இசைப் புயலின் வாழ்வில் ஒரு
சோகப் புயல் -5
அன்பு முகநூல் நண்பர்களே! சகோதரிகளே!
உங்களுடன்
அன்பன் காஞ்சி அப்துல் ரவூப்
பாகவி
பதிவு:
புதன் கிழமை 13-01-2021
இது கடந்த 09-01-2021 ஏ. ஆர். ரஹ்மான்
குறித்த சனிக்கிழமையன்று
வெளியிட்ட நான்காம் பாகத்திற்கு அடுத்த ஐந்தாம் பாகம்
ஆகும்.
இன்ஷா அல்லாஹ் இன்னும் இரு
பாகங்களுடன் நிறைவுறும்.
வாசித்து
விட்டு பிடித்திருந்தால் லைக் செய்து பகிர்வதோடு பின்னூட்டம்
மூலமாக உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்க
வேண்டுகிறேன்.
ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள்
கார்டூனிஸ்ட் மதன் நடத்திய நேர்காணலில்
சொன்ன திடுக்கிடும் உண்மைகள் என்னென்ன, அவற்றால் அவரது குடும்பத்தில் வீசிய
புயல் எத்தகையது என்று இந்தப் பதிவில்
நாம் பார்ப்போம்.
ரஹ்மானின் தந்தை சேகர் அவர்களைத் தொழில் போட்டியாளராகக் கருதியவர்கள் அவர் இன்னும் பிரபலமாக வாய்ப்புக் கிடைக்காமல் திரை இசைத்துரையில் பெரியதொரு வாய்ப்புக்காகக் காத்திருந்த நிலையில் அவர் இன்னும் புகழ் பெறாதிருந்த போதே அவரைத் தமது திரையுலக இருப்புக்கும் பெயர் புகழுக்கும் ஓர் அச்சுறுத்தலாகக் (Threat) கருதியது தான் இதில் வேதனைக்குரிய ஒரு விஷயம் ஆகும்.
அந்த அளவிற்கு திரு. சேகர் அவர்களின்
திறமையை அவர்கள் சினிமாத் திரைக்குப்
பின்னால் 0ff the
screen நடக்கும்
இசைப்பதிகளின் பொது அவரது அசாதாரணத்
திறமையைக் கண்டு மிரண்டு போய்
இருந்தனர்.
எனவே தான் அவர்கள் அவரைத்
தமது இசைத்துறை வாழ்வுக்கு ஒரு எதிர்கால அபாயமாகக்
Potential Danger கருதினர்.
எல்லோரும் அவ்வாறில்லை என்றாலும் ஒரு சில வக்கிர
புத்திக்காரர்களே இவ்வாறு கருதினர்.
அவர்களின்
குரூர புத்தி அவருக்கு எதிராக
மிக மலிவான ஆனால் கொடூரமான
செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்தியது
அந்த மனித சாத்தான்கள்
பில்லி சூனியம் Black Magic என்கிற ஒரு மோசமான
மனிதத் தன்மையற்ற ஆயுதத்தைக் கையிலெடுத்தார்கள்.
ஏ.ஆர் ரஹ்மான் தனது
நேர்காணலில் மிக்க வேதனையுடன் இதைக்
குறிப்பிட்டார். “ நானே என் கண்களால்
கண்டிருக்கிறேன். எனது தந்தை தேநீர்
அருந்துவதற்காக தேநீர்க் கோப்பையைக் கையில் எடுத்தால் அதற்குள்
பயங்கர உருவத்ஹுடன் உயிருள்ள நட்டுவாக்களி –கருந்தேள் ஒன்று உட்கார்ந்திருக்கும்.
கடுமையான
வலி வேதனையை என்
அப்பா உணர்வார், உடல் மருத்துவ ரீதியான
காரணம் எதுவுமின்றி பலவீனமாகிக்
கொண்டே சென்றது.”
அப்போது
என் அப்பாவின் இந்த கோரமான நிலை
கண்டு பதறிய என் அம்மா
வேண்டாத தெய்வங்களில்லை. ஆனால் சரியான பலன்
எதுவும் இல்லை.
இந்த நிலையில் தான்
ஒரு முஸ்லிம் பெரியவரின் தொடர்பு
எங்களுக்குக் கிடைத்தது. ஆன்மீக குருவாக நாங்கள்
அவரை வரித்துக் கொண்ட நிலையில் அவர்
தொடர்ந்து ஓதிப் பார்த்தார் . அப்போது
அந்தத் தீராத் துயரத்திலிருந்து
இறைவன் எங்களைக் காப்பற்றினாரன்
அந்த முஸ்லிம்
பெரியாரின் அன்பான வழிகாட்டுதலில் எங்களுக்கு
ஆன்மீக வெளிச்சம் கிட்டியது.
ஆனாலும்
நீண்ட கால நோய் மற்றும் மன உடல்
உபாதைகளுக்கு ஆளாயிருந்த சூனியத்தின் பாதிப்பு நீங்கி பூரண நலம்
பெற்று விட்டாலும் திடீரென்று ஒருநாள் கண்ணை மூடினார். அவர்
இறந்த நாளன்று தான் அவரது பெயருக்கான
முழு அங்கீகாரத்துடன் அவர் இசையமைத்த மலையாளத்
திரைப்படம் வெளிவந்திருந்தது.
மரணத் தருவாயில் எங்களிடம் எங்கள் அப்பா , தாம் இஸ்லாத்தை
ஏற்று முஸ்லிமாகி விட்டதாகவும் முஸ்லிமாகவே தான் மரணிப்பதாகவும் அறிவித்தததோடு
நாங்களும் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்க வேண்டுமேட்று தம்
இரும்புவதாகவும் தனது விருப்பத்தை வெளியிட்டார்.
அதன்படி
நாங்கள் குடும்பத்துடன்
இஸ்லாத்தை தழுவினோம் என்று ரஹ்மான் நேர்காணலில்
கூறியிருந்தார்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்..
No comments:
Post a Comment