இசைப் புயலின் வாழ்வில் ஒரு
சோகப் புயல் -4
அன்பு முகநூல் நண்பர்களே! சகோதரிகளே!
உங்களுடன்
அன்பன் காஞ்சி அப்துல் ரவூப்
பாகவி
பதிவு:
சனிக் கிழமை 09-01-2021
கொடூரமான
சதிக்கு பலியான
ரஹ்மானின்
தந்தை மலையாள இசைமேதை சேகர்!
முந்தைய
தொடரில் ஏ.ஆர். ரஹ்மான்
அவர்கள் மீது ஒரு வார
இதழ் வன்முறையாளர்களுக்கு அவர் உதவுகிறார் என்று செய்தி
வெளியிட்டிருந்து என்றும் அதைத்தொடர்ந்து
ஆனந்த விகடனில் கார்டூனிஸ்ட் மதன் நடத்திய நேர்காணலில்
ஏ. ஆர். ரஹ்மான் அவர்கள்
பல மயிர்க் கூச்செறியும் உண்மைகளைக்
கூறியிருந்தார் என்றும் நாம் பார்த்தோம்.
ஏ. ஆர். ரஹ்மான்
அந்த நேர்காணலில் . தமது
தந்தையின் சோகமயமான வாழ்வில் நடைபெற்றதாகச் சொன்ன திகிலூட்டும்
அந்த உண்மை நிகழ்வுகள் என்ன என்று பார்ப்போம்:
மலையாளத்
திரையுலகில் இசையமைப்பாளராக இருந்தவர் தான் அவரது தந்தை
சேகர். சேகர் அவர்கள் மிகவும்
வியக்கத்தக்க இசை வடிவங்களைத் தரக்கூடியவராக
இருந்தார். ஆனால் வாய்ப்புக்கேடாக அவரது
இசைத் திறமைக்கு திரையுலகில் உரிய மரியாதை தரப்படவில்லை.
நேர் மாறாக, மலையாள இசையுலக மாஃபியா கும்பல் அவரது திறமை வெளிியுலகிற்குத் தெரிந்து விடாமலும் அவர் பிரபலமாக விடாமலும் அவரை அமுக்கி வைத்தது .
அவரிடமிருந்த காதுக்கினிய ஜனரஞ்சகமான இசைவடிவங்களை அவரது வறுமையைப் பயன்படுத்தி
அற்ப ஊதியம் கொடுத்து வாங்கிக்
கொண்டு தமது கற்பனையில் உதித்த
சொந்த இசையைப் போல திரையில்
காட்டி பல பிரபல இசையமைப்பாளர்கள்
கூட பெரும் புகழ் குவித்து
வந்தார்கள் .
தனது அசாதாரணத் திறமை இப்படி தனக்குத்
தெரிந்தே திருடப்பட்டு அதற்குத் தொடர்பே இல்லாதவர்களால் உரிமை கொண்டாடப்படுவதையும்
தாம் உரிய மதிப்பு தரப்படாமல்
சுரண்டப்பட்டு நசுக்கப்படுவதையும்
கண்டு சேகர் மனம் வருந்தினார்.
மிகுந்த மன வேதனைக்கு ஆளாகி
அடிக்கடி உடல் நலமும் மன
நலமும் பாதிக்கப்பட்டு வந்தார்.
தனது வறிய நிலையின் காரணத்தால்
அவரால் எதுவும் செய்ய இயலவில்லை.
தனக்குத் தொடர்ந்து இழைக்கப் படும் அநீதியை எதிர்த்துப்
போராடக் கூட அவரால் முடியவிலலை.
அதே நேரத்தில் மலையாளத் திரைப்பட உலகில் இசைத்துறையில் இத்தகைய
திறமைக் களவுகள் மூலமாக, கோலோச்சிக்
கொண்டிருந்த குரோத புத்தி கொண்ட சிலர் “என்றேனும்
ஒரு நாள் சேகரின் திறமை
பொதுவெளிக்கும் திரையுலகிற்கும் பகிரங்கப்பட்டு விடும், அன்றைக்கு அவர்தான்
இசையுலகின் சக்கரவர்த்தியாக மாறிவிடுவார்” என்று
அஞ்சினார்கள்.
பொறாமை அவர்களைத் தூங்க
விடாமல் செய்தது எனவே, “சேகரை
ஒரேயடியாக ஒழித்துக் கட்டி விட்டால் என்ன?
எதிர்காலத்தில் அவரே இசையுலகின் முடிசூடா
மன்னராக வரும் ஆபத்துக்கு இன்றே
முடிவு கட்டி விட்டால் என்ன?
நமக்குப் பிரச்சினை இருக்காதல்லவா?” என்றெல்லாம் அவர்களின் குறுக்கு மூளைக்குள் சில சாத்தானிய திட்டங்கள்
தோன்றலாயின.
பிறகு,
தாங்களும் அவரும் பல்லாண்டு காலம்
திரைக்குப் பின் புலத்தில்இணைந்து செயல்பட்ட
பழக்கத்தில் அவரை நம்ப வைத்துக்
கழுத்தறுக்கும் விதத்தில்
அவர்கள் மிகப்பெரிய சூழ்ச்சி வலை ஒன்றை விரித்தார்கள்.
அது மிகவும் கொடூரமான
மனிதத் தன்மையற்ற ஒரு சதிகாரத் திட்டமாக
இருந்தது . துரதிர்ஷ்ட வசமாக
அப்பாவியான சேகர் அவர்களின் சதிக்குப்
பலியாகிவிட்டார்.
ஒரு நாள், எண்ணிப் பார்க்கவே
முடியாத அந்த பயங்கர திட்டத்தை அவர்கள் அந்த நல்லவருக்கெதிராக
நிறைவேற்றி விட்டார்கள்.
அந்தப் பொறாமைக் காரர்களின்
அந்தக் கொடூர திட்டம் என்ன?
அதன் விளைவுகள் எவ்வளவு கொடுமையாக இருந்தன ?அதனால் ஏ. ஆர்,
ரஹ்மானின் குடும்பம் அனுபவித்த துன்ப துயரங்கள் யாவை
?
இவற்றிற்கான பதிலை இன்ஷா அல்லாஹ் இன்னும் ஓரிரு நாட்களில் இதன் ஐந்தாவது தொடர் பதிவாகக் காண்போம், இன்ஷா அல்லாஹ் ..
No comments:
Post a Comment