நம்மைச்
சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் இல்லை .மனிதர்களில் பாம்பு,
தேள், கழுகு ,கழுதை ,குரங்கு
,குள்ளநரி, ஓநாய், செந்நாய் ,சிங்கம்
,புலி முதலை ..எல்லா வகையும் தான்
உண்டு .
இவர்கள்
மத்தியில் தான் வாழ வேண்டியிருக்கிறது
.கொஞ்சம் அசந்தாலும் நம் கதையை முடித்து
விடுவார்கள் .
கவிஞர்
யுகபாரதியுடன் தஞ்சை முதல் வத்தலக்குண்டு
வரையிலான மகிழுந்து பயணத்தில் எவ்வளவோ பேசினோம் .ஆனால்
என் மனதில் தைத்த கவிஞரின்
இந்த யோசனையை உங்களோடு பகிர்ந்து
கொள்கிறேன் .
பிரச்சினைக்குரிய நபர்களை நாம் அடையாளம் கண்டு கொண்டால் அவர்களோடு வாதமோ சண்டையோ வெறுப்போ காட்டாமல் பக்குவமாக நழுவி விடுங்கள் என்றார் கவிஞர் .
விலகிவிட
சொல்கிறீர்களா என்றேன் ."இல்லை நழுவி விட
சொல்கிறேன் .நாம் விலகுகிறோம் என்ற
உணர்வுகூட அவர்களுக்கு வராமல் நழுவி விடுங்கள்" என்றார் .
அவர்களுக்கு
பாடம் புகட்டுவது பழிவாங்குவது தேவையில்லாதது வாழ்க்கை அவர்களுக்கு அதை செய்து விடும்
என்றார் .
பாதகம்
செய்பவரைக் கண்டால் மோதி மிதித்துவிடு
;முகத்தில் உமிழ்ந்துவிடு ;என்ற பாரதியாரின் வாக்கை
நாம் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை .
அது வேறு இது வேறு
.
தம்பி ஜாஃபரின் "உயிராடல் " கவிதை தொகுப்பு வெளியீட்டு
விழாவிற்கு நானும் நண்பர் ஹாஜா
கனியும் அழைத்ததன்
பேரில் மிகுந்த பணி நெருக்கடிக்கு
இடையே நேரம் ஒதுக்கிய கவிஞருக்கு
பேரன்பும் நன்றிகளும் .
இளம் கவிஞனை அரவணைத்த
பெருங்கவிஞர் யுகபாரதி.
தன்னுடைய
முதல் தொகுப்பான " மனப்பத்தாயம் "எப்படி
தன்னுடைய வாழ்வையே மாற்றியதோ ,அப்படியே தம்பிக்கும் அமையட்டும் என்ற கவிஞரின் வாழ்த்திற்கு
தம்பி கடமைப்பட்டுள்ளார் .
பேசிக்கொண்டே
நீண்ட பயணம் செய்யலாம் என்ற
நெடுநாளைய ஆசை இந்த பொங்கல்
விடுமுறையில் நிறைவேறியது .
கவிஞர்
யுகபாரதி இடமிருந்து பெற்ற விஷயங்களைப் பகிர்ந்து
கொள்ள ஏராளம் இருக்கிறது .
சொல்வேன் எழுதுவேன் .
No comments:
Post a Comment