Sunday, August 19, 2018

துபாய் மக்களை நெகிழ்சியில் ஆழ்த்திய துபாய் காவல்துறை அதிகாரியின் மனித நேயப்பணி..!

துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி...

ரஷீடியா போலீஸ் நிலையத்தின் உயர் அதிகாரி லெப்டினென்ட் அப்துல் ஹாடி, இன்று காலை நீதிமன்ற அலுவலகத்தில் தன் வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மூச்சிறைக்க ஓடி வந்த ஒரு நபர் என் மனைவியைத் தயவு செய்து காப்பாற்றுங்கள். என் மனைவி சிறைக்குச் செல்லக் கூடாது.

எங்கள் 7 மாதக் குழந்தை தாயின்றி தவித்துப்போய்விடும் என்று கதறினார்.

அந்த நபரை சமாதானப்படுத்திய அப்துல் ஹாடி, பதற்றப்படாமல் முழு விவரத்தைச் சொல்லுங்கள் என்று கூறினார்....

அந்த நபர் விவரிக்க தொடங்கினார்.


நான் சிறுதொழில் செய்து வருகிறேன்.அந்தத் தொழிலில் திடீரென நஷ்டம் ஏற்பட்டு விட்டது.

இதனால் நான் முன்னர் கொடுத்த செக் அனைத்தும் பணமில்லாமல் திரும்பி வந்து விட்டது.
என் மனைவியின் பெயரில் தான் என் தொழிலை மேற் கொண்டு வருகிறேன்.

இதனால் அனைத்துச் செக்கிலும் அவர் தான் கையெழுத்துப் போடுவார். தற்போது செக் பவுன்ஸ் ஆகி விட்டதால், சம்பந்தப்பட்ட நபர்கள் போலீஸில் புகார் கொடுத்து விட்டனர்.

நீதிமன்றத்தில் என் மனைவிக்குப் பதில் நான் சிறைக்குச் செல்ல தயார் என்று கூறியும் பலனில்லை.

என் உறவினர்கள், நண்பர்கள் எனக்கு பண உதவி செய்ய முன்வரவில்லை. நீதிமன்றத்தில் அபராதம் கட்ட தவறியதால் என் மனைவிக்கு 100 நாள்கள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. என் 7 மாதக் குழந்தை தாயில்லாமல் எப்படியிருக்கும்? எனவே…
என் மனைவிக்குப் பதில் என்னை சிறையில் அடைக்க உதவி செய்யுங்கள் என்று அழுகையுடன் கூறியுள்ளார்.....

நீதிமன்ற வளாகத்தில் கையில் குழந்தையுடன் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்ததும்…

அப்துல் ஹாடிக்கு மனம் கலங்கிப் போனது. இதையடுத்து சற்றும் யோசிக்காமல் அந்த நபர் செலுத்த வேண்டிய 10,000 திர்ஹம் அபராதப் பணத்தையும் அவரே செலுத்தியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணை நீதிமன்றம் விடுவித்தது...

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் துபாய் ஊடகங்களில் வெளியானதையடுத்து போலீஸ் அதிகாரிக்குப் பாராட்டுகள் குவிகின்றன.....

சகோதரர் அப்துல் ஹாதி அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக.....

Kind Dubai cop pays Dh10,000 fine of infant's mother, saves her from jail.

A kind Dubai police officer paid a fine of Dh10,000 imposed on an Arab mother with a 7-month-old baby to save her from being jailed for 100 days.
Lieutenant Abdul Hadi Al Hammadi, an officer at the Rashidiya police station, came to the rescue of the family after he found that they didn't have money and saw the woman's desperate husband seeking help in vain.

Abdul Hadi Al Hammadi said he couldn't bear the sight of the husband sobbing in front of him and couldn't come to terms with the thought that the woman may have to languish behind bars depriving the infant of mother's much-needed care. 
It was a financial issue that the woman had got sucked into after she signed a cheque on behalf of her husband's company, and couldn't pay the amount.
The cop didn't want anyone to know about his gesture and keep it a secret, until the local media got a wind of it. He paid the fine without the hope of the money being returned. "On realising that the man had failed to find support from his family and close friends, I decided to help out the family," the Emirati policeman said.
He added, "I was assigned by my seniors to help people and solve their problems. So when I saw the plight of the couple, I swung into action to ensure that the mother is not imprisoned and goes back home with her child and husband."

Plight moves policeman
Al Hammadi was busy doing his routine work at the one-day court, when an Arab man entered his office in a dishevelled state and looked completely crestfallen.
He approached the police officer and sobbed while telling him that there was a case against his wife in the court and that they were supposed to pay a fine of Dh10,000 or the mother would face jail for nearly 100 days. The man revealed that he had only Dh100 with him and had been unable to raise funds from kin and acquaintances to pay the penalty.
While narrating his story, the man broke down many times. Al Hammadi said, "I asked him to wait for sometime and spoke about the case to director of Rashidiya police station Brigadier Saeed Hamad bin Suleiman. After instructions, the fine was paid through and the bill of payment was handed over to the man.
I told him to keep it a secret, but wondered how the media got to know about it. I think it as our duty in the UAE to help people who need care and attention, the police officer pointed out. 

The woman's husband said,When I approached the policeman, I was feeling helpless and everything seemed dark. I couldn't have seen my wife being jailed, with my little baby left alone. I asked the cop to help us get out of the problem. However, I never imagined that he would save my wife from jail by paying the fine..!
[19/08, 16:30] TAJ. PADAKAR:

No comments: