மனிதன் என்பவன் தசையாலான உடலால் மட்டும் செய்யப்பட்டவனல்ல. அவனுக்கு இன்னொரு பகுதி உள்ளது. அது ‘நான்’ என்றும் ’சுயம்’ என்றும் அறியப்படுகிறது. (சூஃபிகள் அதை ‘நஃப்ஸ்’ என்று குறிப்பிடுவர்). மறைஞான அனுபவமானது அந்த ‘நான்’ என்பதைத் தூண்டிவிடுகிறது. மின்சார ஓட்டத்தைப்போல, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அது ஓடுகிறது. அதுவரை பயன்படுத்தப்படாத ஆற்றல்களை அது வெளிக்கொண்டு வருகிறது. சுயம் தூண்டப்படும்போது குறிப்பிட்ட அளவு விழிப்புணர்வும் அகப்பார்வையும் வந்துவிடுகின்றன. தன்னுடைய ‘நான்’ இன்னொரு மிக உயர்ந்த ‘நான்’ என்பதைப் பிரதிபலிக்கிறது என்பதை மெல்ல அம்மனிதன் உணர்ந்துகொள்ளத் தொடங்குகிறான். படைப்புகளிலும், படைப்புகள் மூலமாகவும் இறைவனே செயல்பட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை உணரத் தொடங்குகிறான். -- சூஃபி ஞானி ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல்.
தகவல் :
Mohamed Rafee நாகூர் ரூமி
No comments:
Post a Comment