Tuesday, September 27, 2016

மனித முகம்

Vavar F Habibullah

மனிதன் தன் வேஷத்தை கலைத்து விட்டான்.
வேதங்கள்,இதிகாசங்கள், புராணங்கள், நீதி நூல்கள் ஆன்றோர் சான்றோர் சொற்கள் கலி காலத்தில் பயனற்று போய் விட்டன.
நீதி, நேர்மை,நியாயம் என்பதெல்லாம் சொல் அலங்காரம் ஆகி விட்டது.செயற்கை பூக்களில் வாசனைத் திரவியங்கள் பூசப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
மனித மனங்கள் இறுகி விட்டன.
அதை முகங்கள் பிரதிபலிக்கின்றன.
புன்சிரிப்பும் பொல்லாங்கு பேசுகிறது.
உண்மைகள் ஊமைகளாகி விட்டன.
பொய், புரட்டு, திருட்டு, குடி, கற்பழிப்பு, கொலை,
வன்முறை எல்லாம் சடுகுடு விளையாட்டுகளாக அங்கீகரிக்கப்பட்டு வெகு நாட்களாகி விட்டன.
மனித முகங்களில் இருள் சூழ்ந்து விட்டதால் அருள் படர்வது தடை செய்யப்பட்டு விட்டது.

பேஸ்புக்கில் - எல்லாம் நல்ல செய்திகளையே தினந்தோறும் தாங்கி வருகின்றன.நல்லவற் றையே நண்பர்கள் அதிகம் பகர்கிறார்கள்.
எல்லோரும் ஒருவருக்கொருவர் நல்ல ஆலோசகராகவே உள்ளனர்.நல்ல கருத்துக் களால் முகநூல் கூட நறுமனம் கொள்கிறது.
என்றாலும்.....
மனித இனம் ஏன் இன்றும் தன்னையொத்த மனித இனத்தை அழிக்க துணிகிறது.
பிற மனித உயிர்களை அழித்தொழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறது.
மகான்கள் எழுதி வைத்ததெல்லாம் பயன் தராமல் போனது ஏன்?
நல்ல நூல்களை படிப்பதனால் நல்ல செயல்கள் நிகழாத போது அதை மீண்டும் படிப்பதனால் மனித குலத்துக்கு என்ன நண்மை வந்து விடப் போகிறது.
மனித இனம் அகிம்சை பாதைகளின் கதவுகளை மூடி வெகு நாட்கள் ஆகி விட்டது.

Vavar F Habibullah

No comments: