ராஜா வாவுபிள்ளை
முக்கனிகளில் முக்காலமும் உலகெங்கிலும் கைக்கு எட்டிய தூரத்தில் கிடைத்து எல்லோராலும் விரும்பி உண்ணப்படுவது வாழைப்பழம்.
வாழைப்பழங்களில் பலவகைகள் கிடைகின்றன. மிகஅதிக வகைகள் எங்கள் மாவட்டமான கன்னியாகுமாரி மாவட்டத்தில் விளைகிறது. அங்கிருந்து பல ஊர்களுக்கும் விற்பனைக்காக கொண்டுசெல்லப்படுகிறது.
அங்கு விளையும் பலவகைகளில் 'மட்டி' என்னும் ஒருவகை வாழையை வாழைகள் ராணி என்று நான் சொல்லுவேன், அதன் ருசியும் மணமும் அலாதியானது.
பழைய ரஸ்யாவின் அதிபர் குருசேவ் இந்தியா வந்திருந்தபோது எங்கூரு மாட்டிப் பழத்தை உண்டுவிட்டு அதன் ருசியில் மயங்கி அதன் அடிமையாகி விட்டாராம். பின்னர் அவருக்காகவே மட்டிப்பழம் ரஸ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறதாம்.
நானும் அதன் ருசிக்கு அடிமைதான். அதனால் மட்டிவாழை மரக்கன்றை உகாண்டாவுக்கு ஏற்றுமதி செய்து எனது வீட்டுத் தோட்டத்தில் வைத்து வளர்த்து வருகிறேன். தட்பவெட்ப நிலைகள் ஏறத்தாழ ஒரேமாதிரியாக உகாண்டாவிலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இருப்பதால் உகாண்டாவில் மட்டி நன்றாகவே வளருகிறது.
அவ்வப்போது அது குலை தள்ளும். அதன் மணம் மனதை அள்ளும். அதன் ருசி நினைவில் நிற்கும்.
நேற்று என்வீட்டு தோட்டத்தில் அறுவடை செய்த மட்டிவாழைக் குலைகளை உங்கள் மேலான பார்வைக்கு வைக்கிறேன்.
No comments:
Post a Comment