மழைத்துளியாய்
வற்றாத ஆசைக் கடலில்
சங்கமிக்கிறான்
எதிர்த்தாலும் எம்பினாலும் எழுந்து
வரமுடியாமல்
ஆர்ப்பரித்த அலைகளில் அடங்கிப்
போகிறான்
ஓடும் வாழிவில் பொருள்
சேர்க்கிறான்
பார்ப்பது எல்லாம் பணமாக
பார்க்கிறான்
ஓட்டும் உறவும் இல்லாமல்
வாழ்கிறான்
ஒருநாள் ஒன்றுமே இல்லாமல்
மரிக்கிறான்
ஆசைகளை துறந்தவனையோ இல்லாதான்
இழிந்தவனென
இகழ்ந்தே பழித்து இரக்கமின்றி
ஒதுக்கின்றனர்
படைத்தவனை பணத்தால் அளந்து
வியக்கிறான்
இல்லாதவனை சமூக சாபமென
ஒதுக்குகிறான்
வேடிக்கைப் பார்பதையே வாடிக்கையாய்
கொண்டவனோ
பண்படாமல் புண்படுத்தவே செய்கிறான்
மனிதன் .....!
No comments:
Post a Comment