"பாய் தம்பி எலுமிச்சம்பழம் வேணுமாய்யா" என்ற ஏக்கமான குரலை கேட்டவுடன் அருகிலேயே அமர்ந்து விட்டேன்,
ஏன் பாட்டி இன்னமும் வியாபாரம் முடியலயா?
"இல்லய்யா. நாங்கலாம் அன்னன்னைக்கு காலைல கடனுக்கு வாங்கி கடை போடுவோம். ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் விக்கும். கடனும் வட்டியும் கொடுத்துட்டு வீட்டுக்கு அரிசி பருப்பு வாங்கிக்குவோம். இப்பலாம் வாங்கனது எதுவுமே விக்க மாட்டேங்குது. யாரும் இங்க வர மாட்றாங்க. என் வயசுக்கு வீட்டு வேலைலாம் செய்ய முடியாததால சாக்குல கடை போட்ருக்கேன். " என கூறி முடிக்கும் முன்பே கண்கள் கலங்கியது
எனக்கும் அம் மூதாட்டிக்கும்
"பாட்டி என்கிட்ட 120 ரூபாதான் இருக்கு. இதுக்கு என்ன தர்வீங்களோ தாங்க. மற்றத விக்க இறைவன் உதவி செய்வான்னு சொல்லிட்டு கொஞ்சத்த வாங்கிட்டு வந்துட்டேன். கோணிப்பையில் கூறு போட்டு வைத்திருக்கும் அக்கடையை கடக்கும்போது ஆயிரமாயிரம் எண்ணங்கள் மனதை கசக்கியது,
அடுத்த ஒரு வாரத்திற்கு எலுமிச்சை சோறு ஆக்கியோ, அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கொடுத்தோ அல்லது சாறு பிழிந்தோ இப்பழங்களை நாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
இன்றைய தினத்திற்கு அம் மூதாட்டியின் வீட்டில் அடுப்பெறியனும் என்பதே என் பிரார்த்தனை!
இது போன்றவர்களின் மொத்த சாபத்தையும் குத்தகைக்கு எடுத்திருப்பவர்களை நினைத்தால்தான் மனம் வலிக்கிறது.
-உங்களில் ஒருவன் உஸ்மான்
No comments:
Post a Comment