Monday, September 5, 2016

அண்ணன் முகம்மது அலி .../ Abu Haashima

by Abu Haashima

அண்ணன் முகமதலி அவர்களின் அன்பு நதியைப்போல ஜீவனுள்ளது.
நாம் அவரது பதிவை
ஷேர் செய்கிறோமா
லைக்கிடுகிறோமா
கமென்ட் பண்ணுகிறோமா 
என்றெல்லாம் பார்ப்பதில்லை.
நம்முடைய பதிவுகள் அவருக்குப் பிடித்திருந்தால் 
உடனே தனது வலைப் பக்கத்தில் பகிர்வார்.
பிரதிபலனை எதிர்பார்க்காமல் 
" என் கடன் பணி செய்து கிடப்பதே " என செயலால் பேசுவார்.
நீடூரின் நெடும்புகழைச் சொல்ல 
ஒருபாடு ஆட்கள் உண்டு.
முகமதலி அண்ணன்
நீடூரில் பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர்.
பள்ளிவாசல் கட்டுவது போன்ற புண்ணியங்களை அள்ளிக் கொண்டவர்கள் இவர்களின் பெற்றோர்.

நீடூர் சயீது அண்ணன் 
ஓரு வழக்கறிஞர்.
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவர்.
நல்ல தமிழ் எழுத்தாளர்களை இனம்கண்டு பாராட்டி 
" தமிழ்மாமணி " விருது தந்து 
கவுரவித்த விசால மனத்தவர்.
சயீது அண்ணன் அன்பால் நானும் " தமிழ் மாமணி " ஆனேன்.
அவரது இளவல் நம் முகமதலி அண்ணன்.
அண்ணனைப்போல் தம்பியும் வழக்கறிஞர்.
திராவிட முன்னேற்றக் கழக 
தலைவர்கள் பலரின் வகுப்புத் தோழர்.
அவர்களின் நண்பர்.
உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று பல்வேறு கலாச்சாரங்களை நேரில் கண்டு வந்தவர்.
உயர்ந்த சிந்தனைகளின் ஊற்றாக திகழ்பவர்.
நிறைகுடம் ததும்பாது என்பார்களே ...
அதற்கு எடுத்துக்காட்டு 
முகமதலி அண்ணன்.
சுடு சொற்களோ 
கடுமொழிகளோ 
கூறத்தெரியாத பண்பாளர்.
நல்லவைகளை மட்டுமே 
உள்வாங்கத் தெரிந்த உத்தமர்.
முகமதலி அண்ணன் நமக்கெல்லாம் நண்பராக வாய்த்தது நட்புக்கு பெருமை !
அண்ணன் அவர்கள் 
நீண்ட ஆயுளும் 
நோய் நொடியில்லாத வாழ்வும் பெற்று 
பல்லாண்டு சிறப்புற்று வாழ 
வல்லோனாம் இறையை 

வேண்டுகிறேன்.







Abu Haashima

பாடல் பாடியவர் தேனிசைத் தென்றல்தேரிழ்ந்தூர் தாஜுதீன் அவர்கள் / 


-------------------------------------------------------------------------------------------------------------------
Abu Haashima அண்ணன் / முகம்மது அலி
(இணைத்த   படம் )



No comments: