Thursday, November 24, 2016

விடியல் வேண்டும் ....!

விடியல் வேண்டும் ....!
சரித்திரம் திரும்பட்டும்
சாதிக் கொடுமைகள் திரும்பவே கூடாது
நாகரீகம் முன்னேறலாம்
பின்னேறி பிரிவினைக்கு வழிவகுக்கலாமோ
உயர்வு தாழ்வில்லை பிறப்பில்
ஏனிந்த கொடுமை சாதீயில்
வாக்குகள் பெற்றதால்
வானரங்கள் வானைத்தொட்டிட முடியுமோ

மக்களுக்கு மதிப்பில்லை
மந்தைவாழ் மாக்களே கோக்களாமோ
கொள்கையில் வலுவில்லை
வலுவில்லா மக்களோ அவலத்தில்
அல்லல்படுத்தும் சிறுமையினர்
அஹங்காரம் அழித்திட வேண்டாமோ
பிரிவினைகள் வேண்டாவாம்
வேற்றுமையில் ஒற்றுமை வேண்டிடுவோம்
அம்மணமாய் பிறந்தோம்
அம்மணமாய் உணருதல் அறமாமோ
பையில் பணமிருந்தும்
பயன்பாட்டுக்கு உதவாதது பிணமன்றோ ?
விடியல் வேண்டும்
விடியட்டும் எல்லார்க்கும் விமோசனமாய் !

ராஜா வாவுபிள்ளை


No comments: