத்தியவர்.
தமிழில் நாவல் எழுதிய முஸ்லிம் பெண்மணி மூன்றாவதுக்கு மேல் படிக்காத சித்தி ஜுனைதா பேகம். இவரது ”காதலா கடமையா” என்ற நாவல் 1938-ம் ஆண்டு உவேசா முன்னுரை, புதுமைப்பித்தன் வாழ்த்துரையுடன் வெளிவந்தது கமலப்பித்தன், ஹத்தீப் சாஹிப், அப்துல் கய்யூம், ஆபிதீன், சாருநிவேதிதா போன்ற படைப்பாளிகள் அனைவரும் நாகூர்க்காரர்கள்.
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கம்பராமாயண அறிஞருமான எம்.எம். இஸ்மாயீல், புலவர் ஆபிதீன் காக்கா, மூவாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி, ஐம்பதுக்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பாடகர்களை உருவாக்கிய கவிஞர் கலைமாமணி சலீம், கவிஞர், பேச்சாளர் இஜட் ஜபருல்லா, கவிஞர் இதயதாசன், நாகூர் இஸ்மாயீல் என்று இலக்கியம், கவிதை, நீதித்துறை, திரைத்துறை என பல பரிமாணங்களைக் கொண்ட படைப்பாளிகளின் பட்டியல் நீள்கிறது.
Tuesday, October 18, 2011
புதிய தலைமுறையில் நான் - by நாகூர் ரூமி
புதிய தலைமுறையில் நான்
நான் பழைய தலைமுறையைச் சேர்ந்தவனாகிவிட்டாலும் புதிய தலைமுறையோடு எனக்கொரு நட்பு ஏற்பட்டுவிட்டது என்னவோ உண்மைதான். ஆமாம். பா.ராகவனின் எழுத்தில் அல்லது தலைமையில் வாராவாரம் புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி சானலில் கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. (விரைவில் என்.டி.டிவி போன்ற தகுதி வாய்ந்த செய்தி ஒளிபரப்பு மீடியாவாக வருமென்று நம்ப வைக்கும் அளவுக்கு நன்றாகவே இருக்கிறது புதிய தலைமுறை).
சென்ற செவ்வாயன்று கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறுக்காக இயக்குனர் / தயாரிப்பாளர் விக்ரம், ஆங்கர் ஹரி ஆகியோருடன் புதிய தலைமுறையைச் சேர்ந்த ஒரு குழு ஆம்பூருக்கு வருகை புரிந்தது. ஆம்பூர் பிரியாணி பற்றியும் இஸ்லாமிய கலாச்சாரம் பற்றியும் ஒரு வீடியோ பதிவு செய்வதற்காக. நான் அவர்களுக்கு உதவினேன்.
ஒரிஜினல் ஆம்பூர் பிரியாணி ஆம்பூர் கடைகளில் கிடைக்காது. திருமணம் போன்ற வைபவங்களில் ஆம்பூரில் உள்ள ’பக்காத்தி’ (நாகூரில் பண்டாரி) எனப்படும் நளபாகர்களால் தயாரிக்கப்படும் பிரியாணிதான் ஆம்பூர் பிரியாணி. அப்படி ஒரு பக்காத்தி ஒருவரை ஏற்பாடு செய்யக் கேட்டேன். ஆனால் பக்காத்திகள் ஞாயிறுவரை ‘பிஸி’யாக இருந்ததால் அவர்கள் யாரையும் வைத்து ப்ரோக்ராம் எடுக்க முடியவில்லை.
எனவே ஆம்பூர் கடைகளில் கிடைக்கும் பிரியாணிகளிலேயே சிறந்ததாக உள்ள ஸ்டார் பிரியாணி முனீர் அவர்களிடம் பேசி ஏற்பாடு செய்தேன். அவரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். டிவி குழு வரும் வரையில் அடுப்பைக் கூட – என் வேண்டுகோளின்படி – பற்ற வைக்காமல் இருந்தார். காலை பத்து மணி நெருக்கத்தில் குழு வந்து சேர்ந்தது. இரண்டு மணி நேரத்துக்கும் மேல் வீடியோவும் பேட்டியும் எடுக்கப்பட்டது.(ஸ்டார் பிரியாணி முனீரின் சகோதரர் என் மாணவர்).
பின்பு பள்ளிவாசல்களைப் பற்றி கொஞ்சம் எடுக்கலாம் என்றார்கள். உடனே சின்ன மசூதி ஞாபகம் வந்தது. தமிழ் நாட்டில் உள்ள மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பள்ளிவாசல்களுக்குள்ள ஒரு சிறப்பு அதற்கு உள்ளது. அது புனர்நிர்மாணம் செய்யப்பட்டது 1968ல்.
பள்ளி வாசலுக்குள் நுழையுமுன் கீழ்க்கண்ட ஹதீஸ் பொறிக்கப்பட்டிருக்கும்:
மன் பனாலில்லாஹி மஸ்ஜிதன் பனல்லாஹு லஹு பைதுன் ஃபில் ஜன்னா
இந்த நபிமொழிக்கான அர்த்தம்:
எவர் அல்லாஹ்வுக்காக ஒரு பள்ளிவாசலை இந்த உலகில் கட்டுகிறாரோ, அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டிக் கொடுப்பான்
என்பதாகும்.
Saturday, July 16, 2011
அல்லாஹ்வின் தூதர் ஆட்சியாளர்களுக்கு அனுப்பிய கடிதங்கள்
இஸ்லாத்தின் வருகைக்குமுன் யூதம் கிறிஸ்தவம் ஆகிய இரண்டும் பிரதான மதங்களாக இருந்தன. ஆனாலும் அரேபியாவில் அவைகளால் வேறூன்ற முடியவில்லை. யூத மதத்தின் அணுகுமுறை எல்லாவற்றிலும் தீமையைக் காண்பதாக இருந்தது. தாங்கள் மட்டுமே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும், கடவுள் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும் யூதர்கள் நினைத்தார்கள். நபிகள் நாயகத்தின் காலத்தில் கிறிஸ்தவ மதத்தில் Trinity எனப்படும் முத்தெய்வக் கொள்கை வழக்கில் இருந்தது. இயேசுவை கடவுளின் மகன் என்று அம்மதம் சொன்னது. இயேசு திருமணம் செய்து கொள்ளாததால் ஆண் பெண் உறவு என்பதே ஏதோ அசிங்கமான ஒன்று என்ற தவறான எண்ணம் விதைக்கப்பட்டது. கன்னிப் பெண்களுக்கு திருமணம் செய்விக்காமல் அவர்களைத் துறவிகளாக, மடத்தில் கன்னிகாஸ்திரீகளாக சேர்த்துக் கொள்ளும் வழக்கமும் கொண்டிருந்தது.
நபிகள் நாயகமவர்கள் இறுதித் தூதர் என்பதால், குறிப்பிட்ட நாட்டோடோ, குறிப்பிட்ட மக்களோடோ அவர்களுடைய தூதுத்துவம் சுருங்கிப் போய்விடவில்லை. இஸ்ரவேலர்களில் வழிதவறிப் போனவர்களை நேர்வழிப்படுத்த தான் அனுப்பப்பட்டதாக இயேசு சொன்னதைப் போல பெருமானார் சொல்லவில்லை. இந்தியர்களுக்கு வேதங்களும், பாரசீகர்களுக்கு ஜென் அவெஸ்தாவும், யூதர்களுக்கு தௌராத்தும், ஹூத், சாலிஹ், மற்றும் இஸ்ரவேலர்களின் கூட்டத்தினரில் வழிகெட்டவர்களுக்காக இஞ்சீலும் அருளப்பட்டன.
ஆனால் மனிதகுலம் முழுமைக்கும் தான் நபியாக அனுப்பப்பட்டதாக பெருமானார் கூறினார்கள். அகிலம் முழுவதையும் மனித குலத்துக்கான ஒரு பெரிய நாடாக இஸ்லாம் பார்த்தது. பெருமானாருக்குக் கிடைத்த இறை அழைப்பில் எல்லா மனிதர்களுக்குமான பொதுத்தன்மை இருந்தது. ஹிமாலய பள்ளத்தாக்குகளிலேயோ, அல்லது சினாய் மலையின் உச்சிகளிலேயோ வாழ்ந்த ஒரு கடவுளை வணங்க முஹம்மது மனிதர்களை அழைக்கவில்லை. பிரபஞ்சத்தைப் படைத்துப் பரிபாலித்துக் கொண்டிருக்கும் ஓரிறைவனுக்கான அழைப்பு அவர்களது. அதன் நோக்கம் மனித குலம் அனைத்தையுமே உண்மையின் பால் திரும்பச் செய்வது.
Subscribe to:
Posts (Atom)