கசடில் கரைந்து போகாமல்
உள்ளம் உறைந்து நிற்கிறது
கசடுகளை கொட்டியதால் கரைகள் நிறைந்து விட்டன
உள்ளத்தில் உள்ள உய்ர்வானதை கொட்ட இடத்தைக் காணோம்
ஊமையாய் உலகில் நடக்கும் அவலங்களை அழிப்பதற்க்கே நாட்கள் போதவில்லை
மெளனமாய் காலத்தை வேலையில் ஈடுபடுத்தி நிற்குமிடமும் நாற்றம் வீசுகிறது
அரசும் ஆதரவு தரவில்லை
உடனிருக்கும் மானிடரும் கண்டு கொள்வதில்லை
சங்கம் அமைத்தால் சேருவார்கலாம்
இருக்கும் சிக்கலை அவிழ்க்க 'அல்லோலப் ' படும் நிலை
இந்நிலையில் என்று நான் சங்கம் அமைத்து இவர்களை சேர்ப்பது
சங்கம் அமைத்தபின் தலைவர் போட்டி நிகழும்
தலைவர் வந்த பின் அவர் அசிங்கமாக பணத்தை நாடி ஓடுவார்
நாறட்டும் நாற்றம் கொண்டு வியாதிகள் பெருகட்டும்
நாற்றம் பெருக நடுத் தெருவுக்கு வரட்டும்
தலைவன் திண்டாட
நல்வழி தானே புரட்சியால் வரட்டும்
நாற்றத்தில் பழகிப் போன காலம் மாறும்
No comments:
Post a Comment