Showing posts with label வீடியோ. Show all posts
Showing posts with label வீடியோ. Show all posts

Tuesday, February 18, 2014

அகம் நீயே யுகம் நீயே


அகம் நீயே
யுகம் நீயே

வரம் நீயே
சுகம் நீயே

கடும் புனலாய் காதல் வளர்த்தேன்
சுடும் அனலாய் தேகம் கொதித்தேன்



மனசும் மனசும் சேருமா
மௌன மாகப் பேசுமா
பனியில் பூசும் வண்ணமாய்
அழியுமா ?

இரவு பகலைத் தின்னுமா
விழிகள் கனவில் மின்னுமா
உறக்கம் போன பின்னுமா
மயக்கமா ?

Saturday, December 21, 2013

“சுழற்சி”

குருதியின் சுழற்சி ஆக்ஸிஜன் கூட்டம்
..............குதித்திடும் இதயமும் ஓட்டம்
கருவினில் சுழற்சிக் குழந்தையாய் ஆக்கம்
................கருதிடும் தாய்மையின் நோக்கம்
மருவிலா மதியின் சுழற்சியால் தேயும்
.........வளர்ச்சியும் பிறையெனக் காயும்
உருவிலே வளர்ச்சி; சுழற்சியின் மாற்றம்
......உணர்த்திடும் முதுமையின் தோற்றம்

Friday, November 29, 2013

கூகுளின் யுடியூபில் பாடல் வரிகள் காட்ட

 யுடியூபில் பாடல் வரிகள் காட்ட

கூகுளின் யுடியூப் (Google youtube) பிரபலமான வீடியோ தளமாக இணையத்தில் இருக்கிறது. பெரும்பாலானோர் எந்த வகை வீடியோ அல்லது பாடல்கள் பார்ப்பது என்றாலும் யுடியூப் பக்கமே செல்வார்கள். இதில் வீடியோ பாடல்கள் அதிக
அளவில் பார்க்கப் படுகின்றன. உலகெங்கும் உள்ள வீடியோக்கள் இருப்பதால் உலகளவில் பிரபலமான மைக்கேல் ஜாக்சன், ஜெனிபர் லோபஸ், ஷகிரா போன்ற பாடகர்களின் பாடல்களைத் தேடி எடுத்து பார்த்து விடலாம்.
ஆனால் சிலருக்கு ஆங்கில வீடியோக்களைப் பார்க்கும் போது அதன் பாடல்  புரியாமலே இருக்கும். பாடல்வரிகள் வேண்டுமென்றால் மெனக்கெட்டு அதனை முன்னும் பின்னும் ஓடவிட்டு கேட்பார்கள். இல்லையெனில் இணையத்தில் குறிப்பிட்ட பாடலை வைத்து வரிகளைத் தேடுவார்கள்.

Friday, August 2, 2013

ஒரு மில்லியன் திர்ஹத்தை நன்கொடையாக ...

துபாய் அரசால் வழங்கப்படும் சிறந்த ஆளுமைக்கான விருதுக்கு வழங்கப்பட்ட ஒரு மில்லியன்  திர்ஹத்தை பீஸ்  டிவிக்கு நன்கொடையாக வக்ப் செய்தார் – டாக்டர் ஜாகிர் நாயக்.

Friday, December 21, 2012

நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும்.


நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
-திருக்குர்ஆன் 3:104

"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.

-திருக்குர்ஆன் 13:11

"செவி, பார்வை, இதயம் இவை ஒவ்வொன்றும் மறுமை நாளில் அதன் செயல் பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படும்."

திருக்குர்ஆன் 17:36

''இறந்தவரை மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. அவை அவனது குடும்பம், அவனது சொத்து, அவனது செயல்கள் ஆகும். இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டும் தங்கி விடுகிறது. அவனது குடும்பமும், அவனது சொத்தும் திரும்பி விடுகின்றன. அவனது செயல் தங்கி விடுகிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரளி)
நூல்கள்: புகாரி , முஸ்லிம்


"உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்,) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது; (இவன் அல்லாது) அது வாயை அடைந்து விடாது – இன்னும் நிராகரிப்போர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை".

-திருக்குர்ஆன் 13:14

Saturday, October 13, 2012

அவசியம் பார்க்கவேண்டியதொரு காணொளி

சகோ. நீடூர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தனது வலைப்பக்கத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சி ஓடையில் நமது Dr.கேவிஎஸ் ஹபீப் முஹம்மது கலந்துகொண்ட நேர்படப் பேசு  நிகழ்ச்சியை பதிவு செய்துள்ளார்.



http://seasonsnidur.blogspot.in/2012/09/blog-post_19.html

மேலும், அவசியம் பார்க்கவேண்டியதொரு காணொளி

சகோ. ஆளூர் ஷாநவாஸ் பேசிய உரை:


 H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953 / 050 1207670
www.ezuthovian.blogspot.com
www.mypno.com

Sunday, June 17, 2012

சாப்பிடுங்கள் .அறிந்துகொள்ளுங்கள் நகருங்கள்


 உணவு உடல் உறுதிக்கு .அவசியம் அறிவு மூளைக்கு இன்றியமையாதது . அசைந்து ,நடந்து மற்றும் ஓடி உடலை உறுதிப் படுத்திக் கொள்வதும் அவசியம் படித்தல் மனதை தூண்டுகிறது,உடற்பயிற்சி உடலை உறுதிப்படுத்துகிறது Reading Is To the Mind What Exercise Is To the Body. இத்தனையும் இங்கே தரப்பட்டுள்ள காணொளிகள் மகிழ்வை தரும்

Friday, May 11, 2012

வாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்!


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.
வாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

. இதற்கு “தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!” என்கிற அழகான பொருள்.

ஒருவர் நமக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று சொல்லும் பொழுது நாம் அவருக்கு
வஅலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு  என்று பதில் சொல்வது நமது கடமையாகும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ” இருவர் சந்தித்துக் கொள்ளும் போது யார் முதலில் ஸலாம் சொல்லி (பேச) ஆரம்பிக்கிறாரோ அவரே உங்களில் சிறந்தவராவார்”. அறிவிப்பாளர்: இமாம் அந் நவவி:
 ” இருவர் சந்தித்துக் கொள்ளும் போது யார் முதலில் ஸலாம் சொல்லி (பேச) ஆரம்பிக்கிறாரோ அவரே உங்களில் சிறந்தவராவார்”. அறிவிப்பாளர்: இமாம் அந் நவவி அவர்கள்.

உலகப் பார்வையுடன் துபாய் அன்றும் இன்றும் அதன் வரலாறும்

 உலகப் பார்வையுடன் துபாய் அன்றும் இன்றும் அதன் வரலாறும்  ழ
பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபு . இது அனைத்து மக்களுக்கும் மற்றும் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்  ஆனால் இன்னும் சில நாடுகளும் அதன் மக்களும்  பழைய பழக்க வழக்கங்களை விடாமல் விடாப் பிடியாக பிடித்துக் கொண்டு வாழ்பவர்களும் உள்ளனர் . நாம் மாறிவிட்டாலும் மாற்றத்தையும் தொடர்ந்து செய்து வருகின்றோம் . சில  நாடுகளில் மக்கள் மனது பழைமை விரும்பியாக இருந்து அதன் கலை  கலாச்சாரங்கள் அழிந்துவிடக் கூடாது என்ற நல்ல நோக்கத்தோடு பழமையான கட்டிடங்களை அது அழிந்து விடாமல் பாதுகாத்து வருகின்றனர்அந்த கட்டிடங்கள் வீணடித்து விடாமல் சரி பார்த்தாலும் அது  உருவாக்கிய நிலையிலேயே  காட்சி தரும். இந்த இடத்தில நமது தமிழ்நாடு நிலைமையை பார்த்து தெரிந்துக் கொள்வதும் நல்லது.   கோவில்களை,பள்ளிவாசல்களை மற்ற வணக்கஸ்தளங்களை    நினைவு கொள்ளவேண்டும். பழைமை வாய்ந்த சில கோவில்களை,
பள்ளிவாசல்களை மற்ற வணக்கஸ்தளங்களை அழகாக காட்சி தர வேண்டும் என்ற  எண்ணத்தோடு புதிய வண்ணங்கள் பல வகைகளில் கொடுத்து பழமையான முற்காலத்தில் கட்டப்பட்ட நிலையிலிருந்து மாற்றம் உண்டாகிவிடுகின்றனர். இது மிகவும் வருந்த வேண்டியதாக இருக்கின்றது. ஆயிரக்கனக்கான  வணக்கஸ்தளங்கள்  உண்டாக்கப்படுகின்றன  (வணங்குவதற்கு,தொழுவதற்கு ஆள் இல்லையென்றாலும்)   சவூதி அரேபியாவில் மிகவும் கொடுமை. அங்கே வரலாற்று கட்டிடங்கள் ஒன்றும் பார்க்க முடியாது( ஒரு சிலவற்றைத் தவிர குறிப்பாக கஹ்பா,சஹாபாக்கள் அடங்கியுள்ள இடம், நபிகள் நாயகம் அடங்கியுள்ள இடம் ) நாயகம் வாழ்ந்த வீடு மற்ற வரலாற்று முக்கிய இடங்களை தகர்த்து விட்டார்கள் . இது  மிகவும் வேதனையான நிகழ்வாகும்.

Monday, April 30, 2012

ஆயிஷா

கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல்பரிசு பெற்ற நூல் ஆயிஷா. இரா.நடராசன் அவர்கள் எழுதிய ஆயிஷா என்ற அற்புதமான கதை ஏப்பிரல் 2005ல் பாரதி புத்தகாலயம் சிறுநூலாக ரூ5/- விலையில் வெளியிட்டிருந்தது.  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்ட ஏன்? எப்படி? என்ற நூலிலும் இந்தக்கதை முதல் பக்கத்தில் உள்ளது. ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரையாக இந்தக்கதை அமைந்திருக்கும். இதுவரை எட்டு மொழிகளில் இக்கதை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்றுள்ளது.  இந்தக்கதையின் வீடியோ வடிவம் தமிழ்நாட்டிலுள்ள ஒன்று முதல் எட்டுவரை வகுப்பு எடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களுக்கான குறுவளமையப் பயிற்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஏனைய பிற ஆசிரியர்கள் மற்றும் அனைவரும் இந்த குறும்படத்தினை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.
Read more: http://alaiyallasunami.blogspot.com/#ixzz1tVS2ch4Z

 ஆயிஷா கதையினை தமிழில் டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும். ஆங்கிலத்தில் டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

இரா.நடராசன் எழுதிய ஆயிஷா கதையினை வாசிக்கும்போது ஏற்பட்ட அதே உணர்வு படம் பார்க்கும்போதும் ஏற்படும் விதத்தில் அருமையாக குறும்படம் தயார் செய்யப்பட்டுள்ளது. படக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள். தமிழ்நாட்டிலுள்ள ஒன்று முதல் எட்டுவரை வகுப்பு எடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களுக்கான குறுவளமையப் பயிற்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஏனைய பிற ஆசிரியர்கள் மற்றும் அனைவரும் இந்த குறும்படத்தினை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.அனைவரின் பாராட்டினையும் பெற்ற ஆயிஷா குறும்படத்தினைத் தயவுசெய்து பொறுமையாகப் பாருங்கள்.

Tuesday, April 24, 2012

வீட்டை கட்டிப் பார் கல்யாணம் செய்துப் பார்!

                 வீட்டை கட்டிப் பார்  கல்யாணம் செய்துப் பார்!
  மனிதனுக்கு வேண்டியது இருக்க இடம் ,குடிக்க நீர் , சுவாசிக்க காற்று. இவைகள் அத்தியாவசிய தேவைகள் ஆனால் திருமணம் செய்தால்தான் அவனது வாழ்வு முழுமையடையும்.
   
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திருமணம் எனது வழிமுறை (சுன்னத்) ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல.  

  இக்காலத்தில் வீடு கட்டுவது அனைத்தையும் விட மிகவும் கடுமையான செயலாக இருக்கின்றது. வீடு கட்டுவதற்கு அனைவருக்கும் விருப்பம்தான் அதிலும் திருமண ஆனவுடன் பெண்களுக்கு அதில் நாட்டம் அதிகமாக இருக்கும். அதற்கு வேண்டிய முதல்படியாக இருக்கவே இருக்கின்றது 'தலையணை மந்திரம்'. ஏன் அந்த நாட்டம் வந்தது! வெவ்வேறு இடத்திலிறுந்து வந்த மருமகள்கள் குணத்தில் மாறுபட்டவர்களாக இருப்பார்கள். சகோதரிகளுக்குள்  உள்ள ஒட்றுமை மற்ற பெண்களிடம் இருப்பது அபூர்வம். அதற்குத்தான் சிலரது வழக்கமாக இருப்பது மாமனார் வீட்டோடு மாப்பிள்ளைகள் குடியேறிவிடும் பண்பாடு.   இது கடற்கறையோரம் வாழும் மறைக்காயர்களிடம் உண்டு.
வீடு கட்டவில்லையென்றால் வாடகை வீட்டிற்கு குடிபோய் விடும் நாட்டம் வரும். வீடு கட்டி முறையாக மற்றவர்கள் தவறாக பேசாதபடி  விரைவில் குடிபோய் விடலாம் என்ற உண்மையையோ அல்லது பொய்யையோ மனைவியை சமாதானம் செய்து சமாளிப்பவர்கள் ஏராளம்.
  சிங்கப்பூர் வாழும் சீனர்கள் படிக்க வைப்பதோடு சரி பின்பு அவரே வேலை தேடிக் கொள்ளவேண்டும். திருமணம்  ஆன   பின்பு தனிக் குடித்தனம் சென்று விடுவார்கள். வாரம் ஒரு முறை ஒன்று  கூடி ஓரிடத்தில் இருந்து மகிழ்வார்கள். அதனால் அவர்கள் அன்பு தொடர வாய்புகள் அதிகமாக உள்ளது.நாமும் அந்த முறையைக் கையாலாம்.

Monday, April 23, 2012

விரிவடையும் பிரபஞ்சம் + யுனிவர்ஸ் 2 அளவு பாருங்கள்!

      وَاسَّمَاءَ بَنَيْنَهَابِاَيْدٍ وَّاِنَّالَمُوْسِعُوْن َ மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்” (51:47)

நாம் வாழும் பூமிப்பந்தானது நமது சூரிய குடும்பத்தின் நவகிரக உறுப்பினர்களில் ஒன்றாகும். நமது பூமியை விட பல மடங்கு பெரிய கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. நமது சூரியன் ஒரு நட்சத்திரம். இதேப்போன்று கோடானுக் கோடி நட்சத்திரங்கள் இந்த விண்ணில் வலம் வருகின்றன. இரவில் வானத்தை அண்ணாந்துப் பார்த்து, நட்சத்திரங்களின் அழகை கண்டு நாம் வியந்து போற்றுகின்றோம்.

    நம் விழிகளில் வியப்பை தேக்கி வைக்கும் இந்த அழகிய விண்மீன் கூட்டங்கள் எந்தவித ஒழுங்கமைப்பும் , கட்டுப்கோப்பும் இன்றி வானில் சிதறிக் கிடப்பதில்லை. அவை கட்டமைப்பிற்குள் செயல்பட்டு, கீழ்படிந்து இயங்கி வருகின்றன.

    எல்லையில்லாமல் அகண்டு விரிந்துக் கிடக்கும் இந்த அண்டவெளி வெற்றிடத்தில், நட்சத்திரங்கள் ஒரு  குழுவாக  வாழ்ந்து வருகின்றன. சிறிய, பெரிய  குழுக்கள் பலவற்றை  உள்ளடக்கி  இருக்கும் இந்த விண்மீன்  குழுக்கள் யாவும் ஒன்று மற்றொன்றோடு தொடர்புக் கொண்டவை. ஒன்று மற்றொன்றை தன்பால் ஈர்த்துக் கொண்டும், மற்றவற்றால் ஈர்க்கப்பட்டும், இணங்கி இணைந்து இயங்குகின்றன.

    “………the total number of stars in the universe is probably something like the total number of grains of sand on all the seashores of the world. Such is the littleness of our home in space when measured up against the total substance of the universe.”
    “உலகில் உள்ள எல்லா கடற்கரைகளிலும் எவ்வளவு மணற் துகள்கள் நிறைந்து உள்ளனவோ, அதைப் போன்றதொரு தொகை கொண்டதாகவே இந்த பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள் யாவும் திகழ்கின்றன.

Wednesday, April 4, 2012

நம் தொலைபேசியும்,செல்போனும் நம்மைப்பற்றி வெளிப்படுத்துவது என்ன!

உங்கள்  தொலைபேசியை நீங்கள் கவனமாக கையாளவில்லையென்றால் அது உங்கள் வாழ்வையே திருப்பி போட்டுவிடும் . நீங்கள் சேர்த்து வைத்த விபரங்கள் அனைத்தும் உங்கள் பாதுகாப்பிலிருந்து நழுவவிடாமல் இருக்க உங்கள்  தொலைபேசியை பாதுகாப்பில் வைத்திருப்பதுடன் முன்னெச்சரிக்கையாக   அதில் இருக்கும் விபரங்களை வேறு ஒரு இடத்தில் சேமித்து வைத்திருங்கள். மிக முக்கியமான அழைப்புக்களுக்கு மட்டும் பதில் கொடுக்க அதனை கையாளுங்கள், அடுத்தவர் கையில் அதனை கொடுக்கும்போது அது உங்கள் பார்வையிலேயே இருக்க வேண்டும்.அதில் உள்ள முக்கிய விபரங்களை  திருடவும்,அழிக்கப்படவும் வாய்புகள் உண்டு . குழந்தைகள் கையில் இருக்கும்போது அது விளங்காமல்,விளையாட்டாக பல தவறுகள் செய்து விடலாம்.

முக்கியமாக களவு போய்விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

உங்கள் உதவிக்கு ஒரு விளக்கப்படம் தரப்பட்டுள்ளது

Tuesday, April 3, 2012

9/11 இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றி Dr. ஸப்ரொஸ்கி தரும் தகவல்

"உலக வர்த்தக மையம் மீது தொடுக்கப்பட்ட 9/11 தாக்குதலின் பின்னணியில் இருந்தது இஸ்ரேல்தான். அமெரிக்க மக்களுக்கு இது ஐயமின்றித் தெரியவரும்போது, இஸ்ரேல் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலமாகிவிடும்" என அமெரிக்கக் கடற்படைத்துறை நிபுணரும் பிரபல எழுத்தாளருமான ஸப்ரொஸ்கி உறுதியாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற வளவாளரும் எழுத்தாளருமான அலன் ஸப்ரொஸ்கி மேலும் குறிப்பிடுகையில், "கடந்த இரு வாரங்களாக கப்பற்படைத் தலைமையகத்தில் உள்ள இராணுவக் கல்லூரியுடன் தொடர்ச்சியான நீண்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவந்தேன். அதன் விளைவாக, 9/11 தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேலிய மொசாட் இருப்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்திக்கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 Read more about இஸ்ரேல் நடத்திய இரட்டைக் கோபுரத் தகர்ப்பு" - அமெரிக்க அதிகாரி திடுக்கிடும் தகவல்
 Source : www.inneram.com 
 மேலும் படிக்க  இங்கு கிளிக் செய்யுங்கள் 

Saturday, March 24, 2012

துபாய் சர்வதேச அமைதி மாநாடு DIPC 2012 Promo (ENG)

துபாயில் நடைபெற இருக்கும் சர்வதேச அமைதி மாநாடு
Dubai International Peace Convention is being organized by Mohammed Bin Rashid Al Maktoum Award for World Peace (Government of Dubai) in association with Al Manar Center in partnership with Islamic Affairs & Charitable Activities Department (IACAD). DIPC 2012 will be a 3 day event to be held on 12th 13th & 14th April 2012 at Dubai World Trade Centre, Dubai. For further details, kindly logon to http://www.peaceconvention.com/

Friday, January 13, 2012

தலைவாரிப் பூச்சூடி உன்னை...

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை!

சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்து கின்றாய்?

விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி
வேளைதோ றும்கற்று வருவதால் படியும்!

மலைவாழை அல்லவோ கல்வி? - நீ
வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி!

படியாத பெண்ணா யிருந்தால் - கேலி
பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால்!

கடிகாரம் ஓடுமுன் ஓடு! - என்
கண்ணல்ல? அண்டை வீட்டுப் பெண்களோடு.

கடிதாய் இருக்குமிப் போது! - கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியுமப் போது!

கடல்சூழ்ந்த இத்தமிழ் நாடு - பெண்
கல்விபெண் கல்விஎன் கின்றதன் போடு!

-பாரதிதாசன்

Thursday, December 22, 2011

சுவையான ரசம் உடல் வளமாக இருக்க. (வீடியோ இணைப்புடன்)

ரசம் செய்வதற்கான எளிய சமையல் குறிப்பு...பருகுவதற்கும், உணவில்  ஊற்றி சாப்பிடுவதற்கும் நல்ல ஜீரணத்திற்கும் சுவையான ரசம்.





Black Pepper also has great anti-inflammatory, anti-bacterial and anti-oxidant properties. It stimulates absorption of several micronutrients in the body such as coenzyme Q-10, beta-carotene and EGCG (a powerful anti-oxidant).
Modern science has shown that garlic is a powerful natural antibiotic, albeit broad-spectrum rather than targeted. The bacteria in the body do not appear to evolve resistance to the garlic as they do too many modern pharmaceutical antibiotics. This means that its positive health benefits can continue over time rather than helping to breed antibiotic resistant "superbugs".
For more info pls visit:
http://www.grannytherapy.com

Wednesday, November 9, 2011

பார்த்தும் பாராமல் இருக்க மனமில்லை !



புன்னகைக்கின்றேன் பார்த்தும் பாராமல் இருக்க நினைத்தால்!

SEASONS CHANGE AND SO DO WE.

"He who does not travel does not know the value of men." -- Moorish proverb
"Love is the only flower that grows and blossoms Without the aid of the seasons." - Kahlil Gibran quotes


"A journey of a thousand miles must begin with a single step." -- Lao Tzu


"Travel and change of place impart new vigor to the mind." -- Seneca


"A wise traveler never despises his own country." -- Carlo Goldoni
You cannot change the circumstances, theseasons , or the wind, but you can change yourself. That is something you have charge of." Jim Rohn