ராஜா வாவுபிள்ளை
இளமையின் வலிஇங்கே விளைகிறது
*** பகலிரவு பார்க்காமல் உழைக்கிறது
பலனை எண்ணியே விழைகிறது
*** நேரம்காலம் இல்லாமல் விரைகிறது
சுயநலம் மறந்தே இறங்கியது
*** சுமைகளை தனியாக சுமக்கிறது
மனைநலம் ஒன்றே குறியானது
*** தன்னலம் தவிர்த்தே தனித்தது
விரும்பியே இன்னலை கையேற்றது
*** வியர்வையை விருப்பாய் சிந்தியது
விரும்பியோர் வாழ்ந்திட வருத்தியது
*** தன்விருப்பு தவிர்த்தே வாழ்கிறது
சொந்தபந்தம் விட்டுவிட்டு தனித்தது
*** தனக்கென்று எதையுமே விரும்பாதது
கிடைத்ததை சுற்றத்திற்கு பகிர்ந்தது
*** தூரநின்றே பார்த்து பரவசத்தது
ஓய்வைத் துரத்திவிட்டு சென்றது
*** ஓயாமல் ஓடியாடி உழைக்குது
ஓய்ந்துவிட்டால் துரத்திவிடும் உலகமது
*** அறிந்திருந்தும் இளசுகள் அதையேனாடுது.
ராஜா வாவுபிள்ளை
No comments:
Post a Comment