Friday, November 11, 2016
புதிய ரூபாய் நோட்டுகளில் இந்தித் திணிப்பு இருக்கிறது.
Shahjahan R
புதிய ரூபாய் நோட்டுகளில் இந்தித் திணிப்பு இருக்கிறது. தேவநாகரி வரி வடிவ எண்களில் ரூபாயின் மதிப்பு தரப்பட்டுள்ளது.
இதைப்பற்றி எழுதலாம் என்று ஏற்கெனவே நினைத்தேன். ஆனாலும் வேண்டாம் என்று தவிர்த்து விட்டேன். நேற்று ஹன்சா கேட்டிருந்தார். இன்று பி.ஏ. கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். :)
இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழி இந்தி. பயன்படுத்த வேண்டிய எண் முறை - சர்வதேச வடிவிலான எண்வடிவம் என்று அரசமைப்புச் சட்டத்தின் 343ஆவது பிரிவு வரையறுத்துள்ளது.
The form of numerals to be used for the official
purposes of the Union shall be the international form of
Indian numerals.
அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் பல இருக்கும்போது, ஒவ்வொரு மொழிக்கும் தனி எண்கள் இருக்கும்போது, ஒரு மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் தருவது அநீதி.
அதான் அராபிக் நியூமரல்ஸ் இருக்கில்லே, இதுவும் இருந்துட்டுப் போகட்டும்னு சொன்னீங்கன்னா... அதான் அராபிக் நியூமரல்ஸ் இருக்கில்லே? பின்னே இது எதுக்கு?
இந்தியா முழுவதும் புரிந்து கொள்ளப்படுவது சர்வதேச எண் முறை - அராபிக் நியூமரல்ஸ்தான்.
இந்திதான் அதிகம் பேசப்படுகிற மொழி அப்படீன்னு கேனத்தனமான விவாதம் யாராச்சும் எடுத்துட்டு வந்தீங்கன்னா, பழைய பதிவை எல்லாம் எடுத்து விட்டுருவேன், ஆமா.
ஆனா ஒரு விஷயம் — தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்குக்கு தனி எண்முறை இருக்கிறது மட்டுமில்லை. வடக்கே பஞ்சாபி, ஒடியா, வங்காளி, குஜராத்தி, லேப்சா ஆகிய மொழிகளுக்கும் வித்தியாசமான எண் வடிவம் இருக்கு.
அது போக, இந்த அரசு இந்தி தெரியாத மக்களை எதுக்காக குழப்பணும். இந்தி தெரியாதவனுக்கு, 500 ரூபாய் நோட்டுல இந்தப்பக்கம் 500 - அந்தப்பக்கம் 400 ஏன் போட்டிருக்காங்கன்னுதான் நினைப்பான்.
இதுதான் அந்த எண்கள் - १ २ ३ ४ ५ ६ ७ ८ ९
9 மாதிரி இருக்கிறது 1.
8 மாதிரி இருக்கிறது 4
4 மாதிரி இருக்கிறது 5
திருப்பிப்போட்ட 3 மாதிரி இருப்பது 6
6 மாதிரி தெரியறது 7
தலைகீழ் 7 மாதிரி இருப்பது 8
நமக்குத் தேவைதானா?!
ரெடி இஷ்டாட். :)
Shahjahan R
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment