SENTHIL
சுவை அறிந்து சாப்பிடுவதைவிடச் சத்து அறிந்து உணவைச் சாப்பிடுவதே நோய் நொடியில்லாமல் உடலை வைத்திருக்க உதவும். உயிர் வாழ்வதற்கு மூலாதாரமாக இருக்கும் வைட்டமின்களும், தாது உப்புக்களும் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன.
வைட்டமின்களில் கொழுப்பில் கரையக்கூடியன நீரில் கரையக்கூடியன என்று இரண்டு வகைகள் உண்டு. வைட்டமின் A,D,E,K-ஆகியவை கொழுப்பில் கரையக்கூடியன. இவை தேவைக்கு அதிகமாக இருந்தால் உடலுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
B1, B2, B3, B5, B6, B9, B12, வைட்டமின் C ஆகியவை நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள். அதனால் காய்கறி மற்றும் பருப்பு வகைகளில் இவை உண்டு. அதனால், அதிகம் கழுவக்கூடாது. இவை தேவைக்கு அதிகமாக உடலில் சேர்ந்து விடுமோ என்றும் பயப்படத்தேவை இல்லை. கூடுதலாக உள்ளவை சிறுநீரில் வெளியேறிவிடும்.
எந்த வைட்டமின் எந்த உணவில் இருக்கிறது, அந்த வைட்டமின் ஏன் அவசியம், அது உடம்பில் எப்படிச் செயல்படும், அது இல்லை என்றால் என்ன பாதிப்புகள் ஏற்படும், நாள் ஒன்றுக்கு உடலுக்கு எவ்வளவு தேவைப்படும் என்பன போன்ற தகவல்களும் இந்தக் கையேட்டில் உண்டு.
https://foodsafetynews.wordpress.com/
No comments:
Post a Comment