Sunday, November 6, 2016

படித் தேன் ருசித் தேன்


"சிரித்துக் கொண்டே தீவினை புரிபவன்
பின்னாளில், அழுது கொண்டே தீவினைகளை
அநுபவிக்க நேரிடும்"

கலிகாலத்தில் இப்படித்தான் நிகழும் என்று உங்கள் வேதங்கள் சொல்லவில்லையா?..

மைசூர் மன்னன் திப்பு சுல்தானின் பதிலை கேட்டு மெய் சிலிர்த்து போனார் சிருங்கேரி மடத்தின் சங்கராச்சியார் சுவாமிகள்.

மராட்டிய படைவீரர்கள் மடத்தில் நிகழ்த்திய அத்து மீறல்களையும், கோவில்களில் நடத்திய வன்முறை சம்பவங்களையும் மன்னரிடம் முறையிட்ட சுவாமிகளிடம் தான் தக்க நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் மன்னர் திப்பு.

சங்கராச்சாரியார் அறிவுரையின் பேரில் எண்ணற்ற கோவில்களை புணர் நிர்மாணம் செய்வித்தார் மன்னர் திப்பு.

மன்னர் திப்புவின் திவானாக பணிபுரிந்தவர் நமது கோயம்புத்தூரை சார்ந்த கிருஷ்ணாச் சார்யா பூர்ணய்யா அவர்கள்.சுத்த பிராமணர்.
திப்புவின் தந்தை ஹைதர் அலியின் நெருங்கிய நண்பர்.அவரது அக்கால ராக்கட்
ஸ்பெசலிஸ்டும் பூர்ணய்யா தான்.
திப்பு குடும்பத்தில் ஒருவராகவே திகழ்ந்தார் பூர்ணய்யா.

1782 ம் ஆண்டு...
சித்தூர் அருகில் ஹைதர் அலி இறந்து
விட்டார்.இளைஞரான திப்பு மலபார் அருகில்
போர்க்களத்தில் போரிட்டுக் கொண்டிருந்தார்.
மன்னர் இறந்த செய்தி வெளியே தெரிந்தால் கலவரம் வெடிக்கலாம்... எதிரிகள் நாட்டை சூழலாம் என்ற ஐயம் எழுந்ததால் பூர்னய்யா மன்னர் சாவை வெளியே தெரியாமல் மூடி மறைத்தார்.ஹைதரின் உடலை ரகசிய அறையில் கிடத்தி கெடாமல் பதனிடவும் வழி செய்தார்.அரசு நிர்வாகம் தடம்புரளாமல் செம்மையாக நடக்க துணை புரிந்தார்.

ரகசிய செய்தி அனுப்பி திப்புவை வரவழைத்து மன்னராக முடி சூடவும் வழி வகுத்தார்.பூர்னய்யாவின் சாதுரியமும், சாமர்த்தியமுமே திப்பு எளிதில் ஆட்சியை கைபற்ற வழிவகுத்தது என்று சொல்லலாம்.

திப்புவின் அமைச்சரவையும் பூர்ணய்யாவின் அறிவுரையின் பேரில் பிராமணர்களாலேயே நிரம்பி வழிந்தது.

திப்புவின் நிதியமைச்சர் கருஷணா ராவ்.
போலீஸ் மந்திரி சாமையா அய்யங்கார்.
ரங்கா அய்யங்கார் சாமையாவின் சகோதரர்.
அவரும் ஒரு அமைச்சர் தான்.
மூல் சந்தும் சுஜன் ராயும் டெல்லி முகல் அரசில் திப்பு சுல்தானின் ஸ்பெசல்
ரிப்ரசென்டேடிவ் ஆக பணி புரிந்தவர் ஆவர்.
இவ்வாறு அரசவை பட்டியல் நீழ்கிறது.

இந்தியாவில் கால் ஊன்றிய ஈஸ்ட் இந்தியா கம்பெனியையும், ஆங்கிலேயர்களையும் பகிரங்கமாக எதிர்த்தவன் திப்பு தான்.

இதற்காக அவன் பிரான்சின் நெப்போலியனிடம் உதவி கேட்டான். இந்தியாவிலிருந்து
ஆங்கிலேயர்களை விரட்டியடிக்க தான் உதவுதாக நெப்போலியன் வாக்குறுதியும் அளித்தான்.

ஒரு பெரும்படை ஒன்றை இதற்காக அனுப்பி வைப்பதாக உறுதியளித்தான.ஆனால் அது அவனால் முடியாமல் போயிற்று.திப்புவின் ஆசையும் கலைந்தது.

1789 - ம் ஆண்டு...
திப்பு சாகும் தருவாயில் தன் மூத்த மகனை
தனது திவான் பூர்ணய்யாவின் பாதுகாப்பில் ஒப்படைத்து விட்டு கண்ணை மூடினான்.
திவான் கிருஷ்ணாச்சர்யா பூர்ணய்யா மீது அத்துணை நம்பிக்கை திப்புவுக்கு இருந்தது.
Vavar F Habibullah

No comments: