Thursday, January 14, 2021

அன்னை ராபிஅத்துல் பஸரிய்யா (ரலியல்லாஹு அன்ஹா)

 பகுதி 1

அரபுலகில்..,

ஈராக் நாட்டின் பஸரா நகரத்திலே..

ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்

ஆதி  கோத்திரத்திலே, ஓர் ஏழை முஸ்லிம் குடும்பத்தில் ,

இறை நேச செல்வர் இஸ்மாயில் ரரஹ் அவர்களுக்கு

அழகு மகளாய்...

நற்குண சீலராய்..

பிறந்தவர்கள் தான் ராபிஅத்துல் பஸரிய்யா ரலி

 

 

இவர்களின் தந்தை

  இஸ்மாயீல் ரஹ் மிகுந்த இறைநேசம் மிக்கவர்கள்..

 

 

அல்லாஹ்வை

அதிகம் நம்புபவர்கள்..

 

மிகுந்த ஏழ்மையில் இருப்பவர்கள்..

 

 

இவர்களின் அன்பு மளாய் பிறந்தவர்கள் தான்

அன்னை ராபிஅதுல் பஸரிய்யா ரலியல்லாஹு அன்ஹா..

 

 

 4 ஆவது குழந்தையாக இவர்கள் பிறந்ததினால்

ராபிஆ நான்காவது என்ற பெயர் இவர்களுக்கு வைக்கப்பட்டது

 

 

 உண்ண உணவில்லை.., அணிய ஆடையில்லை..

 பிறந்த குழந்தையின் உடலை மறைத்து, அதைக் குளிரில் இருந்து காப்பாற்ற வீட்டில் எந்த

துணியும் இருக்கவில்லை.

 

 

 

 

 இவ்வளவு வறுமையில்..

 குழந்தை ராபியதுல் பஸரிய்யா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து நின்ற போது...

அவர்களின்  தாயும், தந்தையும் அல்லாஹ்விடத்திலே அடைக்கலமாகிருந்தார்கள்..

 

 

பஸ்ரா நகரத்தில் ஏற்பட்ட

கடும் பஞ்சத்தால்..

 அனாதைக் குழந்தைகள்

ஒவ்வொரு வரும்

வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டிருந்தார்கள்..

 

 

 அதில் ராபிஅத்துல் பஸரிய்யா ரலி என்ற குழந்தையும் பஸ்ரா நகரத்தை விட்டுப் புறப்படட்டுச் சென்றது...

 

 

 வழியில் ஒரு மனிதன்

 ராபியத்துல் பஸரிய்யா ரலியை பிடித்து ..

அடிமையாக

  விற்றுவிட்டான்.

 

 

 

 

அன்பின் வடிவமும் அருளின் உறைவிடமான ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அல்லாஹ் ஒருவனையே நம்பி இருந்தார்கள்.

 

 

பணிப் பெண்ணாக அமர்ந்தாலும், தங்களது கடமைகளை..

உணர்ந்து கடுமையாக வேலை செய்து வந்தார்கள்.

 

 

கூர்மான அறிவாற்றலும்..

சீரான ஒழுக்கத்துடனும்..

வாழ்ந்து வந்தார்கள் ராபித்துல் பஸரிய்யா ரலி..

 

 

  சில காலம் அடிமையாகக் காலம் கழித்த அவர்கள்..

 தொழுவது, அல்லாஹ்வை திக்ர் செய்வது.. இறைவனை அனு தினமும் நினைத்து கொண்டிருப்பது..

, நள்ளிரவில் எழுந்து..

 தனியாக அல்லாஹ்வை தஸ்பீஹ்  செய்வது..

போன்ற அனைத்து நல் அமல்களையும் விடாமல் செய்து வந்தார்கள்..

 

 

 

 

 பகலெல்லாம் ஓயாமல் கடுமையாக வேலை செய்பவர்கள்

 இரவில் நன்றாக அலுத்துப் போய் தூங்குவார்கள்..

 

 

ஆனால்

அன்னை ராபிஅத்துல் பஸரிய்யா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மட்டும்  ..

 

 

 வீட்டின் மேல் தளத்தில்..

 ஏறிச் சென்று,

தனிமையாக அமர்ந்து அல்லாஹ்வை  தியானிப்பார்கள்.

 

 

கால்கள் கடுக்கும்... தூக்கத்தால் கண்கள் சொருகும்..

காலையில் செய்த கடும் உழைப்பினால்..

உடல்கள் தளர்ந்து விடும்..

 

 

அப்படி இருந்தும்..

 எதையும் பொருட்படுத்தாமல் ..

அல்லாஹ்வே தனக்கு போதுமானவன்  என்று நினைத்து....

அவனிடத்திலேயே ..

இப்படி மன்றாடி துஆ

கேட்பார்கள்..

 

 

யாஅல்லாஹ் !

இந்த இரவு நேரத்தில்.. உன்னை அடைந்து மன்றாடிக் கேட்போருக்கெல்லாம் நீ உனது அருளை பொழிகின்றாய்..

ஆனால், நான் தன்னந்தனியாக உன்னுடன் இருக்கிறேன்.”

 

என்ற துஆவை

 

 

உள்ளம் உருகி,

கண்ணீர் வடித்து அல்லாஹ்விடம்

 துஆச்  கேட்பார்கள்

ராபிஅத்துல் பஸரிய்யா ரலி...

 

 

இவ்வாறு, தினந்தோறும் நடந்து வந்தது.

ஆனால், வீட்டு எஜமானனுக்கு இந்த விஷயம் எதுவும் தெரியவில்லை..

 

 

 ஓர் நாள் நள்ளிரவில்  எஜமானார்  தூக்கத்திலிருந்து கண் விழித்தார்!

ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் எழுந்து

எங்கோ செல்வதை கண்டு..

அவரும் பின் தொடர்ந்து சென்றார்...

 

 

அங்கே அவர் அழகான காட்சியை கண்டு ஆச்சர்யப்பட்டார்...

 

 

 

 

வீட்டின் மேல் தளத்தில்..

 ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் தன்னந் தனியாக அமர்ந்து,

 

 

 யாஅல்லாஹ்!

 நீ கொடுத்த இந்த வாழ்க்கை எப்பொழுதும் உமது கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடக்க

 வேண்டும் என்பதுதான்..எனது ஆவல்..

 

 

  உன்னை நான் வணங்குவதில் சிறு குறையும் இருக்க கூடாது என்று தான் நானும் நினைக்கின்றேன்..

 

 

 

 

 ஆனால் ..நீ படைத்த

ஒரு மனிதனுடைய அடிமையாக தானே

நான் இருக்கின்றேன்..

 

 

 எனவே தான்,

உனது திருச்சமூகத்திற்கு நான் வரத்

 தாமதமாகி விடுகின்றது..

 

 

யாஅல்லாஹ்!

எனக்கு வேறதுவும் தேவைவில்லை..

 உன்  (ரிலா) வை திருப் பொருத்தம் ஒன்றை மட்டுமே

நான் கேட்கிறேன்..

 

 

 

 

 நீ எந்த நிலைமையில் என்னை வைத்தாலும்..

 அதற்கு  தலைசாய்ந்து நடப்பேன்என்று அல்லஹ்விடம் பணிவுடன் துஆ கேட்கிறார்கள்..

ராபிஅத்துல் பஸரிய்யா ரலி..

 

 

 

 

 

எஜமானர்

 இந்தக்காட்சியைக் பார்க்கிறார்..!

 

 

 கள்ளங்கபடம் இல்லாத இந்த

நல்லாரை

 நான் இதுவரை அறிந்து கொள்ள முன்வரவில்லையேஎன்று மனம் வருந்திய பின்..

 

 

ராபிஅத்துல் பஸரிய்யா ரலி

க்குத்

 தெரியாமல், மெல்ல மெல்ல நடந்து சென்று..

 தமது படுக்கையில் படுத்துக்கொண்டார்.

 

 

மறுநாள் காலையில் எஜமானர் எழுந்தார்..

 

 

ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களை அழைத்தார்.

 

 

அன்னையே! நான் நேற்றுவரை தங்களை அறியவில்லை.

 

 

 இரவில் இறைவணக்கம் புரிந்து..

அல்லாஹ்விடம் மன்றாடிப் பிரார்த்தனை

 செய்வதை

என் கண்களால் கண்டேன்.

 என் மனம் மாறிவிட்டது.

 

 

 உங்களை போன்ற உயர் பெண்ணை பணிமகளாக வைத்துக் கொள்வது

 பாவமான காரியாமாகும்.

 

 

எனவே இன்றிலிந்து..

 நான்  உங்களை விடுதலை செய்துவிட்டேன்!

 

 

இனி, உங்கள் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் நீங்கள் செல்லலாம்.

 

 

 ஆனால், ஒரு வேண்டுகோள்.

 

 

 நீங்கள் எங்கள் வீட்டிலேயே தங்கினால்,

 அது எங்களுக்குப் பெரும் பாக்கியமாகும்.

என்று கேட்டுக் கொண்டார்.

 

 

ஆனால், ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அதற்கு மேல்..

 அந்த வீட்டில் தங்க விரும்பவில்லை.

வீட்டாரிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார்கள்.

 

 

 வழிச் செலவுக்கும் சில திர்ஹங்களை கொடுத்து, அந்த வீட்டார் மரியாதையுடன் அவர்களை அனுப்பி வைத்தார்கள்

https://www.yaseenis.com

 

No comments: