Saturday, November 12, 2016

வட நாடு வாழ்கிறது தென்னாடு தேய்கிறது


Vavar F Habibullah
நேற்று ஓரு பழுத்த திமுக அரசியல்வாதியை சந்தித்தேன். சமீபத்திய நாட்டு நடப்பை பற்றி அதிகமாக பேசினார். இன்றும் அண்ணா
சொன்னது தான் சரி என்று வாதாடினார்.
முதலாளிகளின் பிறப்பிடமே குஜராத்தும் ராஜஸ்தானும் தான். ஈஸட் இந்தியா
கம்பெனிக்காரன் வளர்ச்சிக்கு, முதலில் தடை விதித்ததே முகலாய மன்னன் அவுரங்கசீப் தான். இது பொறுக்காம தான் அவனை
பந்தாடினான் வெள்ளக்காரன்.
டாடா, பிர்லா, கோயங்காவை எல்லாம் வளர்த்து விட்டதே ஈ்ஸ்ட் இண்டியா
கம்பெனிக்காரன் தானே.
சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் காரனும் அவங்க வளரத்தான் துணை செஞ்சாங்க.
ஏமன் நாட்டிலே பெட்ரோல் பங்கிலே வேலை பார்த்த அம்பானியை குபேரனாக்கியதும் அவங்க தான்.பண முதலைகளை வளர
விட்டது எல்லாம் காங்கிரஸ்காரன் தான் சார்.

அப்பவே, காங்கிரஸ் ஆட்சியை "டாட்டா பிர்லா கூட்டாளி" ன்னு தான் நாங்களே சொல்வோம்.
நம்ம காமராஜுக்கு பிறகு எல்லா பயலுமே டெல்லிக்கு கைதூக்கிக.. தானே.
அப்பவெல்லாம் அண்ணா டெல்லி ராஜ்பசபாவிலே பேசினா அந்த நேருவே உக்காந்து கேப்பாறு. இப்ப நம்ம எம்பிங்க..
எங்க சார் நல்ல வார்த்தை பேசுறானுங்க....
இப்ப திராவிடன்னு சொன்னா நம்ம பக்கத்து ஊரு கேரளாக்காரன் 'யாரு பாண்டியா'ன்னு ரெம்ப இளக்காரமா கேக்கிறான்.
பாண்டி - ன்னு சொன்னா, அவன் வேலையும்
தர மாட்டான், குடியிருக்க வீடும் தர மாட்டான். தமிழன்னு சொன்னா கேரளாக்காரனே மதிக்க மாட்டேன்..கிறான். பின்ன எப்படி சார் டெல்லிக்காரன் மதிப்பான்.இது அவனுகளுக்கு நல்லா தெரிஞ்சு போச்சு...
இப்ப கூட பணத்தட்டுப்பாடு வட நாட்டிலே எங்கேயும் பெரிசா எதிரொலிக்லேங்க...
தென்னிந்தியா தான் பெரிசா பாதிச்சிருக்குங்க.
குஜராத் காரனைத் தான் நம்ம சேட் - சேட் ன்னு தலைல வச்சு கும்பிடுவோம்.தமிழ் நாட்டிலே, ஏன் இந்தியாவிலேயே எல்லா பணக்கார குடும்பத்துக்கும் பணம் சப்ளை பண்றதே இந்த பசங்கத் தான் சார்.
நம்ம சேட் னு சொல்வோம். சிந்தி, பனியான்னு நார்த்லே சொல்வானுக.தங்கம், ஷேர் மார்க்கட் எல்லாம் இவனுக கையிலே தான். இந்திய பொருளாதாரமே இவனுக கையிலே தான் இருக்கு. எவன் ஆட்சி செய்தாலும் பைனான்ஸை இவனுக தான் அப்பவும் இப்பவும் கண்ட்ரோல் பண்ரா னுக. எல்லா பாங்கும் எடி.எம்.மும் இவனுக கண்ட்ரோலத் தான் இருக்கு. எடி.எம். மெஷின் லே பணம் நிறப்புற ஏஜன்சி வேலையும் இவங்க கையிலே தானே இருக்கு.
அப்பப்பா... இவ்வளவு விசயம் எவ்வளவு தெளிவா சிம்பிளா புரியும்படி சொல்றாரு.
திமுக காரர்கள் அரசியல் உலகில் இன்றும் சற்று விவரம் தெரிந்தவர்களாகவே உள்ளார்கள் என்பது சந்தோசம் தரும் செய்தி தான்.


Vavar F Habibullah

No comments: