1) உண்பதற்காக உயிர் வாழ்பவர்கள்.
2) உயிர் வாழ்வதற்காக உண்பவர்கள்.
உயிர்கள் உலகில் உயிர்வாழ்வதற்காகவே வகை வகையான உணவுகளை அந்தந்த தட்பவெட்ப நிலைக்கும் அங்கு வாழும் மனிதர்களின் தொழில் மற்றும் பழக்க வழக்கங்களின் தேவைக்கு ஈடுகொடுத்து ஆரோக்யமாக உயிர்வாழ வேண்டியற்றை பயிராகும்படியாக இயற்கையாகவே இறைவன் படைத்துள்ளான்.
மாறும் வாழ்வியல் ஆதாரங்களும் உலகமயமாக்கப்படும் சந்தையும், அதன் பொருட்களும், ஊடகங்களின் ஊடுருவலும் உணவுப் பழக்கத்தையும் உணவுகளின் மாறுதலையும் மக்கள் மத்தியில் புகுத்தி பன்னாட்டு நிறுவனங்கள் ஆதாயம் தேடிக்கொள்கின்றது. அதனால் வரும் தாக்கத்தை அறியமுடியாத சாதாரண மனிதன் பலவகையிலும் பாதிக்கப் படுகிறான்.
உணவருந்தும்போது பேசக்கூடாது, உணவைப் பார்த்து உண்ணவேண்டும், உண்ணும்போது இடையிடையே நீர் அருந்தக் கூடாது என்று நம்மெலோர்கும் பொதுவாக கடைபிடிக்க பெரியோர்களால் சொல்லப்பட்டது.
அது மட்டுமல்ல உணவின் செரிமானத்திற்கான கட்டளை சமிக்கை நாம் கண்ணால் பார்த்து விரல்களால் தொட்டு உணரும்போதே வயிற்றிக்கு மூளையால் அனுப்பட்டுவிடுகிறது மேலும் நாவால் ருசித்து உமிழ்நீரில் கரைத்து வயிற்றில் இறங்கும்போது முக்கால்வாசி செரிமானம் நடந்துவிடுகிறது. இதுவே ஆரோக்யத்தின் அடித்தளம்.
பருவகாலங்களுக்கு தக்கபடி விளையும் காய் கனிகளும் பயிர்களும் மனிதனின் வளர்சிக்கும் ஆரோக்க்யத்திற்கும் பயனளிப்பவையாகவே இயற்கை தருகிறது.
இப்போது காலைச்சிற்றுண்டி கூட்டமும், வேலைநேர மதிய உணவும் அழகுபடுத்தி அடுக்கிவைக்கபட்டதை தட்டில் அள்ளிப்போட்டு கையில் ஏந்தியபடி ஏதேதோ பேசியபடி கரண்டியால் அள்ளிப்போட்டு மெல்லாமலே விழுங்குகிறோம், நோய்களில் விழுகிறோம்.
நம் பாட்டனுக்கு இருந்த ஆரோக்யமும் பலமும் நம் தந்தையர்க்கு இருக்கவில்லை. இப்போது நமக்கு இருப்பது நம் பிள்ளைகளுக்கு இருக்குமா ? சந்தேகம் தான்.
எண்ண ஓட்டம் ....!
தொடரலாம்.
No comments:
Post a Comment