Wednesday, March 1, 2017

திரைச்சீலையைகளைக் காதலிக்கும் பாமரக் காதலர்கள்.! # நிஷாமன்சூர்

பெண்ணுடல் என்பது ஆணின் பார்வையில் வேறாகவும் பெண்ணின் பார்வையில் வேறாகவும் இருக்கிறது.
ஒரு ஆணால் அது அறியவே முடியாத புதிராகவும் அல்லது கற்பிதங்களின் பூடகவெளியில் மிகைப்படுத்தப்பட்ட போதையாகவும் தெரிவதன் காரணமாக அவன் பெண்ணுடலையே சிந்தனையாலும் செயல்களாலும் சுற்றிச்சுற்றி வருகிறான்.எல்லாக் கட்டத்திலும் தன்னை வெறும் உடலாக மட்டுமே அணுகும் ஆணின் பாமரத்தனத்தால் கடும் மன உளைச்சலையும் வேதனையையும் உணர்கிறாள் பெண்.



வாழ்வின் அந்திமகாலம்வரை உடலைக் கடந்து செல்லமுடியாமல் அங்கேயே தேங்கிவிடும் பாவப்பட்ட ஆத்மாக்களால் நிரம்பி வழிகிறது போதாமைகளின் நகரம்.

ஞானம் மட்டுமே சகல திரைகளையும் அகற்றக்கூடியது.
மலத்தின்/கழிவுகளின் மீதான அறுவருப்பு களையப்படும்போதுதான் ஒரு மனிதன் உடலை ஒரு  திரையென்று உணரும் ஞானத்தின் வாசலைஅணுகவே செய்கிறான்.அதன்பிறகு செல்லவேண்டிய தூரத்தைக் கண்டு மலைத்து நிற்கும்போதே மரணித்தும் விடுகிறான்..!!

#உடலைத்தாண்டி உள்ளம் காணாதவன்
கடந்துசென்று கடவுளைக் காண்பனோ.???

நிஷாமன்சூர்

No comments: