வானவில்லாய் உன் புருவங்கள் கொடை பிடிக்க
நீல நிற மீன் களின் கரு விழிகளாய்
உன் விழிகளின் பார்வை பல இடம் சென்று வர
மென்மையான தென்றலை உள்வாங்கி
சூட்டோடு வெளியாகும் காற்றினால்
உன் நாசி சூடாகியதால் சிகப்ப வண்ணமாய் காட்சியளிகின்றது
ரோஜா மலரின் இதழ்கள் விரிவதுபோல்
விரியும் உன் வாய் இதழ்கள்
முத்துச் சிதருவதுபோல் வார்த்தைகளை உதிர்கின்றன
உதிரும் சொற்கள கோர்வையாய் கவிதையை தருவதால்
ஆப்பிள் நிற மென்மையான தாமரை கண்ணங்கள்
சிகப்பு ரோஜா வண்ணமாய் மாறுகின்றன உவகையால்
வார்தைகள் கவிதையாய் வந்தமையால் வாயசைத்து
ஓசை எழுப்பி பாடல்களைப் பாட
வெண்டைக்காயை ஒத்த மென்மையான் விரல்கள்
வீணையைத் தேடாமல்
வாழைத்தண்டு ஒத்த உன்
தொடை மீது தாளம் போடுகிறது
இயல்பாய் இசை மீது உன்னிடமிருக்கும் காதலால்
1 comment:
மலர்கள் , காய்கறிகள் என் ஒப்பீடு...! ரசித்தேன்...
வாழ்த்துக்கள் ஐயா...
Post a Comment