Monday, August 6, 2018

ஆறு மனமே ஆறு


நண்பர் ஒருவர் இறந்து விட்ட
தகவலை மற்றொரு நண்பர்
சொன்னார்.இறந்த நண்பரை
எனக்கு தெரியும். தகவல்
அறிந்ததும் நண்பருடன் அவரது
வீட்டுக்கு சென்றேன்.

இறந்த அவர் உடலை பார்க்க
நான் வந்திருப்பதை.. அவரால்
நிச்சயம் உணர முடியாது.
என்னை தெரிந்த பல நண்பர்கள்
அவரது உடலை சுற்றிலும் அமர்ந்து
இருக்க ஒருவர் அவரது முகத்தை
திறந்து காட்டினார்.அமைதியான
ஆழ்ந்த நித்திரை நிலையில் இருந்த
அந்த நண்பர், உலகப் பயணத்தை
முடித்துக் கொண்டு நிம்மதியாக
மறுமை பயணத்திற்காக தன்னை
தயார் நிலையில் வைத்திருந்தார்.


இறந்து போன அந்த நண்பரின்
மிக மிக மிக... முக்கிய உறவினர்,
அவரும் எனது நண்பர் தான்.
அவரை அங்கு எதிர்பார்த்தேன்.
எங்கு தேடியும் அவரை அங்கு
காண இயலவில்லை.அவர் இருந்து
இறுதி சடங்குகளை நிறைவு
செய்யும் மிக முக்கிய இடத்தில்
இருக்கும், அந்த குடும்பத்தின் மிக
நெருங்கிய உறவினர் மற்றும்
பெரிய மனிதர் அவர். அவர் அங்கு
இல்லாமல் போனது ஆச்சரியமாக
இருந்தது.வெளிநாடுகளில் இருந்த
உறவினர் கூட வந்து விட்டார்கள்.
ஆனால் அவர் மட்டும் வரவில்லை.

இது போன்ற தவறை, பிறர்
செய்தால் அல்லது செய்ததை
கண்டால்,கேட்டால் அவர்களை மிகவும் கடினமான வார்த்தைகளால் பிறர் மத்தியில் கடுமையாய் விமர்சிக்கும் அல்லது வசை பாடும் இவர் போன்ற பிரமுகர்கள், தங்கள்
சொந்த விசயங்களில் மட்டும் அசட்டையாக இருப்பதும்,விலகி ஓடி ஒழிவதும் ஏன் என்று இன்றும் புரியவில்லை.

இவர் போன்ற சில வேடிக்கை உறவினர்களின் பாரா முகமும்,அலட்சிய போக்கும்
சில நேரங்களில், சில நல்ல நண்பர்கள்
விரைந்து மரணத்தை தழுவ காரணாய் அமைகின்றன என்று சொன்னால் அது மிகையல்ல.
A friend in need is a friend indeed

Vavar F Habibullah

No comments: