Thursday, August 16, 2018

ஆன்மீகம் என்பது உங்கள் ஆன்மா சார்ந்த விஷயம்.

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை வைத்து அதை ஆன்மீகம் என்று முடிவு செய்து விடாதீர்கள். ஏனென்றால் ஆன்மீகம் என்பது உங்கள் ஆன்மா சார்ந்த விஷயம். 

நீங்கள், உங்கள் வெளியே மாற்றங்களை செய்யத் தொடங்கினால், அது உங்கள் உள்ளே எந்த மாற்றத்தையும் உருவாக்காது. ஆனால் நீங்கள் உங்கள் உள்ளே மாற்றங்களை ஏற்படுத்தினால் உங்கள் வெளியே தானே மாற்றங்கள் ஏற்பட்டுவிடும். 

காரணம், உங்கள் வெளிப்புறம் என்பது உங்கள்  " நிழல்" 

வெளிப்புறம் மாற்றங்கள் செய்து அதை, அதுதான் உண்மையான ஆன்மீகம் என ஆன்மீக வழியில் நடக்கும் ஒவ்வொருவரும் வாழ்வை வீணடித்து கொள்கிறார்கள். 

வெளிச் செயல்பாடுகளை மாற்றுவதால் உலக பற்றுள்ளவன் துறவி என மக்களிடத்தில் பெயர் எடுக்கலாம் ஆனால் அவர் உள்ளே எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியேதான் இருப்பார். 

قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰٮهَا ۙ‏ 
அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
(அல்குர்ஆன் : 91:9)

        மௌலவி கலீfபா 
  அஹமது மீரான் சாஹிப்
        உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
                (தல்ஸமாத்)
         மேலப்பாளையம்
            திருநெல்வேலி

No comments: