Sunday, January 17, 2021

மனமே மனமே ஏ ஏ

மனமே மனமே பாவம் செய்வதேன்!

பாடியவர்: அதிரை ஜஃபருல்லாஹ்

வரிகள்: கவிஞர் மலிக்கா ஃபாரூக்

படத்தொகுப்பு: முஃப்தி இனாயத்

மனமே மனமே பாவம் செய்வதேன்

மரணத்தை மறந்தே மமதைகொள்வதேன்

மரணசிந்தனை நினைவில் வரலையா! ஆ ஆ ஆ ஆ

இல்லை "மனிதா

மரணமென்பதே உனக்கு இல்லையா! ஆ ஆ

பூமியில் இறைவன் படைத்த அனைத்துமே

புனிதமனிதனே உனக்காகவே!

அட உனக்காகவே

இங்கு

சிறிதுகாலம் நீ இளைப்பாறவே!-இதில்

பொழுதுபோக்குகள் நிறைந்து கிடக்குது

புண்ணியங்களும் குவிந்து இருக்குது

நிறைய குவிந்து இருக்குது

புண்ணிய வழியைப் புறந்தள்ளிவிட்டு

பாவத்தின் பக்கம் மனது போவதேன்

பாதை மாறியே பயணம் செய்வதேன்

உலகவாழ்க்கையில் உன்னைத்தொலைத்ததேன்

உண்மையை உதறி உள்ளம் அலைவதேன்.,

மனமே மனமே ஏ ஏ

உனைத்தான் சொல் மனமே

கூடிக்கூடியே கோள்சொல்கிறாய்

குடும்பத்தைப்பிரிக்க புறஞ்சொல்கிறாய்

கூத்து கும்மாளம் தேடிப்போகிறாய்

கூட்டுக்கொள்ளையில் பங்குகொள்கிறாய்

மண்ணிலும் பொன்னிலும் மயக்கங்கொள்கிறாய் ஆ ஆ ஆ

(மண்ணிலும்)

மதுவிலும் மாதுவிலும் மனதைத்தொலைகிறாய்

மதப்போர்வையில் தன்னை ஒளித்துகொண்டு

மனிதனைக்கொன்று

மனிதம் கொல்கிறாய் ஓ ஓ ஒ

மனமே மனமே ஏ ஏ

நிலையற்ற மனித மனமே ஏ

ஃபேஷன் ஃபேஷனென

வேசமிடுகிறாய்

பெருமைப்பேசியே

பொழுதைக்கழிக்கிறாய்

வர தட்சணையை வாங்கிக் கொண்டு நீ

வறுமையுடையோரை வதைசெய்கிறாய்

வட்டிக்கு வட்டி வாங்கிகுவிக்கிறாய்

வரம்புமீறியே வாழநினைக்கிறாய்

இப்படி,,,,,,,,,,

பாவத்தின் பக்கம் மனதுபோவதேன்

புண்ணிய வழியை மறந்துபோனதேன்

மரணசிந்தனை மனதில் வரலையா ஆ ஆ ஆ

இல்லை மனிதா

மரணமென்பதே உன் நினைவில் இல்லையா.

இம்மையில் வாழ்வே சிலகாலம்தான்

உண்மையில் வாழ்க்கை

மறுமையில்தான் -

(இம்மையில்)

இதை

மனதில் கொண்டுயிங்கு வாழ்க்கை நடத்திடு

மரணித்தப் பிறகுமறுமையில் ஜெயித்திடு....

மனமே ஏ மனமே

இறையை நேசித்தே

இன்பம் பெறுவாய் தினமே..ஏ ஏ


No comments: