Thursday, March 16, 2017

போலீஸ் வாகனம்

dr.habibullaah
Vavar F Habibullah

நமது ஊர் அம்பானி - அதானிகளின் ஆடம்பர பகட்டு வாழ்க்கையை பிரதிபலிக்கும்,
கோடீஸ்வர ஸ்டேடஸ் சிம்பலாக விளங்கும்,
அதி நவீன லக்சுரி கார்கள் வரிசையில் முன்னோ டிகளாக திகழும்.....

லம்பார்கினி, ஆஸ்டன் மார்டின்,பென்ட்லே
பெராரி, ஆடி ஆர் 8, மெர்சிடீஸ் SL 63,
மேக்லாரன் MP4-12C போன்ற கோடிக்கணக் கான விலை மதிப்புள்ள பிரசித்தி பெற்ற இந்த கார்கள் தான் துபை போலீசாரால் ரோந்து பணிக்காக முழு அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.



பணக்காரர்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்த வாகனங்களை துபை போலீசார் தங்களது ரோந்து பணிக்காக ரோடுகளில் சர்வ சாதார ணமாக பயன்படுத்துவது கண்டு உலக
கோடீஸ்ரர்கள் அதிர்ச்சியில் உரைந்து போயிருக்கி றார்கள்.

அமெரிக்காவையும் மிஞ்சும் துபை போலீசின் நவீன தொழில் நுட்பம் உலக கின்னஸ் சாதனை பட்டியலில் முதலிடம் பெறுகிறது.
மணிக்கு 400 கிலோ மீட்டர் தூரத்தை எளிதில் கடக்கும் இந்த வாகனங்களால்....
தொழிலதிபர்களுக்கு என்ன பயன்?

2விநாடிகளில் 100 கிலோ மீட்டர் தூரத்தை அநாயாசமாக எட்டி விடும் இந்த கார்கள் தான் போலீஸ் துறைக்கு ஏற்ற வாகனம் என்று இங்குள்ள போலீஸ் துறை அடித்து சொல்கிறது.

மக்கள் நலம் காத்திட... குற்றவாளிகளை துரத்தி பிடித்திட இது போன்ற வாகனங்களை பரிந்துரை செய்த துபை ஆட்சியாளர்களை பொதுமக்கள் இங்கு வியந்து பாராட்டுகின்றனர்.
சமீபத்தில் துபையில் நான் ரசித்து வியந்த நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.

dr.habibullaah Vavar F Habibullah
------------------------------------------------------------------------------------------------------

Dubai to Abu Dhabi in just 12 minutes, at a speed of 1200kms per hour.Take a look at how it works


No comments: