Wednesday, September 21, 2016
தம்பி வா! தலைமை ஏற்க வா!!
Vavar F Habibullah
ஐ.எ.எஸ், ஐ.பி.எஸ் போன்று அரசியல்வாதி அல்லது அரசியல் தலைவர் ஆவதற்கு தகுதி நிர்ணயம் செய்ய இயலுமா?
அவ்வாறு தகுதி தேர்வு வைத்தால் நம் தலைவர்கள் தேறுவார் களா!
ஒரு பயிற்சி அரங்கத்தில் ஒரு மாணவன் என்னிடம் கேட்ட கேள்வித்தான் இது.
'உடோபியா' என்ற சர்வ சுதந்திரம் வாய்ந்த ஒரு நாட்டை உருவாக்குவது பற்றி, தாமஸ் மூர் ஒரு நூலில் எழுதி வைத்தான்.அதற்கு செயல்வடிவம் கொடுக்க எந்த அரசியல்வாதி யும் தயாராக இல்லை.
மனிதன் உடலா இல்லை மனமா? அரசனும் ஆண்டியும் மனரீதியாக வேறுபடலாம். ஆனால் உடல் பலத்தில் அவ்வாறு இல்லை.
சில நேரங்களில் அரசர்களை விட ஆண்டிகள் உடல் பலத்துடன் விளங்குகிறார்கள்.
வீரனின் இலக்கணம் என்ன?
கோழைகள் கூட அரசியல் உலகில் கதாநாயகர்களாக உலா வருவது எப்படி?
ஆட்சி பலமா! அதிகார பலமா!
பண பலமா அல்லது
அடியாட்கள் பலமா?
அலெக்சாண்டர் மாவீரன். சீசரும்,ஆன்டனியும், நெப்போலியனும் உள்ள படியே வீரர்கள்.பல போர்க்களங்களை கண்டவர்கள்.தைமூர் ஒரு மாவீரன் தான்.
அவர்கள் வரிசையில்....
ஹிட்லரை,முசோலினியை,ஜோசப் ஸ்டாலினை,ரூஸ்வெல்டை, சர்ச்சிலை சேர்க்க முடியுமா என்றால் நிச்சயம் இல்லை என்பது தான் பதில்.
ஏனென்றால் இவர்கள் எவருமே சுத்த வீரர்கள் இல்லை.பேச்சு அல்லது எழுத்துக்கலையில் வல்லமை பெற்ற அரசியல்வாதிகள் மட்டுமே.
வாய் பேச்சில் வல்லவராக இருந்தால் அதுவே வீரம் என்று போற்றப்படும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பது தான் உண்மை.வாள் வீச்சை விட வீர வசனங்களே அதிக கைதட்டல் பெற உதவுகின்றன.வசனம் பேசியவர்களும் பேசுபவர்களுமே இன்றைய அரசியல் கதாநாயகர்களாக உலா வருகிறார்கள்.
வீர வசனங்கள் பேசினால் அரசியலில் தலைவர் அந்தஸ்தை எளிதில் பெற இயலுமா?
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்!
இந்த படை போதுமா!
இன்னும் கொஞ்சம்
வேண்டுமா!
வார்த்தைகளை உரசி, வசனங்களை கொளுத்தி வாணவேடிக்கை காட்டுவதில்
நம் தலைவர்களை விஞ்ச எவராலும் இயலாது.
கவி சக்கரவர்த்திகளால்,கவியரசர்களால்,
மெல்லிசை மன்னர்களால் அரசியல் உலகில் கோலோச்ச முடியாது.நடிகவேளும்,நடிகர் திலகங்களும் கூட அரசியல் வானில் ஜொலிக்க முடியவில்லை.
ஆனால் வரும் காலங்களில், பேச்சாற்றல் நல்ல அரசியல் தலைவனாக வளர துணை புரியலாம்.
அரசியலில் வளர விரும்பும் இளைய தலை முறை பேச்சாற்றல், எழுத்தாற்றல் இவற்றில் அதிகம் கவனம் செலுத்தினால் நல்ல அரசியல் தலைவனாக உருவாக வாய்ப்புகள் அதிகம் ஏற்படலாம்.
தமிழக அரசியல் களத்தில் இனி அதிக வேலை வாய்ப்புகள் உருவாக வழி பிறக்கலாம்.
Vavar F Habibullah
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment