இசைப் புயலின் வாழ்வில் ஒரு
சோகப் புயல்!
கட்டுரையின்
மூன்றாம் பாகம்:
03-01-2021 ஞாயிற்றுக்
கிழமை
-அன்பு
முகநூல் நண்பர்களே!
சகோதர சகோதரிகளே!
உங்களுடன்
அன்பன் காஞ்சி அப்துல் ரவூப்
பாகவி:
31-12-2020 வியாழக்
கிழமையன்று இட்ட இரண்டாம் பதிவில்
திரு. ஏ. ஆர். ரஹ்மான்
அவர்கள் மீது பிரபல வார
இதழ் ஒன்று சேற்றை வாரி
இறைத்து அவரைக் குறித்து அவதூறான
செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது என்றும்
அதனை வாசித்த தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்து
விட்டது என்றும்
சொன்னேன் அல்லவா?
அதிர்ச்சியூட்டிய
அந்தச் செய்தி
இதுதான்:
ஏ. ஆர், ரஹ்மான் அவர்களுக்கும்
வன்முறையாளர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுக்கு
அவர் மூலம் நிதியுதவி கிடைப்பதாகவும்
மிகவும் கொச்சையான உண்மைக்குப் புறம்பான ஒரு செய்தி தான்
அது.
ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின்
அமைதி ததும்பும் சாந்தமான
குணத்தையும் அதிர்ந்து கூட பேசத்தெரியாத
மென்மையான பண்பையும் தமிழர்கள் அனைவரும் அறிவார்கள். அவர் எவரையுமே தம்
எதிரியாகக் கருதாத,
எவர் மேலும் வன்மம் கொள்ளாத
ஒரு பண்பினர். சாதி மத பேதம்
பார்க்காத உயர் பண்பு கொண்டவர்.
இவற்றையெல்லாம்
மக்கள் அனைவரும் அறிந்திருந்த காரணத்தினால் தான் அவ்வளவு அதிர்வலைகளை அந்தச் செய்தி ஏற்படுத்தியிருந்தது.
சொல்லப் போனால் எவருமே அதை
நம்பவில்லை. உண்மையில், . அந்த வார இதழ்
இந்த அபாண்டமான குற்றச்சாட்டை அவர் மீது அள்ளி
வீசித் தனது பெயரைத் தான்
இந்த கெடுத்துக் கொண்டது.
ஏ. ஆர். ரஹ்மான் அவர்களுக்கும் இது பலத்த அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் அல்லவா? ஆம், அந்தச் செய்தி அவருக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுக்கத்தான் செய்தது.
எனவே தான், அந்த அவதூறை
அந்த வார இதழ் வெளியிட்ட அடுத்த நாளே ஏ.
ஆர்.. ரஹ்மான் அவர்கள் பிரபல
நாளிதழான தினத்தந்தியில் தம் மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டை மிகவும் வருத்தத்துடன் மிகவும்
பண்பான முறையில் மறுத்து ஓர் அறிக்கை
வெளியிட்டார். வன்முறை, தீவிரவாதம் இவற்றில் நான் நம்பிக்கை
இல்லாதவன் என்று தெளிவுபடுத்தினார்.
பிறகு ஆனந்த விகடன் வார
இதழ் ஏ.ஆர். ரஹ்மான்
அவர்களிடம் கார்டூனிஸ்ட்
மதன் அவர்கள் மூலமாக நீண்டதொரு
நேர்காணலைப் பதிவு செய்து மூன்று
வாரங்கள் தொடர்ச்சியாக வெளியிட்டது.
அந்தப்
பதிவுகள் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் “தாமும்
தமது தாயாரும் தந்தையும் குடும்பத்தோடு
இஸ்லாத்தைத் தழுவியதற்கான காரணம் என்னவாக இருந்தது,
இஸ்லாம் தம் குடுமபத்தாரைக்
கவர்ந்திடக் காரணம் என்ன
என்பதையெல்லாம் விரிவாக விளக்கிக் கூறியிருந்தார்.
அதில் தான் தமது
தந்தையாருக்கு நேர்ந்த துயரங்களையும் அதன்
விளைவாக தம் குடும்பத்தாரின் வாழ்வில்
நடந்த பல சோகங்களையும் பகிர்ந்து
கொண்டார். அந்த நேர்காணல் மிகவும்
சுவாரசியமானதாகவும் அதே நேரத்தில் நெஞ்சை
கனக்கச் செய்வதாகவும் அமைந்திருந்தது.
அதில் அவர் அப்படி என்ன கூறியிருந்தார், அவரது குடும்பம் இஸ்லாத்தை ஏற்றிடக் காரணமாயிருந்த நிகழ்வுகள் என்ன என்பதை நாம் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்!
No comments:
Post a Comment