நான் வலிமை கேட்டேன் .........
நான் வலிமை கேட்டேன் .........
இறைவன் எனக்கு சிரமங்களை கொடுத்து என்னை வலுவாக்கி அதனை சமாளிக்க வழி செய்தான்.
நான் அறிவு கேட்டேன் .........
இறைவன் எனக்கு பல சிக்கல்கள் கொடுத்து அதனைத் தீர்க்க முறை செய்தான்.
இறைவனிடம் வளமாக வாழ பொருளும் பணமும் கேட்டேன் ......... இறைவன் திறமை கொடுத்து வேண்டியதை தேடும் ஆற்றல் கொடுத்தான்.. ஆண்டவனிடம் தைரியமாக வாழ வழி கேட்டேன் ......... ஆனால் அல்லாஹ் எனக்கு ஆபத்து கொடுத்து அதனை சமாளிக்க அறிவைக் கொடுத்தான்.
நான் மக்களின் அன்பு கேட்டேன் .........
இறைவன் எனக்கு சிக்கலுக்குள்ளான மக்களை கொடுத்து அவர்களுக்கு உதவச் செய்து பாசமுண்டாக்கினான்
இறைவனிடம் நான் வளமான வாழ்வு பெற அவனது அருள் கேட்டேன் ... ஆனால் அல்லாஹ் அதற்குரிய வாய்ப்புகளை கொடுத்து அதனைத் தேடி அடைந்துக் கொள் என்றான்.
நான் விரும்பிய எதுவும் கிடைக்க்கவில்லை ஆனால் எனக்கு தேவையானது எல்லாம் பெற்றேன் என் பிரார்த்தனை இறைவனால் வேறு வகையில் அங்கீகரிக்கப் பட்டதில் மகிழ்ந்தேன்
அல்ஹம்துளில்லாஹ்
----------------------------------
பறந்து போனவனை நினைத்து புலம்பல்
கனியென வர்ணித்த கன்னங்கள் குழி விழுந்தன
முத்தென வர்ணித்த பற்கள் சொத்தை விழுந்து சிதறின
கட்டான உடல் கலை யிழந்து போயின
உதிரும் முடியும் நிறம் மாறும் முடியும்
பருவ மங்கையாய் இருந்த தோற்றத்தை மாற்றின
இன்னும் இருக்குமிடத்திலிருந்து வர்ணனை செய்கிறாய்
வா வந்து பார்
வரி வரிகளாய் வர்ணித்தது போதும்
நாட்கள் நகர்கின்றன
ஆண்டுகள் பறந்துவிட்டன
பறந்து போன இடம் அடைக்கலமானதோ
இருந்து வாழ்ந்த இடம் நினைவை விட்டு அகன்றதோ
பெண்ணின் பொறுமையால்
என்னின் நிலை அருமை அறியாமல் போனாய்
போனது போகட்டும்
இணைந்தவள் இருக்கிறாள்
இறக்கம் கொண்டு வந்து கண்டு விடு
இணைந்தவள் இறப்பதற்குள்
No comments:
Post a Comment