நண்பர்களே உங்களுக்கு வாழ்த்துகள்
பாசமானவர்களே உங்களுக்கு பரிவுகள்
நமது ஒவ்வொரு நற்செயலும் மறுமையில் நமக்கு பயனளிக்கும் என்பதை நினைவில் கொள்வோம் ,
எனவே எப்போதும் நல்லவர்களாகவும் கனிவாகவும் இருப்போம் .
நம்மைச் சுற்றியுள்ள அனைவரின் உரிமைகளையும் பூர்த்தி செய்ய முயல்வோம்
.எங்கிருந்தாலும் மனத்தால் ஒன்றுபட்டோம்
மலைகளும் அலைகளும் நம் பாசங்கள் பிரிக்கப்படாது
இருப்பினும் தொடர்புகளை தொடரச் செய்வோம்
வாழ்த்துங்கள். வாழுங்கள். வாழ விடுங்கள்.
வாழ்த்துகள் மகிழ்வை தருகின்றது
வாழ்த்துகள் வயதை உயர்த்துகின்றது
வாழ்த்துகள் பண்பட வைக்கின்றது
வாழ்த்துகள் மனித நேயத்தை தருகின்றது
வாழ்த்துகள் உந்து சக்தியை தருகின்றது
வாழ்த்துகள் வரவேற்பை தருகின்றது
இறைவனை வாழ்த்திதான் வேண்டுகின்றோம்
இயலாதவனயும் வாழ்த்தும்போது வாழ்கையை விரும்புகின்றான்
வாழ்த்துவதில் நாளென்ன! கிழமையன்ன!
வாழ்த்துவதில் ஜாதியென்ன! மதமென்ன!
வாழ்த்துபவர் மனிதஇனம் தானே.
வாழ வழியை காட்டியதுதானே மார்க்கங்கள்
வாழ்த்துவதற்கு வாழத்தானே வேண்டும்
வாழ்பவனை வீழ்த்த விரும்புபவன் வாழ்த்த முடியுமா!
வாழ்த்துவதை வாழ்நாள் வரை தொடரவேண்டும்
வாழ்த்தும் மனிதரும்
வாழ்த்தை வரவேற்கும் மனிதரும்
வையகத்தில் வாழும்வரை
வையகத்தில் வாழும் மனிதரை வீழ்த்த மனம் வருமோ !
வாழ்வெல்லாம் வாழ்த்தி வாழ்வோம்
வாழ்த்துகளை வாரி வழங்குவோம்
வாழ்த்துகள் சொல்வது விளையாட்டாக இருக்கலாம்
ஏதிர்பாராத வாழ்த்துக்கள் கிடைத்தவர்
விரும்பியே வாழ்த்துகளை பதிலாக சொல்லிவிடுவார்
ஆயிரம் சொற்களை ஆயிரம் பேர்களிடம் சொன்னாலும்
ஆயிரத்தில் ஒருவர் மனதிலாவது அது உறைந்து நிற்கும்
ஆயிரம் பேர்கள் சொன்ன வாழ்த்துகளில்
ஆயிரத்தில் ஒருவர் சொன்ன வாழ்த்தாவது நம்மை உயர்த்தி நிறுத்தும்
இறைவனால் உயர்வாக்கப் பட்டவர் அவராக இருக்கலாம்
நாம் சொல்வது சாதாரணம்
நமக்கு கிடைப்பதோ உயர்வானது
வாரி வழங்குங்கள் வாழ்த்துகளை
வாழ்த்துகள் சொல்வதற்கு காலமும் நேரமுமில்லை
எக்காலமும் எந்நேரமும் வாழ்த்துகளுக்கு பொருந்திய நேரங்கள் தான்
சிக்கனம் வேண்டாம் வாழ்த்துகள் சொல்வதில்
நடந்த காலங்களுக்கு நன்றி
நிகழ்பவையெல்லாம் நன்மையாக அமைய இறைவனை வேண்டுவோம்
(விசுவாசிகளே)! மார்க்க வியத்தில் உங்களுடன் எதிர்த்து யுத்தம் புரியாத, உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளிப்படுத்தாதவர்களுக்கு நீங்கள் கருனை காட்டி நன்மை செய்ய வேண்டாமென்றோ, அவர்களுடன் நீங்கள் நிதானமாக நடந்து கொள்ளக் கூடாதென்றோ அல்லாஹ் உங்களை தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிப்பவனாகவே இருக்கிறான். (அல் குர் ஆன்)
*May Allaahu ta'aala Bless Yous with the Best of His Blessings* & *Show yous the straight path, The path of His Righteous slaves*...
*Alhamdulillaah* ....
*Fe amaanAllaah* ...
*Tawakkalthu alallaah* ....
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْراً وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
*Rabbanā 'Afrigh `Alaynā Şabrāan Wa Thabbit 'Aqdāmanā Wa Anşurnā `Alá Al-Qawmi Al-Kāfirīn*
*Our Lord*, *pour down upon us patience*, and *make our steps firm* and *assist us against the unbelieving people*.
*Aameen*
Mohamed Ali
No comments:
Post a Comment